#JNUTerrorAttack நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் சமூகவிரோத கும்பல் நுழைந்து தாக்கியிருப்பதும், அதை காவல்துறை வேடிக்கை பார்த்திருப்பதும் வேதனை தருகின்றன. ஏ.பி.வி.பி அமைப்பு முதலில் குற்றச்சாட்டை இடதுசாரிகள் மீது போட்டது, இப்போது குட்டு வெளியாகிவிட்டது
பல்கலைக் கழகங்கள் படிக்கும் இடம் மட்டுமல்ல. ஜனநாயக சிந்தனைகளை வளர்க்கும் இடமாகும். அத்தகைய வளாகங்களை சிதைப்பது ஜனநாயக இந்தியாவுக்கு கேடாக முடியும். மாற்றுக் கருத்துக்களை நசுக்க முயல்வதை விடவும் கோழைத்தனம் வேறெதுவும் இல்லை. இந்திய மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்.
இந்த மோசமான நிகழ்வுக்கு காரணமானவர்களும், தடுக்காமல் அனுமதித்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும். ஜே.என்.யூவை பாதுகாப்பது நம் கடமை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 22 வயது தலித் பெண், உயர் சாதி ஆண்களால் கொடூரமாக வல்லுறவு-கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம், அவசரகதியில் உடல் எரிப்பு, குடும்பத்தினர் உரிமை மறுப்பு, 144 தடை என அடுத்தடுத்து
பெரும் அநீதிகளை மேற்கொள்வது... ஜனநாயகத்தை கொன்று எரிக்கும் செயல்.
இதுவல்லாமல், குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக 'நால்வர்ண பரிஷத்' என்ற அமைப்பு போராட்டக் களத்திற்கு வந்துள்ளது.
உ.பி.யில் எம்.எல்.ஏ தொடர்புடைய வல்லுறவு, கொலை தொடங்கி, நீதிக்காக போராடிய பெண் எரிக்கப்பட்டது வரை பல மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. நாமும் தொடர்ந்து கண்டிக்கிறோம்.
நெல்லை மாவட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சாதி வெறி சக்திகள், மிகுந்த வன்மத்துடன் செய்திருக்கும் படுகொலை இது.
இக்கொலையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய வழக்கு பதியவும், கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடந்தது. இன்று தோழரின் உடலுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றுள்ளது.
தோழர் அசோக் 24 வயதே நிறைந்தவர். மக்களுக்கான போராட்டங்களில் முன்நின்று இயங்கியவர். அவருடைய இழப்பு, நம் சமூகத்தில் மனித நேயத்தை வளர்க்க விரும்பும் சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பாகும்.
'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப் படைப்பு.
இது முன் வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் நம் முன் பூதம் போல் தோன்றி, உறக்கத்தை கெடுக்கும். நம் மனசாட்சியை உலுக்கும். சொல்லத் தயங்குகிற, சொல்லியே ஆக வேண்டிய இந்த மண்ணின் கதையை மிக நேர்மையாக, துணிவாகப் பேசுகிறான் இந்தப் பரியன்.
கருப்பியில் தொடங்கி கதை நாயகனின் அப்பாவாக வருகிறவர் வரை ஒவ்வொருவரும் நமது உயிர்கள். படம் முடிந்த பிறகு தண்டவாளத்தில் கிடக்கும் கருப்பியாகவும் மேசையில் படபடக்கும் மல்லிகையாகவும் மனம் மாறிவிடும். முதல் படைப்பிலேயே இந்த அற்புதத்தை நிகழ்த்திய தம்பி @mari_selvarajக்கு நிறைய ப்ரியங்கள்