உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 22 வயது தலித் பெண், உயர் சாதி ஆண்களால் கொடூரமாக வல்லுறவு-கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம், அவசரகதியில் உடல் எரிப்பு, குடும்பத்தினர் உரிமை மறுப்பு, 144 தடை என அடுத்தடுத்து
பெரும் அநீதிகளை மேற்கொள்வது... ஜனநாயகத்தை கொன்று எரிக்கும் செயல்.
Dec 9, 2019 • 4 tweets • 2 min read
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' பார்த்தேன். எல்லோரும் கொண்டாட வேண்டிய படம்.
ஒடுக்கப்பட்டவர்களின் வியர்வையும் ரத்தமும் உறைந்து கிடக்கும் தமிழகத்தின் கடைக்கோடி காயலாங்கடையிலிருந்து, ஹிரோஷிமாவில் அணுகுண்டுக்குப் பலியான ஜப்பானிய சிறுமி வரை, மானுடத்துக்கான அரசியலை, அறத்தை, மனிதத்தைப் பேசும் நமக்கான சினிமா.
Jun 14, 2019 • 4 tweets • 1 min read
நெல்லை மாவட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சாதி வெறி சக்திகள், மிகுந்த வன்மத்துடன் செய்திருக்கும் படுகொலை இது.
இக்கொலையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய வழக்கு பதியவும், கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடந்தது. இன்று தோழரின் உடலுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றுள்ளது.
Sep 28, 2018 • 5 tweets • 2 min read
'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். மிக மிக முக்கியமான படம். முதல் காட்சியில் அதிரும் இதயம் கடைசி வரை அடங்கவில்லை. இந்த நிலமெங்கும் விஷம் போல் பரவியிருக்கும் சாதியத்தின் முகத்தில் மோதி மிதிக்கிறது இந்தப் படைப்பு.
இது முன் வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் நம் முன் பூதம் போல் தோன்றி, உறக்கத்தை கெடுக்கும். நம் மனசாட்சியை உலுக்கும். சொல்லத் தயங்குகிற, சொல்லியே ஆக வேண்டிய இந்த மண்ணின் கதையை மிக நேர்மையாக, துணிவாகப் பேசுகிறான் இந்தப் பரியன்.