My Authors
Read all threads
அன்று வழக்கம் போல் மாலையில் வீடு திரும்பிய பசும்பொன் தேவரிடம், அவரது காரோட்டி, விடைபெறச் சென்றார்..!
தேவர் அவர்கள், அவரை அழைத்து, அவரிடம் ஒரு தொகையை கொடுத்து,"தம்பி.!இந்த பணத்தில் நல்ல விலை உயர்ந்த புடவை ஒன்றை எடுத்துக் கொள்.. தட்டில் வைக்க சிறிது பழங்களும் வாங்கிக் கொள்..
🙏🇮🇳1
நாளை காலை சீக்கிரம் வா..! நாம் ஒருவரை பார்க்க வேண்டும். இப்போது நீ போகலாம்" என்றவாரே வீட்டினுள் சென்று விட, காரோட்டிக்கோ ஒரே குழப்பம்..!

🙏🇮🇳2
தேவரோ பிரம்மசாரி.. பிற பெண்களை மதிப்பவர்.. அவர் யாருக்கு.. அதுவும் விலையுயர்ந்த புடவை வாங்குகிறார்...? என குழம்பிய படியே கடைக்கு சென்று நல்ல விலையில் ஒரு புடவையும், சிறிது பழங்களையும் வாங்கிக் கொண்டு, மறுநாள் அதிகாலையில் தேவரை பார்க்க வந்து விட,

🙏🇮🇳3
தயாராக இருந்த தேவர் அவர்கள்,"வந்து விட்டாயா..! நல்லது..! நல்ல உயரிய புடவைதான் தேர்வு செய்துள்ளாய்..நன்று..!"எனக் கூறி காரில் ஏறிக் கொள்ள, காரும் பயணப் பட்டது.. டிரைவருக்கு மன உளைச்சல்.. யாருக்கு இந்த புடவை...? என குழம்பிய படியே காரோட்ட,

🙏🇮🇳4
ஒரு குறுகிய சந்தினை அடையாளம் காட்டி, தேவர் அவர்கள் காரை நிறுத்தி, கீழே இறங்க, டிரைவரும் இறங்கிட, ஒரு தாம்பாளத் தட்டில், அந்தப் புடவையையும், பழங்களையும் வைத்து சுமந்தபடி, அந்த குறுகலான தெருவில், பல சந்துகளை கடந்து, நடந்து சென்று, இறுதியில் ஓர் சிறிய வீட்டினுள் நுழைந்தார்கள்.🙏🇮🇳5
உள்ளே நாற்பது வயது மதிக்க தக்க ஓர் பெண்மணி...விதவை.. தேவரை கண்டதும் வணங்கி வரவேற்க, குட்டையான வாசலில் தலையை குனிந்து வீட்டினுள் தேவர் நுழைய, டிரைவர் வெளிவாசலில் நிற்க, அந்த பெண்மணியிடம் நலம் விசாரித்து பின், குடிப்பதற்கு நீர்கேட்க, அப்பெண், வீட்டின் உள்ளே சென்றதும்..

🙏🇮🇳6
தேவர் அவர்கள் தன் ஜிப்பாவின் உள் புறம் இருந்து பணத்தை எடுத்து, அந்தப் புடவையின் நடுவே உள்ளே மறைவாக வைத்த படி நிற்க, நீர் கொணர்ந்த பெண்மணியிடம் நீரை வாங்கி அருந்திய பின்,

🙏🇮🇳7
தான் கொண்டு போன அந்த புடவை, பழத் தட்டை அவரிடம் நீட்டி, அந்தப் பெண்மணியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்..!
இதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த காரோட்டி கலங்கிப் போனார்..!
மேலும் உள்ளே என்ன நடக்கிறது என கேட்க, தன் காதை கூர்மையாக்கி கொண்டார்..!

🙏🇮🇳8
உள்ளே, தேவர் அவர்கள், "அம்மா..! நான் கிளம்புகிறேன்.!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள்.. ஓடோடி வந்து உதவக் காத்திருக்கிறேன்" என கண்ணீர் மல்க கூறினார்..

🙏🇮🇳9
அந்த பெண்மணி, புன்னகையோடு,"போதும்.! நீங்கள் செய்வதே என் தேவைக்கு அதிகமானதாகவே உள்ளது.. உங்களை மறவேன்"என்று கூற, தேவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, டிரைவரை கூட திரும்பி பார்க்காது, விடுவிடுவென வேகமாக நடந்து வந்து காரில் ஏறிக் கொள்ள,

🙏🇮🇳10
டிரைவரும் காரை ஓட்டத் துவங்கினார்.. சிறிது நேரம் சென்றதும் டிரைவர், "அய்யா!
உங்களிடம் ஓர் கேள்வி.. யார் அந்த பெண்மணி..? நீங்கள் ஏன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தீர்கள்.. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு... ஐயா..!"
என்றார்..

🙏🇮🇳11
சற்று நேரம் மௌனமாக இருந்த தேவர் அவர்கள்," அவள் என் தாய்..! என் தாய்க்கும் மேலானவள்.. மணவாழ்வு கண்ட சில நாட்களிலேயே தன் இளம்வயது கணவனை இந்திய சுதந்திரத்திற்காக விட்டுக் கொடுத்தவள்..

🙏🇮🇳12
நள்ளிரவில், மணியாச்சி புகைவண்டி நிலையத்தே, வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததற்காக, வெகுண்டெழுந்து, கவர்னர் ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சி நாத ஐயரின் மனைவி அவள்..!

🙏🇮🇳13
என் தேசத்திற்காக தன்னையே கொடுத்த என் தந்தையான வாஞ்சியின் மனைவி.. எனக்கு தாயன்றோ.. அவளை வணங்குதல் தவறோ..!"என கலங்கியபடியே தேவர் பதிலுறுக்க, டிரைவரின் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது..

🙏🇮🇳14
வீர மறவர் கூட்டத்தின் ஓர் இனமானத் தலைவனையே சிறு குழந்தையென நெகிழவைத்து, அன்பால், தியாகத்தால் அடிமைப் படுத்திட்ட மாவீரன் வாஞ்சி நாதன் தியாகத்தை என்றும் மறக்கமுடியாது.

🙏🇮🇳15
இந்த நாளில் வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தேசியமாக இருக்கட்டும் என்ற தேவரின் வழியில் தேசபக்தியோடு வாழ்வோம் என உறுதி ஏற்போம்...!🙏🏻🙏🏻

பாரத் மாதாக் கீ ஜே...!

ஜெய்ஹிந்த்...!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!