60 ஆண்டு வட்டம் (அ) வியாழ வட்டத்தை உருவாக்கியோர் தமிழர். உருவாக்கிய காலம் கலிகாலத்தின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.
கலிகாலத்தின் தொடக்கம் கிமு 3102 என்பதை மனதில் கொள்க.
அதனைப் 12ஆல் பெருக்க ஆண்டுக் கணக்கின் நெருங்கிய நாட்கணக்கு தெரிந்தது. அதனைச் சரிசெய்ய பதினொரு நாட்கள் கூட்டி 365 ஆனது. அதிலும் ஒரு குறை, ¼ நாள். அதற்கு ஒரு தாண்டாண்டு (Leap) தேவைப்பட்டது.
வியாழ வட்டத்திலும் 1 ஆண்டில் 14 நாழிகை, 53 விநாழிகள் குறைவு உண்டு. அதனால், 4 ஆண்டுக்கு ஒருமுறை சுறவம் (தை) மாதத்தில் ஒரு நாள் சேர்த்தனர். 12
வியாழன், மேழ நாண்மீனில் தொடங்கி ஐந்தாவது சுற்று (ஒரு சுற்று = 12 ஆண்டுகள்) முடியும்போது மிகச்சரியாக மேழத்துடன் பொருந்தி நிற்கும்.
கிமு, கிபி என்பதைப்போல தமிழர் ஆண்டும் ஒரு தொடர் ஆண்டு முறையிலானது.
தமிழர் மரபு அறிவுசால் மரபு. 60 ஆண்டுச் சுழற்சியில் புவியின் சுற்றுப்பாதை நாள்கள் தமிழ் நாள்காட்டி முறையில் முழுமைப்படுத்தப்படுகிறது.
இத்தகைய தமிழ் மரபில் அமைந்ததுவே கலி ஊழிக் காலத்துத் தோன்றிய வியாழ வட்டக் கணக்கு. கலிஊழியைத் தூற்றிய வடவர் 60 ஆண்டு வியாழ வட்டத்தை எடுத்துக்கொள்ளத் தயங்கவில்லை.
அப் பெயர்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழ் நாள்காட்டி வெளியிட்ட ஆண்டு கிபி 317 எனவொரு சான்று உண்டு.