My Authors
Read all threads
ரஜினியின் பேச்சு பற்றி.
திட்டம் 1: நான் கட்சியின் தலைவர். ஆட்சிக்கு இன்னொருவர்.
திட்டம் 2: அரசியலுக்கு இளைஞர்கள் வரனும்.
திட்டம் 3: அனுபவம் வாய்ந்த, மக்களிடம் நல்ல பெயர் பெற்ற அதிகாரிகளை கட்சிக்கு கூட்டி வருவேன். 1/n

#RajinikanthPressMeet #Rajinikanth
நேரடி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017ல். அதற்கு முன் அரசியல் கேள்வியின் போது அவரோட ஒரே பதில், மேலே கையை காட்டி ஆண்டவன்கிட்டதான் என்று சொல்வார். இது வருவேன் என்றோ வரமாட்டோன் என்றோ பதில் அல்ல. ஆனா எதிர்பார்ப்பை நீடிக்க செய்தது உண்மை.
2/n

#RajinikanthPressMeet #Rajinikanth
இந்த திட்டங்களை அடுத்த டீவீட்களில் பார்க்கலாம். மூன்று திட்டங்கள் என்று சொல்லிவிட்டு இதை மக்களிடம் கொண்டு சேருங்கள். எழுச்சி உண்டு பண்ணுங்கள் என்கிறார். இதை மக்களிடம் ரசிகர்கள், மன்ற ஆட்களை விட அவரால்தான் செய்ய முடியும்.
3/n

#RajinikanthPressMeet #Rajinikanth
ஆட்சியில் பங்கெடுக்க மாட்டேன் என்பதுக்கும் உடல்நிலை ஒரு காரணம். ஆனா என்னளவில் ரஜினி நேரடியா மக்களை சந்தித்து பேசணும். விளக்கனும். அப்போதான் மக்களுக்கு போய் சேரும். ஏற்கிறார்களா இல்லையா என்பது அடுத்ததுதான். அவர் சந்திக்கால் போய் சேராது.

4/n

#RajinikanthPressMeet #Rajinikanth
கட்சியில் ~ 50,000 பதவிகள். அவங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தலையிடுகிறார்கள். மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுசா போய் சேரவில்லை என்கிறார். இது உண்மை. ஆனா மக்களை சந்திக்க அவங்க வேணும். அதிகாரிகள்-கட்சி ஆளுங்க இவங்கதான் செக் & பேலன்ஸ்.
5/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அவரே சொல்கிறார் கட்சிக்கு பணம், உடல் உழைப்பு எல்லாம் கொடுபவர்கள் தொண்டர்கள். ஆனா ஆட்சிக்கு வந்த பிறகு என்ன வழி? அவர்களுக்கும் டெண்டர்கள் கிடைக்கும். ஆனா ஒழுங்கா நியாயமா வேலை செய்யலைன்னா கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சொல்லனும்.
6/n

#RajinikanthPressMeet #Rajinikanth
இரண்டு பெரிய கட்சிகள். கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தேர்தலை சந்திக்கிறார். ஜெ இல்லாமல் எடப்பாடி. ஆனா இரண்டு கட்சிகளும் வலுவான கட்சிகள். அமைப்பு ரீதியாக, பெரிய தொண்டர் படை. சினிமா புகழை வைத்து சமாளிக்க முடியுமா என்கிறார்.
7/n

#RajinikanthPressMeet #Rajinikanth
அப்படி சந்தேகம் இருந்தா இதை எப்படி எதிர்கொள்வது. ஒன்று கூட்டணி. இல்லையெனில் நேரடியா இறங்கி மோதி பார்த்து விடுவது. அவரோட நிலை இந்த இரண்டும் அல்ல இப்போதைக்கு. கட்சியை அமைப்பு ரீதியா பலப்படுத்த காலம் இல்லை. தேர்தல் 2021ல்.
8/n

#RajinikanthPressMeet #Rajinikanth
வந்தா சமாளிக்க முடியுமா என்ற தயக்கம். ஒருவேளை வந்து தோற்றுப்போனால் (5-15% ஓட்டு) இன்னொரு வாய்ப்புக்கு வயது, உடல் நிலை இல்லை. அதனால் நான் கட்சிக்கு தலைமை என்று ஆனால் தேர்தலில் நிற்க அவசியம் இல்லை. தோற்றாலும் அவர் மேல் முழு தோல்வியும் விழாது.
9/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அவர் கட்சித் தலைவர். தேர்தலில் அவர் நிற்க மாட்டார். முதல்வர் வேட்பாளர் இன்னொருவர். ஒருவேளை தோற்றால் முதல்வரா நிற்பவர் மேலயும் கொஞ்சம் பழி போடலாம். ரஜினி தேர்தலில் நிற்கலைல்ல அதனால தோத்துப்போச்சுன்னு சொல்ல வாய்ப்பிருக்கும்.
10/n
#RajinikanthPressMeet #Rajinikanth
திட்டங்கள்.
திட்டம் 1: ரஜினி கட்சியின் தலைவர். ஆட்சிக்கு இன்னொருவர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி பெயருக்கு இப்படித்தான். இப்போ ரஜினியே தலைவர் என்றால் கட்சியின் கட்டுப்பாடு அவரிடம்தான் இருக்கும்.

ஆனா தேர்தல் அரசியலுக்கு இது உதவுமா?
11/n
#RajinikanthPressMeet #Rajinikanth
ரஜினி ரசிகர்கள், அவரது சினிமா நடிப்பை பார்த்தும், நிஜ வாழ்வில் அவரது எளிமை பார்த்தும் இருக்கிறார்கள். அவர்கள் ரஜினி தவிர அவர் கை காட்டும் இன்னொருவரை ஏற்றுக்கொள்வார்களா? ரசிகர்களை விடுங்கள். பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஓட்டு போடுவார்களா?
12/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இரண்டாவது திட்டம் இளைஞர்கள். திமுகழகம் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனா இப்போ இளைஞர்கள் பொறுப்பில் இருக்கிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்தான் இளைஞர் அணி தலைவர் பதவி ஸ்டாலினிடம் இருந்து அதுவும் உதயநிதிக்கு போயிருக்கிறது
12/n
#RajinikanthPressMeet #Rajinikanth
ஆனால் ஸ்டாலின் அரசியலில் இளைஞராக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறார். மிசாவுக்கு எதிராக கைதானார். தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதல்வர். சென்னையின் முன்னாள் மேயர். கட்சியை சில தேர்தல்களாக அவர்தான் வழி நடத்துகிறார்.
13/n
#RajinikanthPressMeet #Rajinikanth
கலைஞருக்கு ஓட்டு போட்ட பொதுமக்கள், கட்சி ஆட்கள் அவருக்கு ஓட்டு போடுவதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்பதை கடந்த சில தேர்தல்களே உணர்த்திவிட்டது. இப்போதைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்டாலின் பெரிய தலைவர் என்று சொல்லலாம்.
14/n
#RajinikanthPressMeet #Rajinikanth
எடப்பாடி ஆட்சி இப்போ அப்போன்னு சொல்லி ஆண்டுகள் கடந்து விட்டது. OPS ஐ சமாளித்து, பிஜேபிக்கு அனுகூலமாக இருந்து தன்னையும் தலைவராக நிலை நிறுத்திக்கொண்டார். அதிமுக ஓட்டு வங்கியுடன் பார்க்கும்போது அவரும் கடும் சவால்தான்.
15/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அதனால் இளைஞர்கள் வரனும் என்ற திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அதற்காக மக்கள் ஓட்டு போடுவார்களா? அதுவும் ரஜினி நேரடி தேர்தல் களத்தில் நிற்காவிட்டால். இதுதான் பெரிய கேள்வி. இதற்கான பதில் அவருக்கே தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
16/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இளைஞர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வரனும் என்பது புதிதல்ல. கட்சிப்பொறுப்பில் சீனியர் ஆட்கள் போதும் என்று காமராஜை K பிளான் கொண்டுவந்தார். அது அவர் 3 முறை முதல்வராக இருந்து தேர்தலில் வென்ற பிறகு. பிறகு அகில இந்திய தலைமை ஏற்றார் என்பது வரலாறு.
17/n
#RajinikanthPressMeet #Rajinikanth
ஆனா தேர்தல் அரசியலுக்கு வராமலே, மக்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது தெரியாமலே, ஆட்சியை நடத்த திட்டம் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்ற கேள்விதான் பதிலாக வரும். உங்களிடம் பதில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
18/n
#RajinikanthPressMeet #Rajinikanth
திட்டம் 3: ஒய்வு பெற்ற அதிகாரிகள், மக்களுக்கு அறிமுகமான, நல்ல பெயரெடுத்த அதிகாரிகள் எல்லாம் கட்சிக்கு கொண்டு வருவேன் என்று சொல்கிறீர்கள். கிட்டத்தட்ட ஆம் ஆத்மி கட்சி அதைத்தான் செய்தது. டெல்லியிலும், பஞ்சாபிலும் மட்டும் வெற்றி பெற முடிந்தது.
19/n
#RajinikanthPressMeet #Rajinikanth
1996ல் திமுக-தமாகா ஜெயிக்க நீங்கள் முக்கியமான காரணம் என்பேன். ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொன்னது பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. ஜெ கூட பர்கூர் தொகுதியில் சுகவனத்திடம் தோற்றுப்போனார்.
20/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அப்போது இரண்டு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருந்தார்கள். கலைஞர் + மூப்பனார். திமுக+காங்கிரஸ் தொண்டர் படை. அண்ணாமலை சைக்கிள் மூப்பனாருக்கு கிடைத்தது. மக்களின் அமோக ஆதரவு. அதனால் உங்களின் பேட்டி மட்டுமே அப்போது போதுமானதாக இருந்தது.
21/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இப்போ அனுபவம் வாய்ந்த தலைவர்கள் உங்கள் கட்சியில் இல்லை. உங்களாலும் தமிழ்நாடு முழுதும் சுற்றி பிரச்சாரம் போக முடியாது. ரசிகர் படை காவலர்களாக இருந்தாலும் எப்படி பொதுமக்களிடம் ஓட்டு வாங்குவது. மக்களிடம் கொண்டு சேர்க்க நேரம் இல்லை.
22/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இதை எல்லாம் நீங்கள் நன்றாக யோசித்திருப்பீர்கள். அதனால் இந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை தொண்டர்களுக்கு விட்டு விட்டீர்கள். அப்படி கொண்டு சேர்த்த பிறகு எழுச்சி வந்தால், அது உங்களுக்கு தெரிந்தால் நான் வருவேன் என்கிறீர்கள்.
23/n
#RajinikanthPressMeet #Rajinikanth
கட்சியே கொள்கை, சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் இருக்கும். குறைந்த பட்சம் ஆரம்பிக்கப்படும் போதாவது அப்படி இருக்கும். போகப்போக அதிலிருந்து சருக்கலாம். விலகலாம். ஆனா ஒரு அடிப்படை (foundation) இருக்கனும். அதை மக்களிடம் சேர்ப்பது தலைவனின் வேலை
23/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அப்படி அண்ணா செய்தார் (சுயமரியாதை, சமத்துவம், மாநில சுயாட்சி, தமிழ்). எம்ஜியார் செய்தார் (அண்ணாயிசம் என்று சமாளித்தார்), திமுகவில் அரசியல் அனுபவம் இருந்தது. மக்களிடம் திரைக்கு வெளியேயும் தொடர்பு இருந்தது. திமுகவுக்கும் அவர் தேவைப்பட்டார்.
24/n
#RajinikanthPressMeet #Rajinikanth
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலியில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியதில் கலந்து கொள்ளாமல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தீர்கள். தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். மிக பெரிய வெற்றி.
25/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இப்படி சில நேரங்கள் தவிர்த்து உங்களுக்கு திரைக்கு வெளியே பொதுமக்களிடம் பெரிய தொடர்பில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது. இன்னும் ஒரு ஆண்டு கூட முழுசா இல்ல. இப்பவும் கட்சி ஆரம்பிக்க வில்லை. ஆனா கொள்கைகள் என்று 3 திட்டங்கள் பேசுகிறீர்கள்.
26/n
#RajinikanthPressMeet #Rajinikanth
உங்கள் ரசிகர்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க சொல்கிறீர்கள். எழுச்சி வரட்டும் வருகிறேன் என்கிறீர்கள். உங்கள் நோக்கம் நல்ல நோக்கம் என்று வைத்துக்கொண்டாலும் தொண்டர்களால் முடியுமா? நீங்கள்தான் முன்னாடி நின்னு வழிகாட்டணும். செயலில் இறங்கனும்.
27/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இல்லை எனக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லலாம். ரஜினி ரசிகர்கள் கோபித்துக்கொள்ள கூடாது. அவர் இன்னும் 2 அல்லது 3 படங்கள் இந்த ஆண்டில் நடிக்க போகிறார். அந்த நேரத்தில் அவரே கொஞ்சம் கொஞ்சமா கட்சியை வளர்க்கலாம். கொள்கைகளை கொண்டு சேர்க்கலாம்.
28/n
#RajinikanthPressMeet #Rajinikanth
ஒருவேளை தொண்டர்களால் கொள்கைகளை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை என்றாலோ, அல்லது கொண்டு போய் சேர்த்த பிறகு மக்களிடம் நீங்க எதிர்பார்க்கும் அளவு வரவேற்பில் என்றாலோ, எழுச்சி வரவில்லை என்றாலோ என்ன செய்ய போகிறீர்கள்.
28/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இப்படி நீங்கள் விளக்கம் கொடுக்க கொடுக்க புதிதாக கேள்விகள்தான் எழுந்தவண்ணம் இருக்கிறது. ஒரு கேள்விக்கும் பதில் கிடைத்தததாக, கிடைக்க போவதாக தெரியவில்லை. அதனால் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.
29/n
#RajinikanthPressMeet #Rajinikanth
தேர்தல் அரசியலுக்கு வந்தால் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதாகவே தெரிகிறது. 5-15% வாக்குகள்தான் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களோ என்னமோ. கிடைத்தாலும் தவறில்லை. தொடர்ந்து அரசியலில் இருந்தால் அது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
30/n
#RajinikanthPressMeet #Rajinikanth
அரசியல்தான் இலக்கு என்றால் வயது, உடல்நிலை பார்க்காமல் மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்ய வேண்டும். கலைஞர் ஒரு சிறந்த உதாரணம். எதிர்க்கட்சியாக இருந்த ஆண்டுகள் அதிகம். தொண்டர்கள் சோர்ந்து போகாமல் கட்சியை வழி நடத்தினார்.
31/n
#RajinikanthPressMeet #Rajinikanth
உடல்நிலை ஒத்துழைக்காது. நேரம் செலவழிக்க முடியாது. இப்படியான சந்தேகங்கள் இருந்தால் உங்கள் ரசிகர்களிடம் தெளிவாக சொல்லி விடுங்கள். அரசியல் கிடையாது என்று. திரையில் நீங்கள் இன்னும் சூப்பர் ஸ்டார். ஆனா முன்பை விட இப்போ போட்டி அதிகம் இருக்கிறது.
32/n
#RajinikanthPressMeet #Rajinikanth
உங்களுக்கு எல்லா கட்சியில் இருந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள். திரையில் மட்டும் இருந்தீர்கள் என்றால் அரசியல் கட்சிகள் உங்களை எதிர்த்து பேசாது. நல்ல மனிதர் என்ற பெயர் எடுத்து வைத்திருக்கிறீர்கள். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
33/n
#RajinikanthPressMeet #Rajinikanth
இப்பவும் நீங்கள்தான் தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரம். 40 ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா என்பதெல்லாம் நடக்காத காரியம். உங்களின் நேர்மையும், நட்பும் கமல் 50 விழாவில் நீங்கள் பேசியதை கேட்டாலே தெரியும்.
34/n
#RajinikanthPressMeet #Rajinikanth
திரையில் எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்றால் இப்போதும் காலம் கடந்து விட வில்லை. சொல்லி விடுங்கள். ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இப்படிக்கு: உங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.
34/n
THE END
#RajinikanthPressMeet #Rajinikanth
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Nellai - நெல்லை

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!