Dr.Nellai Profile picture
🎓PhD || ⚗️Chemistry || 🎓IIT || 🇮🇳🇺🇸 🧪*Research Scientist* 🧬Biomaterials & Polymers 🖤❤️Einstein Physics 🖤❤️Politics Markets Health
Sep 8, 2023 10 tweets 2 min read
ஆண்டுக்கு ஒருமுறை ரத்தத்தில் cholesterol, LDL, HDL, Cholesterol/HDL ratio பார்த்துக்கொள்ளுங்கள்.
Total cholesterol < 200 mg/dL
Triglycerides < 150 mg/dL
HDL > 39 mg/dL
LDL < 130 mg/dL
திடீர் மாரடைப்புக்கு இதுவும் காரணமாய் இருக்கலாம்.

#heart #HealthTips 1/n ரத்தத்தில் LDL அதிகமாவது பிரச்சினை. அதிகமா இருந்தால் வேறு உடல் பிரச்சினைகள் வராமல் கூட இருக்கலாம். ஆனால் இதய ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். குண்டாக இருந்தால்தான் கொழுப்பு அதிகமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒல்லியா இருந்தால் கூட அதிகமா இருக்கலாம்.

#Heart #HealthTips
Aug 10, 2023 7 tweets 1 min read
என்னமோ ரஜினி மாஸ்தான். நடிப்பு அல்ல என்று நிறுவ முயற்சிக்கிறார்கள். 1) மாஸ் நடிகரா 40 வருடமா நிலைப்பது ஈஸி அல்ல. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எல்லாம் மாஸ் ஹீரோக்கள்தான். புறம் தள்ளப்பட்டார்கள். முழு காமடி, அப்பா பெரியப்பா என்று சைடு ரோலுக்கு மாறி விட்டார்கள்.
#Jailer 1/n மாஸ் ஹீரோவா ஏற்றுக்கொள்ள வைப்பது எளிது அல்ல. கமல் சொன்ன மாதிரி "திரையில் தோன்றினாலே ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது பெரிய திறமை". அதை சில ஆண்டுகள் அல்ல 4 தலைமுறைகளாக 45 ஆண்டுகளாக செய்கிறார் ரஜினி. 2/n
#Jailer #Jailerblock
Jul 18, 2023 9 tweets 2 min read
#Hukum #HukumTigerKaHukum
#Rajinikanth #Jailer

முதலில் நான் கமல் ரசிகன். இப்போதும் அன்பே சிவம் என்னோட Top 3 ல் இருக்கும்.
கல்லூரிக்காலம் முதல் ரஜினி. ரஜினி படங்கள் கொண்டாட்ட மனநிலைக்கு உங்களை அழைத்து செல்பவை. கொண்டாட்டத்துக்கானவை. 1/n
#Hukum #HukumTigerKaHukum
#Rajinikanth #Jailer

ரஜினி = 45 ஆண்டு கொண்டாட்டம் இது எளிதல்ல. அவர் பாதையில் தொடர முயன்று தோற்றவர்கள் பலர். முழு மாஸ் படத்திலும் சட்டென கண் கலங்க வைப்பார். "நான் நடிக்கிறேன் பார்..நன்றாக பார்..." என்று வலிய திணிக்காத இயல்பான நடிப்பு அவரோடாது. Image
Jun 1, 2023 5 tweets 1 min read
டிராவிட் இக்கட்டான நேரங்களில் விளையாடினார். மாற்றுக்கருதில்லை. ஆனா சச்சின் அப்படி விளையாடவில்லை என்ற பொதுப்புத்தி நிறையவே இருக்கிறது. 80 களின் இறுதியில், 90 களின் ஆரம்பத்தில் சச்சின் மட்டுமே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவார். 1/n வேகப்பந்து அச்சுறுத்தும் பெர்த் மைதானத்தில் 20 வயதுக்கும் முன்னரே 100 அடுத்தவர் சச்சின். அந்த 100, ஆஸ்திரேலிய நாட்டில் மிக குறைந்த வயதில் அடிக்கப்பட்ட 100. அந்த ஒரு 100 ஐ பார்த்தே, அப்போதைய ஜாம்பவான்கள் சச்சின் மிகச்சிறந்த வீரராக வருவார் என்று கணித்தார்கள். 2/n
Dec 22, 2022 6 tweets 4 min read
What are gravitational waves?
#Einstein predicted in 1916.
It took almost a century to realize that.
He was "way ahead of his time".
When a gravitational wave passes through objects will elongate and shrink alternatively.

#Gravity #GravitationalWave 1/n

But #GravitationalWaves are tiny so does the elongation and shrinking.

So scientists build an "L" shaped tunnel and sending laser from the middle point to both the edges and back continuously.

The length of the L shaped tunnel is 2.5 miles each side.

#gravity 2/n
Dec 21, 2022 10 tweets 5 min read
ஒன்னாவது ஒழுங்கா இருக்கா?
1) இந்த வாட்ச் தயாரிப்பை நிறுத்தியது 2016ல். மொத்தமே 500 வாட்ச் என்கிறார். பாஜக ரபேல் ஒப்பந்தம் போட்டது 2016ல்.
அதுவரை அந்த 500 வாட்ச் விற்காமல் இருந்ததா?
2) ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளுக்கு விற்கிறது.
#rafalewatch 1/n 3) ரபேல் ஒப்பந்ததுக்கு முன்னாடியே வாங்கி இருந்தா அது எப்படி தேசபக்தி இந்தியா பிற்காலத்தில் ஒப்பந்தம் போதும்னு தெரியுமா? இல்ல அதற்காகவே வாட்ச் கொடுக்கப்பட்டதா?
4) நான்தான் வாங்கினேன் என்கிறார் அண்ணாமலை. தேர்தல் பத்திரத்தில் சொல்லி இருக்கிறாரா? 2/n
#rafalewatch
Dec 20, 2022 6 tweets 3 min read
சீனாவில் ஏன் மீண்டும் கரோணா?
1) "zero covid" பாலிசி பொதுமக்களின் போராட்டத்தால் திடீர்னு விலக்கியாச்சு.
2) மக்களுக்கு இருந்த covid immunity எல்லாம் தடுப்பூசியால் மட்டுமே. மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் கரோணா பரவி அதோடும் immunity. அந்த immunity சீனாவில் இல்லவே இல்லை. 1/n #Covid19 கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், எத்தனை பேருக்கு அதை பரப்புவார்?
1) கரோணா வந்த புதிதில் சீனாவில் R=2. அதாவது கரோணா பாதித்த ஒருவர் 2 பேருக்கு பரப்புவார்.
2) அமெரிக்காவில் #Omicron உச்சத்தில் இருந்த போது, R=10
3) இப்போ சீனாவில் R=16 (அதாவது ஒருவர் 16 பேருக்கு பரப்புகிறார்)
#Covid19
Oct 12, 2022 4 tweets 1 min read
IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழி பயிற்று மொழி ஆக வேண்டும் என்று அமித் ஷா கமிட்டி சொல்லி இருப்பது விசமத்தனம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழில் சொல்லிக்கொடுங்க என்று சொல்கிறோம் என்று சங்கிகள் சொல்கிறார்கள்.

பெரிய அபத்தம் இது. உலகம் முழுக்க அடிப்படை கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும்.

ஆனால் IIT போன்றவை உயர்கல்வி நிறுவனங்கள். அங்கே ஆங்கிலம்தான் வேண்டும்.

உயர்கல்வி, பன்னாட்டு தொடர்பு, கருத்தரங்குகள், வெளிநாட்டில் மேற்படிப்பு, அனுபவம், வேலை எல்லாவற்றுக்கும் ஆங்கிலம் வேணும்.

#StopHindiImposition
Oct 12, 2022 6 tweets 3 min read
வினோத் ராய் CAG கொடுத்த அறிக்கை.
ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க கூடும்னு ஆரம்பிச்சு, ஊழல்னு மாற்றி, ஊடகங்கள் எல்லாம் சொல்லி, பாஜக ஆட்சி வர உதவி செய்தன.
இப்போ அந்த வினோத் ராய் நான் சொன்னது தப்புன்னு சொல்லிட்டார்.

#ARaja 1/n அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் என்று புதுசு புதுசா முளைத்தார்கள். அப்போ வாய் மூடி வேடிக்கை பார்த்த பலனை காங்கிரஸ் இன்று வரை அனுபவிக்கிறது.

நீதிபதி சைனி நான் 7 ஆண்டுகள் தினமும் காத்திருந்தேன். ஒரு ஆதாரமாவது வரும் என்று. வரவில்லை.

இது ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு என்றார்.

#ARaja 2/n
Oct 11, 2022 4 tweets 1 min read
இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும், தமிழ்நாட்டில் தமிழும்னு சொன்னாராம்.

IIT ஒன்றும் அடிப்படை பள்ளிக்கல்வி அல்ல. உயர் கல்வி நிறுவனம். எல்லா IIT யிலும் எல்லா மாநிலங்களில் இருந்தும் படிப்பார்கள்.

மாநில மொழியில் இருந்தால் வேறு மாநிலங்களில் இருந்து வருவோர் எப்படி படிக்க முடியும்? தமிழ்நாடு IIT யில் மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும் படிக்கிறார்கள். தமிழில் பயிற்று மொழி இருந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள்?

தமிழ்நாடு மாநில மாணவர்கள் IIT Bombay உள்ளிட்ட பிற IIT களில் படிப்பார்கள். அங்கே இந்தி இருந்தால் அவர்கள் எப்படி படிக்க முடியும்?
Oct 10, 2022 5 tweets 2 min read
பொன்னியின் செல்வன் நல்லா இருந்துச்சு. கார்த்தியின் அந்த chasing காட்சி நல்லா இருக்கு.
விக்ரம், கார்த்தி மற்றும் எல்லோரின் நடிப்பும் நல்லா இருந்துச்சு.
விக்ரமை ஹீரோவா காட்ட வேண்டும்னு ரொம்ப போர் போர்ன்னு காட்டிட்டங்க.

#PS1 #PONNIYINSELVAN 1/n வந்தியத்தேவன்-ஆழ்வார்க்கடியான் நல்லா comedy இருக்கும்னு நினைச்சேன். பொன்னியின் செல்வன், வந்தியதேவனிடம் தலைப்பாகையை கொடுத்து தன்னைப்போல் மாறு வேடம் போட சொல்கிறார். ரொம்ப பெருமைப்படும் கார்தியிடம் "தம்பி, தலைப்பாகை வந்திருச்சு. தலை பத்திரம்" என்ற ஒரே காட்சிதான் சிரிப்பு சத்தம்
#PS1
Aug 11, 2022 8 tweets 3 min read
"If the bill is passed in both the houses, customers will have the option to choose the supplier of electricity just like one can choose for telephone, mobile and internet services.."

#electricitybill 1/n #electricitybill 2/n

சுருக்கமா சொல்லனும்னா மின்சாரம் தனியாருக்கு போக போவுது.

இதை எப்படி ஆரம்பிப்பாங்கன்னு தெரியும்தானே?

நிறைய தனியார் வருவாங்க. போட்டி போடுவாங்க. மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்னு சொல்லுவாங்க.

தனியார் நிறுவனங்கள் ஏமாளிகளா?
Aug 9, 2022 4 tweets 2 min read
Google Chrome பிரவுசர் எதுல இருந்து வருது? Chromium என்னும் ஓபன் சோர்ஸ் பிரவுசர்ல இருந்து. Chromium is safe and secure. கூகிள் தன்னோட tracking add பண்ணி chrome னு தருது. அதைத்தான் உபயோகிக்கிறோம். இப்படித்தான் கூகிள் tracking ல அதிகமா சம்பாதிக்குது.
chromium.woolyss.com மாற்று @firefox பிரவுசர். அது Mozilla என்னும் non-profit கம்பெனியால் நடத்தப்படுவது. Firefox முழுசும் Open Source. அப்படின்னா என்னன்னா அதோட source code முழுசும் public ல இருக்கு. ஆனா Google Chrome, Microsoft Edge ரெண்டும் Android Windows ல default ஆ வருதுன்னு அதிகமா use பண்ணறோம்.
May 19, 2022 9 tweets 3 min read
#பேரறிவாளன்

திடீர் ராஜீவ் ஆதரவாளர்களுக்கு.

"நான் பேட்டரி வாங்கி கொடுத்தேன். எதற்கு என்று தெரியாது" இதான் அவர் சொன்னது.

இதை "குண்டு வைக்க வாங்கி கொடுத்தேன்" என்று மாற்றி எழுதியதாக முன்னாள் CBI அதிகாரி தியாகராஜன் சொல்லி இருக்கிறார். 1/n #பேரறிவாளன்

1998ல் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு.

2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.

இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது கண்டிப்பா 14 ஆண்டுகள். அதன் பிறகு விடுக்கலாம். அல்லது செய்யாமல் இருக்கலாம்.

மொத்தமாக 31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இதில் 24 ஆண்டுகள் தனிமைச் சிறை. 2/n
May 5, 2021 21 tweets 19 min read
கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும்.

1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்?
கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19 #Covishield #Covaxin 1/n குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வைரஸ்களால் வரலாம். ஆனா அவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. பெரிய பாதிப்பு வரும் முன்பு நம் உடம்பு சண்டையிட்டு அழித்து விடும். ஆனா கரோனா வைரஸ் மிக வேகமாக நம் உடம்புக்குள் பரவுவதோடு, நம் நுரையீரலை பாதிக்கும். #COVID19 #Covishield #Covaxin 2/n
Dec 20, 2020 17 tweets 4 min read
உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும். இந்த vesicles இரண்டு பகுதிகள் கொண்டது. வெளிப்புறம். பெரும்பாலும் lipids போன்ற அமைப்பில் இருக்கும். Cancer மருந்துகள் பெரும்பாலும் தண்ணீரில் குறையாது. உதாரணம் paclitaxel. இது இந்த முறையில் உள்ளே அனுப்பப்படும். #cancer

pubmed.ncbi.nlm.nih.gov/30557650/
Dec 18, 2020 10 tweets 8 min read
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார்.
#ADMK #DMK எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.

#ADMK #DMK #MGR 2/n
Dec 9, 2020 11 tweets 11 min read
#SnakeBite #India #Science 1/n
இழை:

பாம்பு கடியால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இறக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 52,000 பேர். அதாவது ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர்.

எதனால் இது சரிசெய்யப்படாமல் இருக்கிறது? ஏனெனில் இதில் பெரும்பாலோனோர் ஏழைகள், விவசாயிகள். #SnakeBite #India #Science #Snake 2/n
உலகம் முழுதும் ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதில் பாதி இந்தியாவில். 50,000 பேர். ஆண்டுக்கு.

அதோடு இதில் இருந்து பிழைப்பவர்களுக்கு உறுப்பு இழப்பு, கிட்னி பாதிப்பு, கோரமான வடுக்கள், உளவியல் பாதிப்பு எல்லாமே.
Aug 13, 2020 15 tweets 2 min read
நேர்முக தேர்வு பற்றியும், அதன் முறைகேடுகள் பற்றியும் ட்வீட் கண்ணில் பட்டது.

என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.

PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n இந்திய அரசு ஏதோ பெரிய மனசு மனசு பண்ணி கொஞ்சம் fellowships (Ramanujam, Ramalingaswami) என்று வைத்திருக்கிறது. இதெல்லாம் project எழுதி "நேர்முக தேர்வு" மூலம் செலக்ட் ஆகனும். 2/n
Jun 2, 2020 11 tweets 6 min read
#Universe 1/n
#Aliens இருக்கிறார்களா?
வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன. #Universe #Aliens 1/n
நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.
Mar 28, 2020 6 tweets 4 min read
மக்களே நல்லா புரிஞ்சுக்கோங்க. பொதுவாவே வைரசுக்கு மருந்து கிடையாது. சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் இப்படி upper respiratory system தாக்கும் (SARS உட்பட). அது ஜெனடிக் மாற்றமடைந்து #coronavirus ஆக வந்துள்ளது. இது lower respiratory stem (lungs) பாதிக்கும். நிமோனியா வரும். #COVID19 1/n பாக்டீரியாவால் வரும் நிமோனியாக்கு antibacterial மருந்து இருக்கு. இந்த #coronavirus ஆல் வரும் நிமோனியாவுக்கு மருந்து கிடையாது. உடம்பே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கனும். (immunity)
வயதாக ஆக இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உடல் தடுமாறும்.
#COVID19 2/n