#RT
படித்ததை பகிர்வோம்!!!
பாசமே பரமானந்தம்
மகாபாரதப்போர் முடிந்த பிறகு ஒருநாள் அர்ஜுனன் நதிக்கரையில் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். வில் தரிக்காமல் சாதாரண உடையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தான்.
"அவனா?" உறுமினார் அந்தணர், "பாண்டு மகாராஜாவின் மகன்களில் அர்ஜுனன் என்று ஒருவன் இருக்கிறானே, அவனை தீர்த்துக்கட்ட வேண்டும். மற்ற மூவர் விஷயமும் சிரமம். நாரதரையும், பிரஹ்லாதனையும் நான் வைகுண்டம் போனால்தான் பார்க்க முடியும்.
"அப்படியா? அர்ஜுனன் செய்த குற்றம் என்ன?"
"நாரதர், திரௌபதி, ப்ரஹ்லாதனைவிட இவன் மிகவும் மோசம்.
தன்னை பகவானுக்கு மிகவும் நெருக்கமாக கருதிக்கொண்டு,
அர்ஜுனன் கண்களில் நீர் ததும்பியது. அவன் அந்தணர் இருந்த இடத்து தூசியில் சிறிதெடுத்து தலையில் தூவிக்கொண்டான். அவனது வாய் முணுமுணுத்தது. "சடங்கு வழி பக்தியைவிட, பாச வழி பக்தியே பரமானந்தத்தில் எளிதில் சேர்க்கும். இவரே என்னை விட கிருஷ்ணனுக்கு மிகவும் நெருக்கமானவர்."