My Authors
Read all threads
அந்த நாள் (1954) தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றும் சொல்லலாம் இன்று பல த்ரில்லர் படங்களை கண்டு விட்டது நம் தமிழ் சினிமா அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது இந்த படம்தான் ஆம் தமிழில் வந்த முதல் திரில்லர் படம் & பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் வெளிவந்த முதல்தமிழ்படம்
படத்தின் கதை... ஒரு இன்ஜினீயர் கொல்லப்படுகிறார் அந்த கொலையை அரங்கேற்றியது யார் எதனால் கொலை நடந்தது என்று விசாரிக்க....குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தர் மேல் கையை காட்ட.... உண்மையில் கொலைகாரர் யார் தான என்று ஆராய்ந்து அறிந்து கடைசியில் ஒரு தீர்ப்பு கொடுப்பதே இந்த படம்.
இத்திரைப்படம் ஒரு cult கிளாசிக் சினிமா வகையில் சேரும் cult cinima என்றால் என்ன ??? ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி அது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் கொண்டாடப்படும் அதைதான் cult சினிமா என்பர் சினிமா சான்றோர்....
அந்த நாள் எதிர் பார்த்த அளவுக்கு வசூல் ஈட்ட வில்லை அதற்கு காரணம் அதில் வரும் சில காட்சிகள் ரசிகர்களால் ஏற்று கொல்லப்படவில்லை (For Example) சிவாஜி முதல் சீன் லியே கொள்ளபடுறார் அதனால்... என்ன நம்ம தலைவனை கொன்னுட்டாங்க அப்படின்னு ரசிகர்கள் கொந்தளித்து நடைய கட்டிட்டாங்க
அப்ப இருக்கிற மக்களுக்கு இப்ப இருக்கிற மைண்ட் செட் வெச்சு படம் பார்க்க தெரியாமல் போனதால் அந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய தோல்வி அடைந்தது
இப்படத்தை இயக்கியவர் சுந்தரம்பாலச்சந்தர் திரைக்கதை அமைத்தவர் ஜாவர்சீதாராமன் இவர் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார் இயக்குனருக்கு இது நான்காவது படமாகும் அவர் இதற்கு முன்பு சில திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த நாள் மட்டும் எந்த நாளானாலும் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது
ஏன் அந்த நாள் மட்டும் ஸ்பெஷல் அப்படின்னு கேட்கலாம் .... இப்படத்தின் டைரக்டர் ஒரு சினிமா விழாவில் அகிரா குரோசவா எடுத்த Rashomon என்ற ஒரு படத்தை பார்த்துள்ளார் அடடே இந்த திரைக்கதை பிரமாதமாக உள்ளதே என்று அந்த நாள் வியந்து அந்த வியப்பின் விந்துவால் பிறந்த சிசு தான் அந்த நாள்.
இப்படத்தை இயக்குனர் ஸ்கிரிப்ட் எழுதி விட்டு ஆல் இந்தியா ரேடியோ க்கு கொண்டு சென்றார் அவர்கள் அதை நிராகரிக்க பிறகு ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இந்த படத்தை ஏற்று இதற்கு அந்த நாள் என்று தலைப்பிட்டு வெளியிட்டார்
உண்மையில் அப்படி அந்த Rashomon என்றால் என்ன?? அகிரா குரசோவா இயக்கிய Rashomon கதை ஒரு கொலைக்கான காரணத்தை ஒவ்வொருவரும் அவர்களுடைய point of view ல இருந்து இந்தக் கொலை இப்படித்தான் நடந்துச்சுன்னு சொல்லுற மாதிரி இருக்கும் அந்த திரைக்கதை பாணி பின்னர் Rashomoneffect என்று அழைக்கப்பட்டது
நம்ம இயக்குனர் அந்தத் திரைக்கதை பாணியை மட்டும் எடுத்துக்கொண்டு மத்ததை எல்லாம் விட்டுவிட்டு தன் சுய சிந்தனையால் யோசித்து வேறு ஒரு புதிய கதையை தமிழில் எடுத்தார் inspired வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இது தான் இவர் அந்த கதையை copy அடிக்கவில்லை
இந்த இயக்குனரின் இன்னும் சில திரில்லர் படங்கள் .... பொம்மை, அவன இவன், நடு இரவில், இது நிஜமா, கைதி மற்றும் எது நிஜம் .... நேரம் இருந்தால் இதையும் பார்க்கலாம் ஏதும் தவிறில்லை
பிரபல டிவி நிறுவனம் ஒன்று எடுத்த surveyயில் நாம் மரணிப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 50 தமிழ் படங்களில் பட்டியலில் அந்த நாள் படமும் ஒன்று
அந்த நாள் படத்துக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு தமிழில் எடுக்கப்பட்ட முதல் Film Noir படம் இதுதான் ...Film Noir என்றால் என்ன ?? நிழலை வைத்து கதை சொல்லும் யுக்திக்கு பெயர் தான் Film Noir ....(picture reference)
நான் சொன்ன எல்லாமே உங்களை படம் பார்க்க தூண்டா விட்டாலும் சேரி ..... இந்த ஒரு போஸ்டர் ஒன்றே போதும் இந்த திரைப்படம் உங்களை பார்க்க வைப்பதற்க்கு அந்த காலத்தில் இந்த போஸ்டரில் இந்த சீனில் இருக்கும் கிரியேட்டிவ் திங்கிங் பெரிதாக பேசப்பட்டது இப்போதும் கூட.. படம் பாருங்கள் அது தெரியும்
இப்படி எல்லா வகையிலும் முதன்மை தன்மையாகவும் முக்கியத்தன்மை மிக்க ஒரு உன்னத படைப்பாகவும் திகழ்ந்தது இந்த படம் .... இப்படத்தை பாருங்கள் என்று நான் சொல்லமாட்டேன்.... நீங்க கண்டிப்பா பாத்து தான் ஆகனும் அப்டின்னு தான் சொல்லுவேன் 😊இந்த thread usefull ah இருந்திருக்கும்னு நம்புறேன்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with பிரவீன் ᶜᶦⁿᶦᵐᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ 🎞📽🎬

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!