வெறுமனே "Qualify" ஆவது என்பது நீட் பொறுத்த வரை ஓரளவு எளிதானது தான்.
சரி விசயத்துக்கு வருவோம்..
ஏன் நீட் கோச்சிங் இல்லாமல் அந்த பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க இயலாது ??
நீங்கள் பனிரெண்டாம் வகுப்புக்கு டென்னிஸ் குறித்து சிலபஸ் நடத்த வேண்டும் என்னவெல்லாம் நடத்துவீர்கள்?
- க்ராண்ட் ஸ்லாம் போட்டிகள்
- அவை நடைபெறும் நாடுகள்
- இதுவரை அதை வென்றவர்கள்
- டென்னிஸ் மைதானத்தின் அளவீடுகள்
- டென்னிஸ் பந்தின் எடை முதற்கொண்டு சிலபஸில் சேர்த்து அதை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் படிப்பார்கள்
"ஒரு டென்னிஸ் வீரர் நெட்டில் பந்தை சர்வ் செய்து ஃபால்ட் செய்து விடுகிறார் . அப்போது அந்த பந்து , டென்னிஸ் நெட்டின் ஓட்டைகளில் ஏதோ ஒன்றின் வழியாக மறுபுறம் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறதா?
இதற்கு நீங்கள் டென்னிஸ் பந்தின் டயாமீட்டர் தெரிந்திருக்க வேண்டும்.
டென்னிஸ் நெட்டின் ஒரு ஓட்டையின் நீள அகல அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் விடைகளில் ஒரு குழப்பு குழப்புவார்கள். அதையும் பாருங்கள்.
நான்கு சாய்ஸ் கொடுக்கப்படும்
சாய்ஸ் 2 - பந்து ஓட்டைக்குள் செல்லாது
மேற்சொன்ன இரண்டிலும் ஏதோ ஒன்றை செலக்ட் செய்வது எளிதானது
ஆனால் பிரச்சனையே அந்த மூன்றாவது மற்றும் நான்காவது ஆப்சன் தான்
சாய்ஸ் 3 - பந்து நெட்டுகளின் ஓட்டைகளுக்கு இடையில் இருக்கும் நைலானில் பட்டு அடித்தவர் பக்கமே
விழும் வாய்ப்பு 25%
சாய்ஸ் 4 - அடித்த பந்தானது ஓட்டைகளுக்கு இடையே உள்ள நைலானில் பட்டு பிசிறி அடுத்தவர் பக்கம் விழ வாய்ப்பு 25%
உங்களுக்கு டென்னிஸ் பற்றி தெரியும்
ஆனால் டென்னிஸில் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படலாம் என்று தெரியுமா?
இந்த கேள்விகளிலும் இயற்பியல் / கணிதம் அனைத்தும் வருகின்றன. ஆகவே இது அவுட் ஆஃப் சிலபஸ் என்று கூற இயலாது.
ஆனால் இது போன்ற கேள்விகளை கேட்பதன் நோக்கம் என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு விடையளித்து விடையளித்து பழகியவர்களால் இதில் தேற முடியும்.
இது போன்ற கேள்விகளை இதுவரை பார்த்திராதவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கும்
ஒரு கிரிக்கெட்பேட்ஸ்மேனை செலக்ட்செய்ய வேண்டுமென்றால்
அவருக்கு பந்து வீசிப்பாருங்கள்
எத்தனை பந்துகளில் அவர் அவுட் ஆகிறார்?
எத்தனை பந்துகளில் அவர் அடித்து ஆடுகிறார்?
என்று பார்த்தால் அது சரி
டியர் பேட்ஸ்மேன், உங்கள் முன் ஒரு பவுலர் 150 கிமீ/ ஹவரில் இன்ஸ்விங்கிங் யார்கர் வீசுகிறார்...
மைதானத்தில் பவுலருக்கு சாதகமாக 20 கிமீ/ஹவர் என்ற அளவில் காற்று வீசுகிறது...
இன்று காலை தான் மழை பொழிந்து ஓய்ந்துள்ளது...
இப்போது நீங்கள் அந்த பந்தை அடிக்க எந்த ஷாட் உபயோகிப்பீர்கள்?
எவ்வளவு வேகத்தில் உங்கள் பேட்டை சுழற்றுவீர்கள்?
உங்கள் பேட்டின் எடை எவ்வளவு இருக்கலாம் ?
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு தேர்ந்தெடுத்தால் நமக்கு சேவாக் கிடைத்திருப்பாரா?
இது போன்ற பல ஆயிரம் பல லட்சம் கேள்விகளுக்கு மாணவர்களை பழக்குகிறார்கள்.
ஏன் இத்தனை கடினமாக கேள்விகள் வைக்கப்படுகின்றன என்ற கேள்வி உங்கள் முன் எழலாம்?
உடனே சிலர் இது தாங்க க்வாலிட்டி என்று கூறலாம்
நீட்டுக்கு என்று பிரத்யேக பயிற்சி எடுக்க
இயலாத அன்றாடங்காச்சிகளின் பிள்ளைகள் நாடு முழுவதும் எங்கும் மருத்துவராகக் கூடாது என்பதற்காக மட்டுமே இப்படி கேள்விகள் வகுக்கப்படுகின்றன
இதுவே நிதர்சனம்
மாணவ மாணவிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை, மனச்சுமை காலவிரயம், பெற்றோர்களுக்கு பண விரயம், ஏழைகளை மருத்துவராகுவதை விட்டு தடுத்தது
இத்தனையையும் கொண்டு வந்ததைத் தவிர இந்த நீட் சாதித்தது ஒன்றும் இல்லை
படித்தேன் பகிர்ந்தேன்