• பெரியார் 1938-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்றதும், 1939-40-இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றதும் 1956-இல் மீண்டும் தமிழ்நாடு தமிழர்க்கே என்றதும் சந்தர்ப்பவாதமாகவே தெரிகிறது. திராவிடர் என்பதிலும் உறுதியில்லை; தமிழர் என்பதிலும் பெரியாருக்கு உறுதியில்லை.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் திருப்திப்படுத்தவே சொன்னதாகக் கூறுகிறார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் 16.01.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவில் இவ்வாறு பெரியார் கூறுகிறார்.
• தமிழர் என்றால் அதில் பிராமணர்களும் சேர்ந்து கொள்வார்கள்; திராவிடர்கள் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது என்று பெரியார் கூறினார். திராவிடர்களில் பிராமணர்கள் சேரமாட்டார்கள் என்பதற்கு ஆதரவாக ஏதாவது சான்றுகள் காட்டினாரா ? இல்லை !
• திராவிடர் என்ற சொல் தமிழர்களை ஒருபோதும் குறிக்காது. ஏனெனில் ஆரியர் சிந்து சமவெளிப் பகுதிக்குள் நுழையும் முன்பே இந்தியத் துணைக் கண்டமெங்கும் வளர்ச்சியடைந்த நாகரிகத்துடன், வளர்ச்சியடைந்த மொழியுடன், தமிழர் என்ற இன அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
தமிழர்கள்-தமிழர்கள்தாம்,
பிராமணர்கள்தாம் திராவிடர்கள்.
எந்த வகை ஆராய்ச்சிக்கும் இடங்கொடுக்காமல்,
"திராவிட" என்ற பெயரை தமிழர் தலையில் சுமத்தினார் பெரியார்.
"மகன் செத்தாலும் பரவாயில்லை,
மருமகள் தாலியறுக்க வேண்டும்"
என்று கொடுமைக்கார மாமனார் - மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு.
அப்படி தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.
அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்களது தேசிய இன அடையாளத்தை ஏந்தி எழும்போது,
தமிழ்நாடு மட்டும், "திராவிடன்" என்று அயலார் தூக்கி மாட்டிய இனப்பெயர்களை சிலுவையாய்ச் சுமந்து, சொந்தத் தமிழினப் பெருமிதங்களைத் தொலைவில் தள்ளி வைத்தது.
தமிழர்களை தான் திராவிடர்கள் என்றீர்கள் எனில்...
பம்பாய் - மும்பை ஆனதை போல்;
மெட்ராஸ் - சென்னை ஆனதை போல்;
சில சிக்கல்களை தீர்ப்பதற்காக,
திராவிடம் - தமிழ் என்றே ஆகட்டுமே.
மராத்தியர்க்கு உண்டா?
குசராத்தியர்க்கு உண்டா?
தெலுங்கர் - கன்னடர்க்கு உண்டா?
இல்லை!
தமிழர்களுக்கு மட்டும்தான் உண்டு.
நீங்கள் "தமிழர்" என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்று கூறிக் கொள்கிறீர்கள். அக்கூற்றிலாவது, நீங்கள் நேர்மையாக இருந்தால்,
இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் தமிழர் என்றே அழைக்கப்படும் தமிழர்களைத் "தமிழர்” என்றே அழையுங்கள் !
"திராவிடம்" என்று சொன்னால்தான் ஆரிய எதிர்ப்பு உறுதிப்படும் என்று சொல்லும் வாதத்தில் உள் நோக்கம் இருக்கிறது.
தமிழின அடையாளத்தை மறைப்பதுதான் அந்த உள் நோக்கம்!
#திராவிடம்_தகர்ப்போம்
ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்...
#திராவிடம்_தகர்ப்போம்