༺ தமிழ்ச்செழியன் ༻ Profile picture
இளங்கலை தமிழ் மாணவன் | தமிழாகவே வாழும் தமிழர்களில் ஒருவன் | தமிழ்த்தேசியன்
Mohammed Kasim (முஹம்மது காசிம்) Profile picture 1 subscribed
Jun 2, 2020 19 tweets 5 min read
#திராவிடம்_தகர்ப்போம்

• பெரியார் 1938-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்றதும், 1939-40-இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றதும் 1956-இல் மீண்டும் தமிழ்நாடு தமிழர்க்கே என்றதும் சந்தர்ப்பவாதமாகவே தெரிகிறது. திராவிடர் என்பதிலும் உறுதியில்லை; தமிழர் என்பதிலும் பெரியாருக்கு உறுதியில்லை. திராவிடம், திராவிடர் என்று பெரியார் சொன்ன தெல்லாம் இன ஆராய்ச்சியின் அடிப்படையில் அல்ல என்ற உண்மையைப் பெரியாரே இதோ போட்டு உடைக்கிறார்.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் திருப்திப்படுத்தவே சொன்னதாகக் கூறுகிறார்.
May 31, 2020 17 tweets 2 min read
தேசம் என்றால் என்ன ?

சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்து விட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின் ஒரு தேசத்திற்கு
முதல் தேவை - தாயக மண்,
இரண்டாவது தேவை - பொது மொழி,
மூன்றாவது தேவை - பொதுப் பொருளியல்,
நான்காவது தேவை - பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம்' , 'நம்மவர்' என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

(நூல் : தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை - தொகுதி : 1)
Apr 21, 2020 295 tweets >60 min read
#குற்றியலுகரம்
என்பது
குறுமை + இயல் + உகரம்.

ஒரு சொல்லின் உடைய கடைசியில் வரும் வல்லின உகரம் ஆனது குற்றியலுகரம்.

(எ.கா: காசு)
பசு என்ற சொல்லையும்,
காசு என்ற சொல்லையும், சொல்லிப்பாருங்கள்.
பசு - சு நீண்டு ஒலிக்கும்.
காசு - சு சுருங்கி ஒலிக்கும்.
இந்த சுருக்கம் தான் குற்றியலுகரம். #குற்றியலுகரம் பற்றி தொல்காப்பியம் கூறும்
#சூத்திரம்

ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.

இங்கு "ஈரெழுத்து ஒருமொழி" என்பது நெடில் என்று பொருள்.

ஈரெழுத்து ஒருமொழி - இரண்டு மாத்திரை கொண்ட ஒரு எழுத்து - நெடில்
Apr 17, 2020 388 tweets >60 min read
#இலக்கணம்_கற்போம்

முன்னுரை:

தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன. கடைச்சங்க நூல்கள் சிலவை கிடைத்தாலும் பல நூல்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
அப்படி அழியாமல் காக்கப்பட்ட சில நூல்கள்: பின்வருமாறு...
Apr 10, 2020 9 tweets 1 min read
• உலகம் ஒன்று, மனிதகுலம் ஒன்று என்ற மனிதநேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனிதகுலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை?
இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன. மொழியும் இனமும் முகாமையான பங்கு வகிக்கின்றன.