My Authors
Read all threads
மரண விலாஸ் - பீத்தக்களை:
ரெண்டு நாளா இந்த டாபிக் ஓடிக்கிட்டு இருக்கு. நான் ஏன் இத பத்தி பேசவே இல்லன்னு நிறைய பேரு நினைச்சிருக்கலாம். ஏன்னா அந்த மரண விலாஸ் க்ரூப்ல நானும் இருக்கேன். நானும் பேசியிருக்கேன். ஆ நீங்களுமான்னு அதிர்ச்சி ஆகறவங்களுக்கு... விரும்பம் இருந்தா மேல படிக்கலாம்
ரெண்டு நாளா பேசாம இருந்ததுக்கு காரணம் இதனால hurt ஆனவங்களுக்கு அதுக்கான நியாயமான காரணம் இருக்கும். இதுக்கு hurt ஆகக்கூடாது, கடந்து போகணும்னுலாம் நான் இங்க பேச வரல. வெள்ளிக்கிழமையே ரசனை அவர் டிவிட்ல என் பேரு, ராஜன், பிளி பேரலாம் மென்ஷன் பண்ணியிருந்தார்...
அவர் டிஎல்ல சொன்னப்பறமும் கண்டுக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு டிஎம்ல எங்கள் சார்ப்பான விளக்கத்த குடுத்துட்டு hurt பண்ணியிருந்தா sorry னும் சொல்லிட்டேன். இப்ப பேசப்போறது விமர்சனத்தை தாண்டி மொத்த narrative ஐ மாத்தி கொண்டு போறாங்க... Intention க்கு புது புது அர்த்தம் சொல்றாங்க
அதற்கான விளக்கம், அதுல இருக்கற hypocrisy பத்தி மட்டுமே. நிறைய பேரு வைக்கற குற்றச்சாட்டு internet ல நாங்க என்ன பண்ணும்னு நீ ஏன் முடிவு பண்ற, நான் போடற டிவிட், போட்டோல உனக்கு என்ன பிரச்சனை, இதுலாம் விவாதிக்கவே கூடாத டாபிக், அதற்கான ஒரு நியாயமான காரணத்த சொல்லுங்கன்னு
ரெண்டு வருஷம் முன்னாடி பேஸ்புக்ல ரெட் வெல்வெட் கேக் பதிவு ஒண்ணு வந்துச்சு. அங்க போட்டு அந்தம்மாவ அடிச்சி டிவிட்டர்லயும் வந்து அடிச்சாங்க. இன்னிக்கு எங்கள கேள்வி கேட்கறவங்களும் அதுல அடக்கம். அந்தம்மாவ அடிச்சது ஏன் உங்களுக்கு தப்பா தெரியல... அந்தம்மா பண்ணது பெரும பீத்தகலை தான்
அவங்க internet, அவங்க போட்டோன்னு ஏன் அந்த சுதந்திரம் குடுக்கல. ஏன்னா அது நமக்கு தப்பா பட்டுச்சு. கேட்டோம். மூணு வாரம் முன்னாடி trackers gold winner promote பண்ணாங்க. அப்பவும் சந்தே சேர்ந்து அடிச்சிது. அப்ப ஏன் அது அவங்க internet னும், அவங்க விருப்பம்னு தோணல? அவன் மேல வந்து
Vertified account வாங்கிட்டான் நம்மாள முடியலன்னு அந்த வயித்தெரிச்சல்ல தான் இப்படி பேசறோம்ன்னு ஏன் நம்மளயே கேள்வி கேட்டுக்கல? நேத்து கூட ஒரு brahmin பூணுல் தெரிய போட்டோ போட்டதுக்கு இங்க மாத்து விழுந்துச்சு... அப்பவும் இதே stand தான். தப்பு. கேட்கறோம்னு...
உங்களுக்கு தப்புன்னு தெரிஞ்சா கேட்கறீங்க பேசறீங்க... நீங்க சொல்ற எந்த ரூலும் follow பண்றதில்லை. இதான் hypocrisy. இது சம்பந்தமா ஒரு டிவிட் பார்த்தேன்... உங்கள பாதிக்கலன்னா சும்மா இருக்க கூடாது... தப்புன்னு கேட்கணும்... Integrity ந்னு. நாங்க பண்ணதும் exactly அதான்.
இதுலாம் ஒரு தப்பான்னு கேட்கலாம்... நீங்க Red Velvet cake அ தப்புன்னு பட்டு கேள்வி கேட்டத தான் நாங்க broad ஆ ஒரு டிஸ்கஷன் பண்ணோம். வேற என்னலாம் இப்படி பண்றாங்கன்னு. விவாதம் ரொம்ப ராவா போனதுல எனக்கு மாற்றுக்கருத்தில்ல. ஆனா பேசவே கூடாதுங்கற டாபிக் இல்ல இது என்பது தான் என் பாயின்ட்
அடுத்து பரவலா சொன்னது பொறாமை, வயித்தெரிச்சல், இவனால இப்படி முன்னேற முடில, விசா வாங்க வக்கில்லன்னுலாம். இதை சிரிச்சிட்டு மட்டுமே கடந்து போறேன். அதுல பேசனவங்க யாருக்கு அப்படி ஒரு நிலைமை இல்லைங்கறத மட்டும் சொல்லிக்கறேன். இத மேல explain பண்ணா ரெட் வெல்வெட் கேக் ஆகிடும் 😉
அப்பறம் போட்டோ போட்டாலே தப்பு, எது சொன்னாலும் பீத்தக்களைன்னு நாங்க சொன்ன மாதிரி இங்க ஒரு narrative. அந்த பாட்காஸ்ட் கேட்டீங்களா இல்ல நீங்க கேட்கணும்னு விருப்பப்பட்டத மட்டும் கேட்டீங்களான்னு தெரில. excessive ஆ அத பண்றவங்க, unrelated ஆ அத பண்றவங்க பத்திலாம் மட்டுமே பேசியிருப்போம்
Again நீங்க என்ன முன்முடிவோட அனுகறீங்க என்பதை பொருத்து perspective மாறும். ஆண்கள் பெருந்தன்மையா இதலாம் கடந்து போவாங்க என்கிற இமேஜ இத உடைச்சிடுச்சுன்னு ஒரு குற்றச்சாட்டு. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இந்த மாதிரி... இந்த மாதிரின்னா exact ஆ இந்த டாபிக் இல்ல...
அடுத்தவங்கள பத்தி உங்க வாட்சப் க்ரூப்லயே வேற க்ரூப்லயோ நீங்க டிஸ்கஸ் பண்ணதில்ல? ஒருத்தவங்கள விட இன்னொருந்தவங்க நல்லா காமெடி பண்ணறாங்கன்னு ஒரு பெண் சொன்னதுக்கே க்ரூப்பா சேர்ந்து அடிச்சாங்க. அப்பலாம் ஆண்கள் பெருந்தன்மையா கடந்து போற character கண்ணுக்கு தெரியலையா?அப்பலாம் ஏன் கேட்கல?
பெர்சனலா அட்டாக் பண்ணாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. அது தப்பு தான். ஆனா அதுக்கு எதிர்வினையா நீங்க செஞ்சது என்ன? அதே தானே. கார்க்கிலாம் இதுல சம்பந்தப்படவே இல்ல. அவர இழுத்துப்போட்டு பெர்சனலா அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. நீ பண்ண நாங்க பண்ணோம். ஏத்துக்கொள்ளக் கூடிய விவாதம் தான்
ஆனா இதுக்கு முன்னாடி நீங்க அதலாம் பண்ணதே இல்லையா. இதுல பண்ணது தப்புன்னு தெரிஞ்சதால தான் பொங்கி எழுந்து முதல்முறை நீங்களும் அப்படி பண்ணீங்களா? Again hypocrisy. இன்னொரு கேள்வி விமர்சனம் ஏன் முகமூடி போட்டுக்கிட்டு பண்ணாங்க தைரியமா பேர் சொல்லிட்டு பண்ணியிருக்கலாமேன்னு
ஆரம்பத்துல இருந்தே இந்த podcast ல anonymity maintain பண்றோம். இது conscious ஆ பண்ணது. நாம தான் பேசறோம்ன்னு தெரிஞ்சா எல்லா கருத்தையும் personality கூட tag பண்ணி பார்ப்பாங்கன்னு. ராஜன் வாய்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சதால அது மட்டும் எல்லாரும் guess பண்ணிட்டாங்க.
இதுக்கு முன்னாடி podcast நல்லாருக்குன்னு சொன்னப்பவும் நாங்களாம் முன்ன வந்து நாங்க தான் பேசனோம்னு சொல்லல. இப்ப மட்டும் ஏன் எதிர்ப்பார்க்கறாங்கன்னு தெரியல. இப்ப கூட ரசனை அவரோட பெருந்தன்மையான டிவிட்ல என் பேர சொன்னதால தான் பேசறேன். அவர் எந்த intentions ம் இல்லாம
இத யதார்தமா போட்டதா தான் நம்பறேன். Actual ஆ இந்த podcast record ஆகி ரெண்டு வாரம் ஆகுது. எடிட் பண்ணி கேட்ட எங்களுக்கே இது ரசனைக்கு direct reference இருக்கு... வேணாம்ன்னு தூக்கி ஓரமா வச்சிருந்தோம். போன வாரம் ரசனை நடத்தன stand up comedy ல நாங்க பேசன அதே
சாப்பாடு போட்டோவ வச்சி அவர கலாய்ச்சாரு அவர் நண்பர். அத அவர் அங்கயே ரசிச்சி public public ந்னு சொன்னாரு. அடுத்த நாள் அவர் சாப்பாடு போட்டோ போட்டப்ப அந்த நண்பர் வந்து நேத்து மட்டும் public public ந்னு சொன்னீங்க கேட்டதுக்கு அதையும் ரசனை sportive வா தான் எடுத்திக்கிட்டாரு.
இத பார்த்துட்டு தான் சரி போடலாம்னு முடிவு பண்ணோம். May be its a mis calculation. முடிவா சொல்றது இது தான். பேசக்கூடாத டாபிக் இல்ல... எல்லாரும் இப்பவும் டிஎல்ல கலாய்க்கற red velvet tweet வகையறா டாபிக் தான். அது பேசப்பட்ட விதத்துல சில எல்லைகள் மீறப்பட்டிருக்கலாம்.
நீ விமர்சனம் பண்ணலாம் நாங்க பண்ணக்கூடாதான்னு கேட்கறவங்களுக்கு விமர்சனம் பண்ணுங்க.. ஆனா narrative, intentions அ மாத்தாதீங்க. என்னமோ இத பல நாள் plan பண்ணி திட்டம் போட்டு வாய்ப்பு வருவாக்கி வஞ்சம் தீர்த்துக்கிட்ட மாதிரி
ஒரு image build பண்ணாதீங்க. It was a spontaneous discussion with out any preparation. நாங்களும் பீத்தக்களைன்னு கூட சொல்லியிருப்போம். Quote tweets ல நம்ம ஆசைய தீர்த்துப்போம்னு. நாங்க தூய்மையானவங்க எல்லாருக்கும் மேல, எங்களுக்கு கீழ இருக்கவங்களாம் சில்லறைங்கன்னு நிச்சயம் சொல்லல
போட்டோ போடறதே பீத்தக்களைன்னும் சொல்லல. அது intention ம் இல்லை. இதுக்கு எங்கள racist, rapist கூடலாம் கம்பேர் பண்ணி ஒரு டிவிட் பார்த்தேன். அவ்வளவு மோசமாவங்க இல்ல நாங்க. 😉😉 ரசனை தாண்டி hurt ஆனவங்களும் மென்ஷன்ல விளக்கம் குடுத்தோம். அதுக்கு கூட பேசறதலாம் பேசிட்டு இப்ப என்ன
புஜுக் புஜுக் பண்றாங்கன்னு கேட்டாங்க. மனசாட்சி படி பண்ணோம். அவ்ளோ தாங்க சொல்ல வந்தது. இதையும் கேட் பண்ணி திட்டறவங்க திட்டலாம். Unfollow பண்றவங்க பண்ணிக்கலாம். இனிமே ரெட் வெல்வெட் டிவிட் சீண்டல்களும் இருக்காதுன்னு நம்பறேன். ஓ இதலாம் நான் சொல்லக்கூடாதுல்ல...
நீங்க விருப்பப்பட்டத பண்ணுங்க. ஆனா மென்ஷன்ல கேள்வி கேட்டா பதில் வராது. ஏன்னா சொல்ல வந்த விளக்கதை முழுசா இங்கயே சொல்லிட்டேன். BTW podcasts கள் தொடரும். நன்றி. வணக்கம் 🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with திரு

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!