யோசித்துப் பாருங்கள்…
7000 ஆயிரம் பாடல்கள் என்றால்…..
7000 பல்லவிகள் மற்றும் 7000 சரணங்கள் !
மேலும், ஒரு பாடலுக்கு மூன்று பிஜிஎம் (Back Ground Music) என்னும் கணக்கில்… 21 ஆயிரம் விதவிதமான இசைக் கோர்வைகள் !
ஆம்,
அப்போது வாரத்துக்கு ஒரு பாடல் என்னும் கணக்கில் இளையராஜா தன் படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார் !
ஒரு பாடலை எப்படித் துவக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ரிஸ்க்கான விஷயம் அது !
புதுமையாக ஆரம்பிக்க வேண்டும், முந்தைய எந்தப் பாடலின் சாயலும் இருந்துவிடக் கூடாது..!
அந்தப் பாடலின் மூடுக்கு ஏற்ற வாத்தியக் கருவியாக அது இருக்க வேண்டும் இப்படி எத்தனை எத்தனையோ சவால்கள் ஒரு பிஜிஎம் முக்கு உண்டு !
விதவிதமான ராகங்கள் – விதம் விதமான தாளங்கள் – விதம் விதமான குரல்கள் – ஸ்தாயிகள் – இசைக் கருவிகள் ! பாடல்களுக்கு மட்டும் இவ்வளவு.
இதுவரை , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு படத்தின் ஓட்ட நேரம் இரண்டரை மணி நேரம் ! எனில், 1000 x இரண்டரை மணி நேரம்.
படிப்பதற்கே, நமக்கு மூச்சு வாங்குகிறதல்லவா…?
அது தான் இளையராஜா..!
🙏
@teakkadai1 @TheMaestroRaja @llayaraja @cinemascopetaml @thirumarant @sArAvAnA_15