01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு +
05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. +
09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். +
12. *கடல்* - (Sea) சமுத்திரம்.
13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். +
15. *கால்* – (Channel) நீரோடும் வழி. +
17. *குட்டம்* -(Large Pond) பெருங்குட்டை.
18. *குட்டை* -(Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர்நிலை.
19. *குண்டம்* -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை.+
21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று. +
24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் +
27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை. +
31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை. +
34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)+
36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு. +
39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் +
41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.+
45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம். +
*இது உழவு பகிர்வு*
விவசாயம் மறந்த தமிழர்களுக்கான நினைவூட்டல்.