My Authors
Read all threads
இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். நிகமாந்த மகா #தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். Image
நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப்
புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. #ஸ்ரீநிகமாந்தமஹாதேசிகர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்து வந்தார். அவரை அரசவைக்கு அழைத்துத் தூதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன்,
‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார். திருவரங்கநாதன் பாதுகை மேல் ஓரிரவில் 1000 ஸ்லோகங்கள் #ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் எழுதினார். பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை இறைவன் Image
திருவடிகளுக்கு உண்டு. ஆகையால் தான் பெருமாள் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்தனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நம் தலையெழுத்து நன்றாக இருக்கும். இறுதியாக
இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது! தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.
எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன். இராம ராஜ்ஜியத்தை விட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளலாம். திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக
வைத்து #ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் ஸ்லோகம் முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கின்றன. இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஒரு ஜாமத்தில் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் தேசிகர் எழுதி முடித்தார் என்பது தான் இதன் சிறப்பு.
ஸ்ரீமதே ரமானுஜயாய நமஹ
ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பரபரஹ்மானே நமஹ
ஸ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நமஹ
சுவாமி நிகமாந்த மகா தேசிகன் திருவடிகளே சரணம்
தனியன்
ஸ்ரீமான் வெங்கடாநாதார்ய: கவிதிகார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் சதா ஹ்ருதி
#ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்
1, ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா:
ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:

பொருள் – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது ஆபரணம் போன்று, அலங்காரமாக ஏற்கின்றனர்.
அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர்.

விளக்கம் – இந்தச் ச்லோகத்தின் மூலம், நம்மாழ்வாரின் புகழை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கநாதனின் Image
பாதுகை என்பது நம்மாழ்வாரையே குறிக்கும். ஆக, நம்மாழ்வாரைத் தங்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே என்று கூறுகிறார்.
2. பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்I
யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம்
பிரதித: ராகவ பாதுகா ப்ரபாவ:II

பொருள் – பரதனின் மூலம் ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு உள்ள பெருமைகள் முழுவதும் அனைத்து உலகங்களுக்கும் உணர்த்தப்பட்டன. இதன் மூலம் பலரும் பக்தி அடைந்தனர்.
இப்படிப்பட்ட பரதாழ்வானுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் என்றும் உரித்தாக வேண்டும்.

3. வர்ணஸ்தோமை: வகுளஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந்நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:
பொருள் – ஹே ஸ்ரீரங்கநாத பாதுகே! உன்னை வணங்கி ஸ்தோத்ரம் செய்யவேண்டும் என்று நான் எண்ணியுள்ளேன். இதனால் செய்தது என்ன? மகிழ மலர்கள் பல வைத்துக் கட்டப்பட்ட மாலையை ஒத்த மணம் வீசும்படியாக நம்மாழ்வாரின் சொற்கள் என்னும் மலர்கள் கொண்டு கட்டப்பட்ட மாலையாக, தமிழ்வேதமாகிய திருவாய்மொழி உள்ளது
வேதத்திற்கு இணையாக உள்ளது போன்று இத்தகைய திருவாய்மொழியைக் கூறியது யார் என்றால் – எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடியையே சிந்தித்தபடி உள்ள நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வார், உனது பெயரான பாதுகை (சடாரி) என்றே கூறப்படுகிறார். அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.
திவ்ய ஸ்தாநாத் த்வம் இவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாத ந்யாஸம் ப்ரதமம் மநகா பாரதீ யத்ர சக்ரே
யோக க்ஷேமம் ஸகல ஜகதாம் த்வயி அதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே

பொருள் – பாதுகையே! ஸத்ய லோகத்தில் இருந்து ஸ்ரீரங்கநாதனை நீயே அயோத்திக்கு எழுந்தருளச் செய்தாய்.
உன்னைத் தொடர்ந்து வந்த சரஸ்வதி, அயோத்தி இராமனின் காவியமான இராமாயணத்தின் வாக்குகளை வால்மீகிக்கு அளிக்கும் விதமாக பூமிக்கு வந்தாள். இத்தகைய வால்மீகி முனிவர் எனக்கு சிறந்த சொற்களை அளிக்கவேண்டும்
5. நீசே அபி ஹந்த மம மூர்த்தனி நிரவிசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேத ஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எப்படிப்பட்டவை என்றால் – மிகவும் உயர்ந்த பொருளான வேதங்களின் தலைகளிலும் உள்ளன; மிகவும்
தாழ்ந்தவனான என் போன்றோர் தலைகளிலும் உள்ளன. இது வியப்பல்லவா? வால்மீகி போன்ற உயர்ந்தவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை நானும் ஸ்தோத்திரம் செய்யப் போகிறேன்.

6. தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத்
வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி:
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:

பொருள் – என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன? இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன. Image
மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

7. விஜ்ஞாபயாமி கிம் அபி ப்ரதிபந்ந பீதி:
ப்ராகேவ ரங்கபதி விப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமா: ஸதஸதீ விகத அப்யஸூயா:
ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதிக்க நான் இந்த ஸ்லோகங்களை எழுதத் தொடங்கும் முன்னர் (நான் இதனை எழுதத் தகுதி உள்ளவனா என்னும்) ஒரு விதமான பயம் ஏற்படுகிறது. இதனை நான் இங்கு ஒரு விண்ணப்பமாகச் செய்கிறேன் . அது என்னவெனில் –
இந்த உலகில் உள்ள நல்லவை, தீயவை ஆகியவற்றை அறியும் திறன் உடைய பெரியோர்கள், மிகுந்த தயை செய்து, நான் இயற்றிய இந்த ஸ்லோகங்களை, பொறாமை நீங்கிய கருணை கொண்ட மனதுடன் கேட்க வேண்டும்.
8. அச்ரத்ததானநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே
தஸ்ய ஏவ தேவி பதபங்கஜயோ: யதா த்வம்

பொருள்–உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ச்ரத்தையும் இல்லாதவன் ஆவேன். ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயதிரும்படி
நீ என்னைப் பணிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை. அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

9. யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம்

பொருள் – கம்ஸனின் சத்ருவாகிய க்ருஷ்ணனின் அழகான திருவடிகளில் உயர்ந்த கற்களுடன் உள்ள பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவனாக நம்பெருமாள் உள்ளான். அனைத்தும் வந்து சேரும் இடமாகவும் அவனே உள்ளான்.அப்படிப்பட்ட நம்பெருமாளையே நீ
ஒருத்தியாகத் தாங்குகிறாயே! மேலும் அவனுக்கு ஏற்ற அழகான நடையையும் நீயே அளிக்கிறாய். உனது பெருமைகளை ப்ரம்மன், சிவன் போன்றவர்களால் கூட அறிய இயலாது. அப்படி உள்ளபோது, அற்ப கவியான என் போன்றவர்கள் துதிக்கும் விஷயமாக நீ எப்படி உள்ளாய்?

10. ச்ருத ப்ரஜ்ஞா ஸம்பந் மஹித மஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதி குஹரகண்டூஹர கிர:
அஹம் து அல்ப: தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமண பாதாவநி! விது:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பாதுகாத்து வரும் பாதுகையே! சாஸ்திர ஞானம் மூலமும், தங்களுக்கே உரிய ஞானம் மூலமும் பல பெரியவர்கள் உன்னை
எவ்வளவோ துதி செய்துள்ளனர். அவர்கள் துதியானது காதுகளின் துளைகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாக உள்ளன. ஆனால் இது போன்ற ஞானம் ஏதும் இல்லாத நான், உன்னைக் குறித்துப் பிதற்றுகின்றேன். இதனையும் உனது செயல் என்றே பெரியவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பத்துப் பாடல்களை பயில
youtube.com/watch?v=GoKYBa… Image
11. யத் ஏஷ: ஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி தத:
மஹிம்ந: கா ஹாநி: தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்து: பகவதீ
தத் ஏஷ: கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தா பரஹித:

பொருள்–ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம், வீர்யம் என்ற ஆறு குணங்களுடன் கூடிய நம்பெருமாளின் திருவடிகளைப்
பாதுகாக்கும் பாதுகையே! அற்பனான நான் உன்னைத் துதித்து ஸ்தோத்திரம் இயற்றினால் உனது மேன்மைக்கு குறைவு ஏதும் உண்டாகப் போவதில்லை. ஆனால் அதன் மூலம் எனக்கு எல்லையற்ற நன்மைகள் உண்டாகின்றன. நாய் ஒன்று கங்கை நீரைக் குடித்தால் கங்கைக்கு குறைவு ஏதும் ஏற்படாது; மாறாக நாய்க்கு நன்மை Image
ஏற்படுகிறது அல்லவா?

12. மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா
மத் உக்தி: த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே
ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே
முஹு: வாத்யா தூதே முகபவந விஷ்பூர் ஜிதமிவ

பொருள் – ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே! உன்னுடைய
தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்வாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய். இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே – காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி
உள்ளது என்றால் – பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும். வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று, எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?

13. நிஸ்ஸந்தேஹ நிஜ அபகர்ஷ விஷய உத்கர்ஷ: அபி ஹர்ஷ உதய
ப்ரத்யூட க்ரம பக்தி வைபவ பவத் வையாத்ய வாசாலித:
ரங்காதீச பதத்ர வர்ணந: க்ருத ஆரம்பை: நிகும்பை: கிராம்
நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவி: நாஸீரம் ஆஸீததி

பொருள் – எனது தாழ்மையும், நான் ஸ்தோத்ரம் செய்ய முற்படும் பாதுகைகளின் உயர்வையையும் பற்றிச் சந்தேகம் இன்றி நான் உணர்வேன். ஆயினும் எனது
எல்லையற்ற மகிழ்வு, எல்லையற்ற பக்தி காரணமாக துணிச்சல் மிக வந்தது என்றே கூறவேண்டும். அதனால் நான் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் விஷயமாகத் தாறுமாறான சொற்களைக் கொண்டு இவற்றைக் கூறுகிறேன். இதன் மூலம் தாறுமாறாகக் கவிதை இயற்றக்கூடியவர்களில், வேங்கடேசன் என்கிற நான், முதலிடத்தைப் பிடிக்கிறேன். Image
14. ரங்கக்ஷ்மாபதி ரத்நபாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா:
ச்லாகா கூர்ணித சந்த்ரசேகர ஜடா ஜங்கால கங்காபய:
த்ராஸாதேச விச்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய

பொருள் – உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத்
துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும் போது அவனது சடைமுடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசை உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தை ஒத்துள்ளது. அந்த கங்கை நதியானது, தான் Image
ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல் கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடிவரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.

15. ஹிமவந் நளஸேது மத்யபாஜாம்
பரத அப்யர்ச்சித பாதுகா அவதம்ஸ:
அதபோதநதர்மத: கவீநாம்
அகிலேஷு அஸ்மி மனோரதேஷு
அபாஹ்ய:

பொருள் – பரதனால் ஆராதிக்கப்பட்ட ராமனின் பாதுகையை எனது தலைக்கு அலங்காரமாகக் கொண்டேன். உடனே ஏற்பட்டது என்ன? இமயம் தொடங்கி வானர வீரனான நளன் கட்டிய ஸேது வரை உள்ள அனைத்து கவிஞர்களையும் விட நான் உயர்ந்த மேன்மை பெற்றுவிடுவேன்.

16. அநிதம் ப்ரதமஸ்ய சப்தராசே: Image
அபதம் ரங்கதுரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எப்போது உண்டானவை என்று கூற இயலாதபடி எக்காலத்திலும் இருந்து வரும் வேதங்கள் கூட உன்னை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது. இப்படிப்பட்ட உன்னை, எனது அறியாமை காரணமாக,
பயம் சிறிதும் இன்றி ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கிவிட்டேன். இதன் மூலம் ஸ்ரீரங்கநாதன் மனம் மகிழ்ந்து புன்முறுவல் செய்கிறான் (நான் அவனை மகிழ்விக்கிறேன்).

17. வ்ருத்திபி: பஹுவிதாபி: ஆச்ரிதா
வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்கபதி ரத்ந பாதுகே
நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்

பொருள் –ஸ்ரீரங்கநாத
திருவடிகளை உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டவளாக அலங்கரிக்கும் பாதுகையே! நாட்டியம் ஆடுபவள் எவ்வாறு பலவித பாவங்களை வெளிப்படுத்துவாளோ, அது போன்று வேங்கடேசன் என்ற கவி மூலம் வெளிப்படும், உன்னைப் பற்றிய பலவிதமான புகழாரங்கள் அடங்கிய சொற்கள், உன்னை வணங்கிச் சேவிக்கவேண்டும்.
18. அபார கருணாம்புதே: தவ கலு ப்ரஸாதாத் அஹம்
விதாதும் அபி சக்நுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரிபாதுகே தவ குண ஔக லேச ஸ்திதே:
உதாஹ்ருதி: இயம் பவேத் இதி மிதாபி யுக்தா ஸ்துதி:

பொருள் – ஸ்ரீஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! நீ எல்லையற்ற கருணைக் கடலாக உள்ளாய். இதன் மூலம் உன் மீது பல
லட்சம் ஸ்லோகங்கள் என்னால் இயற்ற முடியும். ஆயினும் இத்தனை லட்சம் ஸ்லோகங்களும் உன்னைப் பற்றி முழுமையாகக் கூற இயலாமல் இருக்கும். எனவே உதாரணமாக இங்கு சில ஆயிரம் மட்டுமே போதுமானது என முடிவு செய்தாய் போலும்.

19.அநுக்ருத நிஜநாதாம் ஸூக்திம் ஆபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா:
நிசமயதி யதா அஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது மனதிலும் வாக்கிலும் சொற்கள் எப்படி வரவேண்டும் என்றால் – உனது ஒலியானது, தான் நடக்கும் போது எத்தனை இனிமையாக உள்ளது என்று ஸ்ரீரங்கநாதன் நினைத்துக் கொள்வானோ அதுபோல் இருக்க
வேண்டும். இவ்விதம் உனது நாதத்தை என் மூலம் நீ வெளிப்படுத்த வேண்டும். இதன் சுவாரஸ்யத்தில் அவன் மயங்கி, ஸ்ரீரங்கநாச்சியாருடன் விழித்திருந்து நான் கூறும் இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். ஆகவே எனது வாக்குகள் அவனுக்கு இன்பமாக இருத்தல் வேண்டும்.

20. த்வயி விஹிதா ஸ்துதிரேஷா
பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே
ததுபரி க்ருதா ஸபர்யா
நமதாம் இவ நாகிநாம் சிரஸி

பொருள் – பெருமாளின் திருவடிகளில் செய்யப்படும் பூஜை தேவதைகளின் தலையில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதே போன்று நான் உன்னைத் துதித்து இயற்றும் இந்தச் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் திருவடிக்கும் சென்று சேர்கிறது. Image
21. வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ:

இந்தப் பத்ததி முழுவதும் நம்மாழ்வாரையும் பாதுகையையும் இணைத்துப் போற்றுகிறார்.
பொருள் – சடகோபன் என்னும் நம்மாழ்வார், பாதுகை ஆகிய இருவருமே நம்பெருமாளின் திருவடிகள் மீது மிகுந்த ஆசை Image
கொண்டுள்ளனர். இவர்களை நான் வணங்குகிறேன். இவர்கள் இருவருக்குமே சடாரி என்னும் திருநாமம், எனது மனதை வென்றதன் மூலம் அர்த்தம் கொண்டதாக ஆனது.

22. த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயம் ஏவ மாநநீய:

பொருள் – அனைவராலும்
போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஏனென்றால் அவர் அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே.

23. நியதம் மணி பாதுகே ததாந:
ஸ முநி: தே சடகோப இதி அபிக்யாம்
த்வத் உபாச்ரித பாத ஜாத வம்ச
ப்ரதிபத்யை பரம் ஆததாந ரூபம்

பொருள் – இரத்தினக் கற்கள் பதிந்த பாதுகையே! நீ அடைந்துள்ள நம்பெருமாளின் திருவடிகளிலிருந்து உண்டான சூத்திரவம்சத்தில் நம்மாழ்வார் தோன்றினார். உன் மீது கொண்ட உயர்ந்த பக்தியை உணர்த்தவே அவர் சடகோபன்
என்ற திருநாமத்தை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக அப்பிறப்பில் அவதரித்தார். மற்ற வர்ணங்கள் பாதுகையின் தொடர்பில்லாத அவயவங்களில் தோன்றியதால் அவை தாழ்ந்தவையே. இக்குலத்திற்கு மட்டுமே பாதுகையின் தொடர்புள்ளதால் மற்ற வர்ணத்தைவிட இது உயர்ந்ததே என்பதன் மூலம் இக்குலத்திற்கு கௌரவம் அளித்தார்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!