வளர்ச்சி எனும் பெயரில் பேராபத்திற்கு இட்டுச்செல்லும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020ஐ திரும்ப பெறக்கோரி குரலெழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையுடன் கை கோர்த்து உங்கள் கருத்தினை மின்னஞ்சல் - 1/3
மூலமாக பதிவு செய்ய கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும். இவ்விணைப்பு உங்கள் மின்னஞ்சலின் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (MoEFCC) அனுப்ப வேண்டிய மடலை உள்ளடக்கியது. மடலின் இறுதியில் தங்களது பெயரை இணைத்து அனுப்பவும் - 2/3
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22