ஸ்னேக் பாபு Profile picture
Aug 1, 2020 7 tweets 2 min read Read on X
பள்ளிக்கூடத்துக்கு கட்ட பணம் இல்லையா? கல்விய இலவசமாக்கு.

சாப்பாட்டுக்கே வழியில்லையா? இலவச சத்துணவு போடு.

போட்டுக்க நல்ல துணிமணி இல்லையா? இலவச சீருடை கொடு, போட்டுக்க செருப்பு கொடு.

நோட்புக் வாங்க காசில்லையா? எல்லாத்தையும் இலவசமா கொடு, பை, ஜாமெட்ரி பாக்ஸ் சேர்த்து கொடு.

👇 Image
பஸ்சுக்கு காசில்லையா?இலவச பஸ்பாஸ் கொடு,சைக்கிள் கொடு.
பதினொன்னாவது சேருற எல்லா பிள்ளைகளுக்கும் லேப்டாப் கொடு

பெண்பிள்ளைய படிக்க வெக்காம கல்யாணம் பண்றாங்களா? பத்தாவது முடிச்சா பன்னெண்டாவது முடிச்சா கல்யாணத்துக்கு உதவித் தொகை கொடுக்கிறோம்னு சொல்லு பெண்பிள்ளைகளுக்கு நாப்கின்கொடு
பெயிலாகிட்டா படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பிடுவாங்களா? எட்டாவது வரைக்கும் ஆல்பாஸ் கொடு.

பாடத்திட்டத்துல ஏற்றத்தாழ்வு இருக்கா? எல்லாருக்கும் சமச்சீர்கல்வி கொடு.
உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கத்துக்கொடு.
சிறுபான்மைசமூகப் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடு.
முதல்தலைமுறைப் பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் கொடு.

உயர்கல்வில நுழைய கோச்சிங் போகமுடியாது. நுழைவுத்தேர்வுகளை நீக்கு. எல்லா சமூகங்களுக்கும் இடங்களைப் பகிர்ந்து கொடுக்க இடஒதுக்கீடு கொடு.
இப்படியெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்து புள்ளைங்கள படிக்கவெச்சு திராவிடம் சாதிச்சது தான்டா 49% GER. ஆண்பிள்ளைகளுக்கு சமமா பெண்பிள்ளைகளும்.

இப்ப 3 5 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரதும், ஆங்கிலம் கத்துக்கிற வாய்ப்ப மட்டுப்படுத்துறதும், ஒன்னுத்துக்கும் உதவாத சமஸ்கிருதம்
இந்திய திணிக்கிறதும், தொழிற்கல்வி கொண்டுவரதும், எல்லா உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரதும் யார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க? யார் வீட்டுப்பிள்ளைகள குலத்தொழில் பாக்க வீட்டுக்கு அனுப்ப?
தமிழகத்தோட கல்வி வளர்ச்சில பாதி கூட காமிக்காத விளங்காத பயலுக நீங்க யாருடா எங்களுக்கு சட்டம் போட?
தூசிதட்டி பெயிண்ட் அடிச்சு மத்திய பாஜக அரசு கொண்டுவரும் இந்த ஈராயிரமாண்டு பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தமிழகம் நிராகரிக்கிறது!

எதிர்ப்புகள் வலுப்பெறும்!

#TNrejectsNEP2020

நந்தினி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஸ்னேக் பாபு

ஸ்னேக் பாபு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @isnakebabu

Jun 9, 2022
அண்ணன் மகள் தனக்கு நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்திடுச்சு; உறவுகளுக்கெல்லாம் நெருடல் மனநிலை; இப்படியான சிக்கலை முதல்முறையாக எதிர்கொள்கிறார்கள்; ஏதேதோ சொல்லிப்பார்த்தும் சமாதானமாகவில்லை

ஒரே பிள்ளை… பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்போடு வளர்ந்தவள்; 👇
பள்ளியிலிருந்து கல்லூரி வரை எல்லாவற்றிலும் முதலில் வருகிற கெட்டிக்காரி; அரசியலாய் முற்போக்குவாதி; கல்லூரி படிப்பு முடிந்ததுமே பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நின்றுவிட்டவள்

சிறுவயதிலிருந்தே எங்களிருவருக்கும் நிறையா ஒத்துப்போகும்; 👇
வாஞ்சையாய் சித்தப்பூ என்று கூப்பிடுவாள்... பெளத்தம் தொடர்பாக நிறையா பேசுவோம்..

அண்ணனும் அண்ணியும் நீ ஒரு தடவை பேசி சமாதானப்படுத்து என கேட்டுக் கொண்டதற்கு இணங்கி

ஏன்டா கல்யாணத்தை நிறுத்துன என்றதற்கு " ஆம்பளைன்னா 20 வயசுக்கு பிறகு பைனான்சியல் இன்டிபெண்டன் ஆகனும் சித்தப்பூ.. 👇
Read 7 tweets
Jun 22, 2021
பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும்,1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது‘ச்சும்மா

👇
அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.

பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.

பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் 👇
பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி, எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு,ஜாதி ஒழிப்பு என்று பேசி,போராடி👇
Read 10 tweets
May 31, 2021
இடும்பாவன் கார்த்தி,பாக்கியராசன்,சீமான் இவர்களின் 20 கீச்சுளை பார்த்தேன்.

அனைத்தும் திமுகவை மட்டுமே கேள்விகேட்கிறது. கேள்வி கேட்கட்டும் தவறில்லை.

ஆனால் தடுப்பூசி, ஆக்சிசன்,ரெம்டெவிர் எவற்றிற்கும் மோடியை கேள்வி கேட்ட பதிவே இல்லை.

சுப்பிரமணிய சுவாமி ஈழ இனப்படுகொலையாளன் 👇
என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்டவன் PSBB பள்ளி விவகாரத்தில் ஆட்சியை களைப்பேன் என்று கூறியதற்கு நாதக கட்சியினர் சு.சாமியை எதிர்த்து எந்த அறிக்கையும் விடவில்லை. சொல்ல போனால் PSBB விவகாரத்தில் கூட சீமானின் செயல்பாடு இல்லை.

திருமுருகன் காந்தி ஈழ விடுதலைக்கு என்ன 👇
செய்துள்ளார்? என்று கேட்கும் தம்பிகள் திருமுருகன் காந்தி கீச்சுகளையும் மே 17 இயக்க குரல்களை பார்த்தால் தெரியும்.
ஊடகங்களிலும் கிடைக்கிறது.

பாஜகவை எதிர்த்து பதிவிட்டு வந்ததால் தோழரின் முகநூல் கணக்கு 2 முறை முடக்கப்பட்டுள்ளது. அமைப்பின் வங்கி கணக்கு 2 முறை முடக்கப்பட்டுள்ளது. 👇
Read 5 tweets
May 31, 2021
மோடியின் முகமூடியை கிழித்த சர்வதேச ஊடகங்கள்.
Thread 👇
👇
👇
Read 9 tweets
Oct 12, 2020
நாங்கள் நான்கு பேர் வருவோம்.
நானும் எனது மகள்கள் இருவரும், உதவியாளருமாக நால்வர்.

எங்களுக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் முதல் வகுப்பில் டிக்கெட் போட வேண்டும்.

மதுரையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு ரூம் புக் செய்ய வேண்டும்.

👇
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் சென்று பார்க்க ஆடி அல்லது பிஎம்டயிள்யூ கார் தரவேண்டும்.

மதுரையிலிருந்து நெல்லை வந்து ஓய்வு எடுக்க தரமான விடுதியில் இரண்டு ரூம் போட வேண்டும்.

மேடைக்கு வரும் போது பத்து கார்களிலாவது உடனிருப்போரை அனுப்பி வைக்க வேண்டும்.

👇
மீண்டும் மதுரை சென்று சென்னைக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட் போட்டுத் தர வேண்டும்.

இது எனக்கும்-குஷ்புவுக்கும் 2018 ம் ஆண்டு நடந்த உரையாடல்.

விசயம் ஒன்றுமில்லை.
நெல்லையில் நாங்கள் நடத்திய பெரியார்140 விழாவில்
பெரியார் திரைப்படத்தில் அவர் 👇
Read 6 tweets
Oct 11, 2020
கல்வியின் பயனை 2 விசயமாக பெரியார் குறிப்பிடுகிறார். ஒன்று கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியையும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ பயன்பட வேண்டும் என்கிறார். இதில் மேன்மையான வாழ்வு என்பதுகூட இரண்டாம் பட்சமே முதலில் 👇
பகுத்தறிவு பெறுவதே முதன்மையானது என்று கூறுகிறார்.

நான் இதுவரை கல்வி என்பதில் ஒரு நிலைப்பாட்டை வைத்து இருந்தேன்.ஆனால் இதை படித்தவுடன் கல்வியில் மாணவர்களின் பங்கு,பெற்றோரின் பங்கு,அரசாங்கத்தின் பங்கு என்ன என்றும்👇
கல்வி எதற்கு பயன்படவேண்டும்,இந்திய கல்வியின் நிலை,கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்,மற்ற நாட்டிற்கும் இந்தியாவிற்கும் கல்வியின் வித்தியாசம் இந்தியால் கல்வியின் நிலை என்னவாகும்? இந்தி புகுத்துவது எதனால்? ஆங்கிலத்தை எதனால் படிக்க வேண்டும்? என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் பெரியாரின் 👇
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(