இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்களால் ஆனது, இவர்களை ஒன்றிணைக்க ஒரு இணைப்பு மொழி தேவை (link language) என்று வருகிறபோது தமிழ்நாடு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வலியுறுத்துகிறது.
அதில் தான் ஒரு சிக்கல் இருக்கிறது.
எங்களுக்கு ஆங்கிலமும் அந்நிய மொழி தான், இந்தியும் அந்நிய மொழி தான். (2)
மற்ற பகுதி மக்கள் தாய் மொழியோடு இணைப்பு மொழியையும் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
(3)
(4)
அதனால் தான் காலம் காலமாக தமிழகம் இந்தியை திணிப்போரிடம் சொல்கிறது..
"உங்களோடு இணையவும், உலகத்தோடு இணையவும் நாங்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்கிறோம்.
(5)
இல்லை இந்தியை மட்டும் தான் ஒற்றை இணைப்பு மொழி ஆக்குவோம் என்று பெரும்பான்மை வெறியில் திரிந்தால், இந்தி அல்லாத மாநிலங்கள் ஒருபோதும் அதை ஏற்காது (6)
இந்திக்காரர்கள் மட்டும் போராடி இந்தியா விடுதலை பெறவில்லை, இந்திக்காரர்கள் மட்டும் வரி செலுத்தி இந்தியா இயங்கவில்லை. (7/ end)