Suriya Krishnamorthy Profile picture
Aug 10, 2020 7 tweets 1 min read
#StopHindiImperialism
இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்களால் ஆனது, இவர்களை ஒன்றிணைக்க ஒரு இணைப்பு மொழி தேவை (link language) என்று வருகிறபோது தமிழ்நாடு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வலியுறுத்துகிறது. அந்திய மொழியான ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஏற்கும் நீங்கள், இந்திய மொழியான இந்தியை ஏற்கக்கூடாதா என்று கேட்பார்கள்.

அதில் தான் ஒரு சிக்கல் இருக்கிறது.

எங்களுக்கு ஆங்கிலமும் அந்நிய மொழி தான், இந்தியும் அந்நிய மொழி தான். (2)