, 18 tweets, 3 min read
My Authors
Read all threads
சராசரி கூலி வேலை செய்ற அப்பா அம்மாவுக்கு 3வது பிள்ளை.. அன்னைக்கு வேலைக்கு போயிட்டு வந்தா தான் நைட் சோறு வடிச்சு குழம்பு வெச்சு சாப்பிட முடியும். 2 அக்கா. ஒருத்தவங்க 10th முடிச்சுட்டு டைலர் வேலைக்கு போய்ட்டாங்க.. bag தைக்குற கம்பெனி க்கு. இன்னொரு அக்கா 12th முடிச்சுட்டு நர்ஸ்
வேலைக்கு போயிட்டாங்க... ஒரு அக்கா ஓவர் டைம் பாத்தா 5 rs கூட குடுப்பங்கன்னு தினமும் OT பாத்துட்டு தான் வருவாங்க. ஒரு அக்கா நர்ஸ்ங்கிறதால ஒரு வாரம் பகல், ஒரு வாரம் முழுக்க நைட் டூட்டி இருக்கும். நைட் டூட்டி பாத்துட்டு வந்தா டே முழுக்க தூங்குவங்க.. அவங்க 2 பேரையும் கட்டிகுடுக்க காசு
எல்லாம் சுத்தமா கிடையாது. இருந்த கொஞ்சம் இடத்தை வித்து குடுத்து தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.. வறுமை காரணமா நான் 6 வது லீவுலேயே ஒரு லேத் பட்டறைக்கு வேலைக்கு போனேன்.. முழு ஆண்டு லீவுல. 10rs டெய்லி கொடுப்பாங்க.. காலைல போனா நைட் 9.30 வரைக்கும் வேலை கொடுப்பாங்க. கொஞ்சம்
குடும்பத்துக்கு உதவியா இருந்துச்சு.. அதுக்கு அப்பறம் காலாண்டு லீவு, அரையாண்டு லீவு ன்னு எப்போ எல்லாம் கொஞ்சம் லாங் லீவு கிடைக்குதோ அப்போ எல்லாம் அந்த கடைக்கு போயிடுவேன்.. அங்க உக்காந்து கிடைக்கிற கொஞ்சநேரத்துல ஸ்கூல் ல கொஸ்டின் பேப்பர்க்கு answer எல்லாம் எழுதிட்டு வர சொல்வாங்க
அதை உக்காந்து எழுதுவேன். நான் 8 வது படிக்குறப்ப மகாமகம் வந்துத்துச்சு. லோக்கல் ஹாலிடே 10 நாள். பிரின்ட்ஸ் எல்லோரும் விளையாண்டுட்டு இருப்பாங்க. நான் 10 நாள் போனா 100 rs கிடைக்கும்னு அப்போவும் வேலைக்கு போனேன். 10th லீவுல பால் பூத் ல வேலைக்கு சேந்தேன். காலைல 5 மணிக்கு எழுந்து போவேன்
நைட் வரதுக்கு 9 மணி ஆகிட்டும்.அங்க எவ்ளோ சம்பளம் தருவங்கன்னு கூட கேக்கல.11த் சேருறதுக்கு காலேஜ் bag மட்டும் வாங்கி குடுங்கன்னு சொல்லி தான் வேலைக்கு போனேன்.. வேலை செஞ்சு வாங்குன bag ல தான் 11th ஸ்கூல் போனேன்.. செருப்பு பிஞ்சு போனா கூட உடனே வாங்க முடியாது அப்போ எல்லாம்.ஸ்கூல் க்கு
வெறும் காலொட நடந்து தான் போவேன். 12th எக்ஸாம் முடிச்சதும் அப்போ தான் dth பேமஸ் ஆன டைம். முத முதல்ல dish tv ன்னு ஒன்னு ஆரம்பிச்சாங்க. சன் direct க்கு எல்லாம் முன்னாடி. அங்க வேலை பாத்தேன். மாசம் 1000 rs சம்பளம்.. டிஷ் இன்ஸ்டால் பண்ணி குடுக்க customer இடத்துக்கு போய் இன்ஸ்டால் பண்ணி
தரணும். ஓரு இன்ஸ்டால் க்கு 200 rs வாங்கிட்டு வந்து ownerட கொடுப்பேன். அந்த 12th லீவுலேயே friend ஒருத்தவங்க பஸ்ஸ்டாண்ட் உள்ள மொபைல் topup கடை வெச்சுருந்தாங்க. நைட் டூட்டி பாக்க ஆள் இல்ல, நீ வந்து பாரு 50 rs தரேன்னு சொன்னாங்க. அங்க வேலைக்கு போனேன் 2008 ல. பஸ்ஸ்டாண்ட் ல நைட் கூட்டம்
இருந்துகிட்டே இருக்கும்.. தூங்க கூட முடியாது. கொஞ்சம் கண்ணு அசந்தா 10 rs airtel கார்டு குடுங்கன்னு சொல்லி எழுப்பி விட்ருவாங்க. காலைல 10 மணிக்கு ஆள் மாத்தி விடுவாங்க.. நேரா வீட்ல போய் சாப்பிட்டுட்டு படுத்துடுவேன். மதியம் சாப்பிட எழ மாட்டேன். நைட் 8 மணிக்கு எழுந்து சாப்டுட்டு
திரும்ப பஸ் ஸ்டாண்ட் போயிடுவேன்.. cutoff 183 எடுத்து இருந்தேன் 12th ல. Government காலேஜ் கிடைச்சா என்ஜினீரிங் படிக்கலாம். இல்லைனா ஆர்ட்ஸ் படிக்கலாம் னு தான் பிளான். Govt னா காசு கம்மியா இருக்கும், education லோன் போட்டுக்கலாம்னு. consellingல திருக்குவளை அண்ணா university கிடைச்சது
ஊருல இருந்து 2.30 மணி நேர ட்ராவல். Weekend ஆனா ஊருக்கு வந்து 2 நாள் மொபைல் கடைல வேலை பாத்துட்டு திரும்ப monday காலேஜ் போவேன்..அந்த வாரத்துக்கு அந்த காச வெச்சி ஓட்டிடுவேன். Education லோன் ல தான் படிச்சேன். எல்லோரும் செமஸ்டர் லீவு ல inplant ட்ரைனிங் அது இதுன்னு சென்னை போனாங்க
சென்னை போக எல்லாம் காசு இல்லாம 1 மாசம் கடைல வேலை செஞ்சா செலவுக்கு ஆகுமென்னு மொபைல் கடைக்கு வந்துடுவேன். எல்லோரும் காலேஜ் முடிஞ்சு சென்னைக்கு வேலை தேட போயி சில பேருக்கு வேலையும் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. என்கிட்ட சென்னை போக, அங்க தங்கி வேலை தேடுறதுக்கு காசு இல்ல.. திரும்ப bus
Stand ல 2 மாசம் வேலை செஞ்சு, வேலை செஞ்ச gap ல பக்கத்துல ஒரு கோச்சிங் சென்டர்ல கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் படிச்சு, அதுக்கு டியூஷன் fee கட்ட வேலை செஞ்சு கடைசியா சென்னை போனேன். 10 நாள் தான் தங்கிருப்பேன். தஞ்சாவூர் ல IT கம்பெனி ஸ்டார்ட் பண்றாங்கன்னு தெரிஞ்சு அங்க போய் வேலைக்கு சேந்தேன்
4k சம்பளம்.. டெய்லி ட்ரெயின் ல போய்ட்டு வருவேன் பாஸ் எடுத்துக்கிட்டு. பஸ்ல போக கூட ஆகும். ட்ரெயின் காலைல 7 மணி. ஆஃபீஸ் 9.30 மணிக்கு. லேட்டா போனா திட்டுவங்க. அதனால 7 மணி ட்ரெயின் புடிக்க வீட்ல இருந்து 6.30 க்கு கெளம்பி போவேன். நைட் 9 மணி ஆகும் ஆஃபீஸ். அதுக்கு அப்பறம் ட்ரெயின்
10.30 மணிக்கு தான் உண்டு.. திருச்செந்தூர் express வரும். அது வர்ற வரைக்கும் ஸ்டேஷன் ல சும்மா உக்காந்துருப்பேன்.. கும்பகோணம் வர 11 மணிக்கு மேல ஆகிடும். வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கி காலைல 6.30 மணிக்கு வீட்டை விட்டு கெளம்பனும் திரும்ப.. இப்படியே 2 1/2 வருஷம் வேலை செஞ்சேன்
அந்த கம்பெனி விட்டு வெளில வரப்ப சம்பாலம் 13k. அப்பறம் மதுரை ல வேலை கிடைச்சு அங்க கொஞ்ச காலம் இருந்து, அப்பறம் சென்னைல வேலை கிடைச்சது.. அங்க தான் 4 வருசமா வேலை பாத்துட்டு இருக்கேன்... அப்பா இருந்தப்ப காலேஜ் படிச்சுட்டு இருந்த டைம்..அப்போ அவங்க இறுதி சடங்கு பண்ண கூட என்கிட்ட காசு
கிடையாது.. 10k போல செலவு ஆச்சுன்னு நினைக்குறேன். சொந்த காரங்க தான் செலவு பண்ணுனாங்க முழு செலவும்... இப்போ கொஞ்சம் ஓரளவுக்கு நிலைமை சரி ஆகி income tax வருசத்துக்கு 1 லட்சம் கட்டுற அளவுக்கு இருக்கேன்.
6 வது வேலைல ஆரம்பிச்ச வாழ்க்கை இன்னைக்கும் ஒடிட்டு இருக்கேன். உடல் உழைப்பை மட்டும் நம்பிக்கிட்டு. கல்விங்கிற ஆயுதம் இல்லாம , இட ஒதுக்கீடு இல்லாம, education லோன்னு ஒன்னு இல்லாம இருந்தா நானும் எங்க அப்பா மாதிரி கூலி வேலைல காலம் ஓட்டிருப்பேன் ஒரு சாதாரண தின கூலியா. கல்விக்கு நன்றி.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Munificent

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!