My Authors
Read all threads
இழை 👇

2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
பிளாஷ்பேக்: அந்த பயணத்திற்க்கு 5 நாட்களுக்கு முன்னர், என்னுடைய முன்னாள் மாணவர் மரு. முகமது அலி ராசா என்பவர் எனக்கு ஒரு Youtube லிங்க அனுப்பி இவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். கானொளியை பார்த்தேன். அது தலைவர் வைகோ அவர்கள் ஐநா சபையில் பேசியது.நான் தெரியும் என்றேன். (4/n)
அப்படியென்றால் நீங்கள் அவரை சந்திக்கும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களை அவருக்கு தெரிவியுங்கள் என்றார். நான் சொன்னேன் தெரியும் என்று நான் சொன்னது, அவரோட நெருங்கி பழகியவன் என்ற முறையில் அல்ல. (5/n)
தமிழக மக்களுக்காக பல்வேறுப்பட்ட சட்ட போராட்டங்களை முன்னுடெத்தவர் என்ற முறையிலும், தமிழீழத்தை கட்டமைக்க தன்னால் இயன்றதை செய்து கொண்டிருக்கிறார் என்ற வகையில் தெரியும் என்ற என்று சொன்னேன். (6/n)
அதற்க்கு மரு. அலி சொன்னார், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சொன்னால் போதும் என்று. சரி என்று சொல்லிவிட்டு (நான் எப்படி வைகோவை சந்திக்க போகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு) நான் கேட்டேன், எதனால் அவரை உனக்கு பிடித்து போனது என்று? (7/n)
அதற்க்கு மரு. அலி சொன்னார், அவரின் பேச்சு, அவரின் உடல்மொழி, வல்லாதிக்க சக்திகளால் அழிக்கப்பட்ட ஒரு இனத்துக்காக குரல் கொடுக்கின்ற ஒரு மனிதரை யாருக்கு பிடிக்காமல் போகும். தமிழக மக்கள் பெருமைபடுவேண்டும் என்று சொன்னார்(8/n)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் அவ்வளவு உளபூர்வமாக நேசித்தேன், அவருடைய மரணமும் அவரின் மகன் பாலச்சந்திரனின் மரணம் மிகுந்த வேதனைய அளித்தது என்றார். தலைவர் பிரபாகரனின் கனவு ஒரு போதும் வீண் போகாது என்றும் கூறினார். தன் இனத்துக்காக போராடிய தலைவர் என்றார் (9/n)
பேக் 2 பயண தினம்; இப்படியாக மரு. அலி யோடான உரையாடலை திரு. ஈஸ்வரன் அவர்களோட 38,000 அடி உயரத்தில் அதுவும் வெறும் 5 நாட்களில் பகிர்ந்து கொள்வேன் என்று நான் கற்பனையிலும் நினைக்கவில்லை. (10/n)
ஆனால் என்னால் தான் சந்திக்க இயலவில்லை. ஒரிரு நாள் கழித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் எங்களுடைய இந்த எதிர்பாராத சந்திப்பை பற்றி கானொளியை பதிவேற்றம் செய்திருந்தார்👇. (11/n)

facebook.com/10000505414270…
தூத்துக்குடி ஸ்டெரிலைட் வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு பின்னர் தோழர் @pkcomrade அவர்களின் பதிவு ஒன்றை படித்தேன். அந்த பதிவை தோழர் இப்படியாக ஆரம்பித்திருந்தார். “வைகோ அவர்கள் தமிழகத்தின் அழிக்க முடியாது சொத்து”. (12/n)
உன்மைதான் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு அவரின் செயல்பாடு என்பது மக்கள் நலன் சாரந்தது. அரசியலில் அவர் எடுக்கும் நிலைபாடுகளால் மட்டுமே அவரை எடை போடுவோமென்றால் நாம் தான் நம்முடைய பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். (13/n)
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வேறு பட்ட நிலைப்பாடுகளை எடுத்து வந்திருக்கின்றன/ இனிமேலும் எடுக்கும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் நலனுக்காக பாடுபடுகின்ற அனைவருமே அழிக்க முடியாத சொத்துதான். (14/n)
அந்த வகையில் தலைவர் வைகோ அவர்கள் தமிழகத்தின் அழிக்க முடியாத சொத்து. 🔥🔥

End of Thread
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with நவீன் பிரபாகரன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!