கடிதம் எழுதிய முதலாளி வேறு யாருமல்ல வசந்த் & கோ உரிமையாளர் திரு. வசந்தகுமார் அண்ணாச்சிதான்.
ராசியில்லாத கடையாக 1978-இல் கருதப்பட்ட ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, தனது கையாலேயே வசந்த் & கோ என போர்டு எழுதித் தொங்கவிட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
பொருள்களின் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டியத் தொகையை சொன்ன தேதியில் சரியாக கொடுத்து விடுவார்.
விஜிபி நிறுவனத்தில்தான் அண்ணாச்சி ஆரம்பக்காலத்தில்
பணியாற்றினார். கடையை சுத்தமாக வைத்திருப்பது, கடிகாரம் துடைப்பது என விஜிபியில் பணியை ஆரம்பித்தவர், படிப்படியாக சேல்ஸ் மேன்,
கற்றுக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
பிற்காலத்தில் வணிகத்தில் அண்ணச்சி உச்சம் தொட்டபோதும், விஜிபி நிறுவன உரிமையாளரைத்தான் தனது ஒரே முதலாளி என அண்ணாச்சி குறிப்பிடுவார்.
சிறுவயதில் திருவிழாக்களில் சர்பத் விற்றுள்ளார்.
இன்று நாடெங்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தனி
வீட்டு உபயோகப் பொருள்களை நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு தவணை முறையில் விநியோகித்த அண்ணாச்சி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது பேரிழப்பாகவும் பெரும் வருத்தமாகவும
நாணயமான வியாபாரி, தூய்மையான அரசியல்வாதி, எளியோருக்கு உதவும் தொண்டுள்ளத்துக்கு சொந்தக்காரர், அப்பழுக்கற்ற தேசியவாதி, இலக்கிய ஆர்வலர், சிறந்த பக்திமான், எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையான மனிதர். அண்ணாச்சி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்