சங்கர் கிருஷ்ணன் 👨‍💻 Profile picture
கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர். மின் மற்றும் மின்னணு பொறியாளர் மற்றும் மேலாளர்
Sep 5, 2020 11 tweets 2 min read
தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது..

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....

வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது. 100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து
கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும்
Sep 1, 2020 16 tweets 3 min read
'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
#BanNeet #NEP2020 “புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
Aug 29, 2020 24 tweets 3 min read
ஒரு குடும்பம் மாதத் தவணையில் டிவி வாங்கியது. மாதா மாதம் தவணையை வசூல் செய்ய ஒருவர் செல்கிறார். திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக, அந்தக் குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். குடும்பம் நிர்கதியாகிறது. அக்குடும்பம் வாங்கியிருந்த டிவிக்கான தவணையை வசூல் செய்ய வந்தவர், வாடிக்கையாளர் இறந்தது குறித்து தனது முதலாளியிடம் தகவல் தெரிவிக்கிறார். அந்த முதலாளியும் கருணையுள்ளத்துடன் ஒரு கடிதம் அனுப்புகிறார்.