001#வாழ்க்கை #தத்துவம் !
ஒரு பாம்பு.. தச்சுவேலைகள் நடக்கும் இடத்திற்குள் நுழைந்து. உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மீது ஊர்ந்து நகர்ந்தபோது ஒரு ரம்பத்தின் கூரிய பற்கள் பட்டு காயம் ஏற்பட்டது.
002உடனே பாம்புக்கு எரிச்சலும், கோபமும் ஏற்பட்டு அந்தக் கூரான ரம்பத்தை கடித்தது. ரம்பத்தின் பற்கள் பட்டு, பாம்பின் வாயில் ரத்தம் வர ஆரம்பித்தது. பாம்புக்கு எரிச்சலும் கோபம் தாங்கவில்லை. உடனே அந்த ரம்பத்தைச் சுற்றி வளைத்து இறுக்கி.. நொறுக்க ஆரம்பித்தது. இதனால்.. வலி
003அதிகமாகி ரத்தம் வர வர.. தன் பலம் முழுவதையும் சேர்த்து வேகம் வேகமாகப் புரண்டது. தனக்கு என்ன நடக்கிறது, நாம் என்ன செய்கிறோம் என்று யோசிக்கவோ, நிதானிக்கவோ முடியாமல் கோப வெறியில், தொடர்ந்து இறுக்கிக் கொண்டேயிருந்தது. கடைசியில் தன் உடல் இரு துண்டாகி.. விழுந்து இறந்தது.
004இதேபோல்தான்.. நாமும்கூட.. நமது வாழ்க்கையிலும் மற்றவர்களிடம் தேவையற்ற வார்த்தைகளை வெளிப்படுத்துகிறோம், கோபத்தில் எதையும் யோசிக்காமல் செயல்படுகிறோம்.
இதன் விளைவாக, நாம் தவறுகளை உணராமல்..மேலும் மேலும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, போபத்தில்
005தடுமாறி, நிதானமிழந்து, பதட்டம், மன அழுத்தம் இவற்றில் சிக்கிக்கொள்கிறோம்.
கடைசியில் இதனாலேயே நம் மனதையும்,உடலையும்,உறவையும், வாழ்வையும் ஒட்டுமொத்தமாய் இழந்து விடுகிறோம்.
ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது..
தானத்தில் சிறந்த தானம்.. "நிதானம் " தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
001ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
002 சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
003“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.
அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....
.
002ஒருநாள் அவரது கணவர், .... "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" .... என்று அந்த பெண்ணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....
மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்....
003அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....
001அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.
முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
"வெளியே குளிர் , உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?"
002முதியவர் பதிலளித்தார்.....
"எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்"
கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்....
"நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்"
003அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அந்த பணக்கார மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது.
002ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.
மறுநாளே தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.
003அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரிஇ அந்த குருவை வணங்கி சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது.