myck Profile picture
Feb 5, 2022 5 tweets 1 min read
001தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.

"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 002"தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
Dec 22, 2021 5 tweets 1 min read
001ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? 002 சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
Dec 21, 2021 10 tweets 1 min read
001படிங்க ரொம்ப பிடிக்கும்!...

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....

. 002ஒருநாள் அவரது கணவர், .... "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" .... என்று அந்த பெண்ணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....

மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்....
Dec 9, 2021 11 tweets 2 min read
001ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!

அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’ 002அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...

பெரியவரை நெருங்கினான்.

ஐயா…!

என்ன தம்பி?

உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?

ஆமாம்..!

அதில் என்ன தெரிகிறது..?

நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!
Dec 8, 2021 6 tweets 1 min read
001அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.
முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
"வெளியே குளிர் , உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?" 002முதியவர் பதிலளித்தார்.....
"எனக்கு சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்படுகிறேன்"
கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்....
"நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்"
Dec 8, 2021 9 tweets 1 min read
001தினம் ஒரு குட்டிக்கதை.

வியாபாரியின் கதை

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 002ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.

மறுநாளே தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.
Dec 7, 2021 9 tweets 1 min read
001ஒரு ஊரில் ஒரு வயதான தையல்காரர் வாழ்ந்து வந்தார். தையல் வேலைப்பாட்டில் அவர் வித்தகராக இருந்ததால் அதிக வாடிக்கையாளர்கள் அவரை நாடி வந்தனர், அதனால் நல்ல காசும் சம்பாதித்து விட்டார்.
ஒரு நாள் ஒரு ஏழை யாசகன் அவரிடம் வந்து சொன்னார்: 002உங்கள் தொழில் திறமையால் நிறைய பணம் சம்பாதிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு உதவக்கூடாது?
ஊரிலுள்ள இறைச்சிக்கடைக்காரரை பாருங்கள்! பெரிய பணம் இல்லை, ஆனாலும் நாளாந்தம் ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குகிறார்.
Sep 16, 2021 14 tweets 2 min read
001ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள் 002சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.
ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது.
Sep 16, 2021 9 tweets 2 min read
002கழுதைகளுடன் வாதிடப்போகாதீர்கள் (கட்டுக்கதை)
~~~~~~~~~
கழுதையொன்று புலியிடம்,

"புல்லின் நிறம் நீலம்!"
என்று கூறியது.

புலி கோபமடைந்து,

"இல்லை, புல் பச்சை!"
என்று கூறியது.

விவாதம் சூடுபிடித்தது,

இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், 002எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை,

"அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?"

என்று கேட்டது.

சிங்கம்,

"உண்மை, புல் நீலநிறமானது"

என்று பதிலளித்தது.

கழுதை விரைந்து தொடர்ந்தது,
Sep 14, 2021 7 tweets 1 min read
001நகைச்சுவை: வக்கீலாத்தில் ஒரு வசூல்ராஜா
அவர் ஒரு மிகப் பிரபலமான சட்டவாளர். அவரது ஆண்டு வருமானம் பல இலட்சங்களைத் தாண்டும். ஆனால் அவரிடம் நன்கொடை வாங்க பல தரும ஸ்தாபனங்கள் பகிரதப் பிரயத்தனம் செய்து தோல் விகண்டன. 002ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் எப்படியாவது நன்கொடை வாங்கியே தீருவேன் என்று அவர் வீடு சென்றார். அவரிடம் நன்கொடை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதனால் நன்மையடையப் போகும் அனாதைப் பிள்ளைகள் பற்றியும் அதனால் அவருக்கு கிடைக்கும் புண்ணியம் பற்றியும்
Jul 3, 2021 4 tweets 1 min read
001ஓஷோ சொன்ன ஜோக்ஸ் கதையிலிருந்து .....

ஒரு சிறிய நகரத்தில் தெருவில் ஒரு கார் விபத்து ஏற்பட்டது.
அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடி விட்டது. ஆம்புலன்ஸூக்கு யாரோ போன் செய்து கொண்டிருந்தார்கள். 002அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர், கூட்டத்தின் காரணமாக
அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.

அவருடைய பத்திரிக்கைக்கு முதல் ஆளாக நியூஸ் தர வேண்டிய அவசரம் ஒருபக்கம்! அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது.
Jul 3, 2021 7 tweets 1 min read
001தினம் ஒரு குட்டிக்கதை .

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. 002ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.
Jul 3, 2021 5 tweets 1 min read
001ஆறாம்அறிவு சிரிக்க மட்டுமே..!

அந்த ஹோட்டலில் நுழைந்து மேஜை முன் அமர்ந்தார் பார்வையற்ற மனிதர் ஒருவர்.

அருகே வந்த மேனேஜர்,
சார்..மெனு தரவா..பார்த்து ஆர்டர் செய்யுங்கள்... 002அய்யா..நான் பார்வையற்றவன்..
உங்கள் சமையலறையிலிருந்து கரண்டிகளைக்கொண்டு வாருங்கள்.அதை முகர்ந்து பார்த்தே நான் ஆர்டர் செய்கிறேன்..

மேனேஜர் உள்ளே சென்று சில கரண்டிகளை கொண்டுவர, அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு..
Jul 1, 2021 8 tweets 3 min read
Image ImageImage
Jul 1, 2021 6 tweets 5 min read
நீயாபகம் இருக்கா நண்பர்களே!?? ImageImageImageImage ImageImageImageImage
Apr 15, 2021 4 tweets 1 min read
001சில நாய்களுக்கும், ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. 002போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை -
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
Apr 15, 2021 6 tweets 1 min read
😂001படித்ததில் பிடித்தது...
..ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்.
"கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு கடைக்கு கிளம்பினார். 😂002அவர் திரும்பி வந்தபோது, ​​அவள் காரில் இல்லை.
திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, ​​200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்.
Apr 14, 2021 9 tweets 2 min read
001*கலைஞர் ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்த பொழுது அவர் அக்கா குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு தாசில்தார் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.* 002*துக்கம் விசாரிக்கச் சென்ற கலைஞரின் அக்கா குடும்பத்தினர் ஒரு அதிர்ச்சியான தகவல் அறிந்து அக்கா வீட்டுக்கு வந்திருந்த கலைஞரிடம் வேதனைப் பட்டு வருந்தினர்.*
*வெள்ளைச் சட்டை போட்டு பந்தாவாக ஜீப்பில் வலம் வந்த தாசில்தார் வீட்டு நிலைமை அன்று அவரை அடக்கம் செய்யக் கூட பணமின்றி
Apr 14, 2021 5 tweets 1 min read
001_ஒரு_* *_குட்டிக்கதை_* : தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து அவர் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு புது துணியை எடுத்து ஒரு அழகிய பளபளக்கும் கத்தரிக்கோலால் துணியை துண்டுகளாக வெட்டினார். 002 பின்னர் கத்திரிக்கோலை தன் காலருகே போட்டுவிட்டு துணியை தைக்கலானார். துணியை தைத்து முடித்ததும் ஊசி எடுத்து தனது தலையில் உள்ள தொப்பியில் குத்தி பத்திரப் படுத்தினார். இதை பார்த்துக்கொண்டிருந்த மகன்,
Mar 4, 2021 5 tweets 1 min read
001ஜட்ஜ்:
எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???
விண்ணப்பதாரர்:-
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .
அதனால் விவாகரத்து தாருங்கள். … 002ஜட்ஜ்: –
இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
Mar 2, 2021 11 tweets 1 min read
●001பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும்●
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பயணி அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். ●002பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
அதன் பிறகு அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன் என்றார்.