சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. 2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம்.
டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி.
மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.
‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்... இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு
அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்.
The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!’’
நேற்று நீட் தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவர் யாரென்று தெரியுமா?
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தன் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா அவர்களால் கடந்த வருடம் தத்தெடுக்க பட்டு படிக்க வைக்க பட்ட மாணவர் தான் ஜீவித் குமார்.
அமெரிக்காவில் உள்ள தோழர் காட்வின் 75000 ரூபாய் மற்றும் பலரிடம் சபரிமாலா அவர்கள் உதவி திரட்டி கடந்த ஒரு வருடமாக நாமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் இந்த மாணவனை படிக்க வைத்துள்ளனர்.
தற்போது 664 மதிப்பெண் பெற்ற தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் இடம் பெற்றுள்ளார்
10வது பிறகு நீட் சிலபஸ் முழுமையாக கொடுத்தால் இன்னும் பல அரசு பள்ளி மாணவர்கள் வெல்வார்கள் என்கிறார் ஜீவித்.
இதற்கிடையே விசயம் தெரியாமல் பாத்திங்களா ஏழை மாணவர் வென்றுள்ளார் ஜி சாதனை, நீட் போலி போராளிகள் வேசம் களைந்தது. பிண அரசியல்வாதிகள் என சங்கிஸ் கூவிகிட்டு இருக்கானுங்க😂
பத்து வருசம் முன்ன விஜய் டிவில அகரம் சார்பில் விதைனு ஒரு நிகழ்ச்சி நடத்துனாங்க தமிழகம் முழுவதும் இருந்து அந்த வருடம் 12 ஆம் வகுப்பு முடிச்ச மாணவர்களை கூப்பிட்டு வந்து இருந்தாங்க அதுல ஒரு மாணவர் தான் நந்தகுமார்
பெரம்பலூர் பக்கத்துல ஒரு குக்கிராமம் அப்பா அம்மா ரெண்டு பேரும் குவாரில கூலிக்கு கல் உடைகிறவங்க வீட்டுல மின்சாரம் கிடையாது அரசு பள்ளி சத்துனவு தெருவிளக்குல படிப்புனு படிச்சு 12th 1160 மார்க் Medical Cutoff 199 அதுல நீங்க என்ன ஆகனும்னு ஆசை படுறீங்கனு கேப்பாரு
டாக்டர் ஆகனும்னு ஆசை சார்னு சொல்லுவாரு அடுத்து கோபி அவங்க அம்மா கிட்ட மகன் பேரு என்ன கேப்பாரு டாக்டர்.நந்தகுமார் சார்னு சொல்லுவாங்க உங்க கைய காட்டுங்கமா சொல்லுவாரு கல் உடைச்சு கை எல்லாம் காப்பு காய்ச்சு போய் இருக்கும் அந்த கஷ்டமான சூழல்ல கூட பையன ஒரு நாள் கூட