சில சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு பாத்திரம் கட்டி, அடியில் துளையிட்டு, பாத்திரத்தில் இளநீர், தண்ணீர், நெய், பன்னீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பிவிடுவார்கள். அது சொட்டு சொட்டாக சிவன்மீது விழும்.
சிவபெருமான் நெற்றிக்கண்ணுடன் கூடியவர் என்பதால் உஷ்ணமாக இருப்பார். இதைத் தணிப்பதற்காக ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு செம்பின் கீழ் துளையிட்டு உள்ளே தண்ணீரை நிரப்பி விடுவர். அது சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும். இதுவே ஜலதாரை.
இந்த பூஜையால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். எல்லா நலனும் உண்டாகும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள், கெட்ட நண்பர்கள் விலகுவர். கெட்ட குணங்கள் மறையும். பகைவர்கள் ஒதுங்கிப் போவார்கள். பயம் நீங்கும்.
தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் நீங்கும். கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் மோட்சம் கிட்டும், சகல துயரமும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை விற்காதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்' என்றார். அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப-புண்ணிய கணக்கை பரிசீலித்து, "ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்" என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே' என்று கூறியது
நினைவுக்கு வந்தது.அதனால் அதற்கு விலை கூற மறுத்து,"ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்"என்றான்.திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று எண்ணி,"இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்.வா இந்திரனிடம் போகலாம்"
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்.
சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு
என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
பல ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் சூரியக்காலடி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி இல்லம் ஒன்று இருந்தது.வசதிமிக்க இந்த நம்பூதிரிக்கு தென்னந்தோப்பு ஒன்று,மூத்த செக்கன் என்னும் காவலாளியின் பொறுப்பில் இருந்து வந்தது.அவனும் எஜமானர் மீது விசுவாசம் கொண்டவன்.உண்மையே பேசுவான்.மற்றவர் பொருளுக்கு
ஆசைப்பட மாட்டான்.எஜமானரின் பொருளை,தன் பொருளாக பாதுகாத்தான்.தென்னை மரத்தில் இருந்து முற்றிய நெற்றுக் காய்கள் காற்றில் அடித்து விழும்.அந்த காய்கள் காவலாளிக்கு உரியதாகும்.ஒருநாள் மார்கழி மாத இரவில் செக்கனுக்கு குளிர் தாங்க முடியவில்லை.தென்னை மட்டைகளை குவித்துத் தீ மூட்டினான்.
இரவு முழுவதும் கண்விழிக்கவே பசிக்க ஆரம்பித்தது. நெற்றுக்காய் இரண்டை எடுத்து உரித்து,கொப்பரைகளை பிரித்து,தீயில் சுட்டு சாப்பிட்டான்.தினமும் இதை இரவு வழக்கமாக்கினான்.ஒருநாள் தேங்காய் சாப்பிடும்போது, பின்புறத்தில் இருந்து ஒரு துதிக்கை நீண்டது.
சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்.
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும், கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை 'அவசர திருக்கோலம்' என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.பாதங்கள் சக்கரத்தைப்போல சுழன்று