உடல் எடை குறைக்க வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய 20 உணவுகள் :

காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள். அவை, தர்பூசணி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சைப் பழங்கள்.
மேலும் சுப்பர் பூட்ஸ் (super foods) என்று அழைக்கப் படும் கிரீன் டீ, முழு தானிய ரொட்டி வகைகள் மற்றும் மரக்கோதுமை ஆகும்.

உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? அதை பற்றி இனி கவலை கொள்ள வேண்டாம். உடல் எடையை குறைப்பதற்கு
இனி ஜிம் செல்வதோ அல்லது கடுமையான டயட் இருப்பதோ தேவை இல்லை.
உங்களுக்காக சில உணவு பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காலையில் வெறும் வயிறில் உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம்.
இதோ படியுங்கள் உங்கள் எடை குறைக்கும் உணவு பொருட்களை பற்றிய தொகுப்பை.
பப்பாளி : பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறைகிறது. பப்பாளியில் இருக்கும் பபைன் என்னும் கூறு, எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த கூறு கொழுப்பை எரித்து, தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழித்து உடலில் உள்ள அதிகமான நீரை வெளியேற்றுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. பப்பாளி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது.
ஓட்ஸ் நீர் : ஓட்ஸை திட உணவாக எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக, 1:3 என்ற அளவில் அதிக அளவு நீர் சேர்த்து திரவ உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு அதிக நார்ச்சத்து உள்ள உணவாக கருதப்படுகிறது. இந்த உணவை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் எடை குறைகிறது. இந்த ஓட்ஸ் நீர் ,
நார்சத்து நிறைந்த ஒரு திரவம் ஆகையால், எளிதில் வயிறு நிரம்புகிறது. பசி குறைகிறது. குடல் பகுதில் படிந்துள்ள கொழுப்பை, இந்த நார்ச்சத்து கரைக்க உதவுகிறது. இதனால் செரிமானம் எளிதாகிறது.
ஓட்ஸ் நீரில் லேசிடின் என்னும் ஓர் மாவுசத்து இயற்கையாக உள்ளது. இந்த சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை
வெளியேற்றுகிறது. இதனால் செரிமானம் சீராகிறது. வயிற்றில் கொழுப்பு சேர்வது குறைகிறது. உடலில் உள்ள அதிகமான நீரை வெளியேற்றுகிறது. இந்த அதிகமான நீர் கூட சில நேரங்களில் எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன. இவை வெளியேறும்போது உடல் எடை தானாக குறைகிறது.
கற்றாழை மற்றும் எலுமிச்சை: ஆலோ வெரா எனப்படும் கற்றாழை மற்றும் எலுமிச்சை சேர்ந்த ஒரு கலவை, எடை குறைப்பிற்கு முக்கிய பொருட்களாக பார்க்கபடுகின்றது. கற்றாழையில் இருக்கும் இலைகளில் ஒரு ஜெல் போன்ற திரவம் உள்ளது.
அந்த ஜெல்லில் அண்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை அதிகம் உள்ளது. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மற்றும் இது ஒரு சிறந்த அண்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். இவை இரண்டும் சேர்த்த ஒரு கலவை, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆகவே, காலையில் வெறும்
வயிற்றில் கற்றாழை மற்றும் எலுமிச்சை கலந்த நீரை பருகுவதால் உடல் எடை குறைகிறது.
சாலட்: ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட ஒரு கிண்ணம் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல காலையை உருவாக்குகிறது. இந்த வகை உணவில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எளிதில் வயிறு நிறைகிறது.
கலோரிகளும் குறைவாக இருக்கிறது. வயிறு கனமாக இருப்பது போல் இல்லாமல், மிகவும் லேசாக உணர்வீர்கள். மேலும் பழம் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணுவதால், அவற்றில் உள்ள அண்டிஆக்ஸ்சிடென்ட் மற்றும் வைட்டமின் , மினரல்கள் போன்றவற்றால் உடலுக்கு சக்தியும் கிடைக்கிறது.
காய்கறி ஜூஸ் : காய்கறி ஜூஸ் விரும்பி சுவைக்கும் ருசி இல்லாமல் இருந்தாலும், உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடியதாகும். உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் இதன் முக்கிய பணியாகும். அதிகமான காலை உணவை சாப்பிடுவதற்கு மாற்றாக இந்த ஜூசை பருகலாம்.
இஞ்சி ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், கேரெட் ஜூஸ், ப்ரோகோலி பீட்ரூட் ஜூஸ், ஆப்பிள் மற்றும்ப இஞ்சி ஜூஸ், செலெரி மற்றும் தக்காளி ஜூஸ் பாகற்காய் ஜூஸ் போன்றவை எளிதில் தயாரிக்கக் கூடியதாகும். இவை மேற்கூறிய நன்மைகளையும் கொண்டது.
ஆப்பிள் : தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் உடல் வலிமை அதிகரிக்கிறது . மேலும் இதன் ஊட்டச்சத்துகள் உடல் எடை குறைப்பில் பெரிதும் உதவுகின்றன. ஆப்பிளில் அதிக நீர்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த சத்துகள், வயிற்றை எளிதில் நிரப்பி, உடல் எடை குறைய உதவுகிறது.
மேலும் இதன் கலோரிகள் மிகவும் குறைவு.

பாதாம்: தினமும் நீரில் ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. ஆனால் பாதாம் எடை குறைப்பிற்கு உதவும் என்பதை அறிவீர்களா? ஆம், வெளிநாட்டு பத்திரிகை ஒன்று , உடல் பருமன் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது.
அதில் கலந்து கொண்டவர்களில், நாள் முழுதும் பாதாம் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள்,அதிக மாவுசத்து உணவை எடுத்துக் கொண்டவர்கள் ஆகிய இருவருக்கும் கலோரிகள் அளவு ஒன்றாக இருந்தது. ஆனால் பாதாம் உட்கொண்டவர்கள் ஆறு மாதத்தில் 18% எடை குறைந்திருந்தனர்.
ஆகவே கலோரிகள் அளவில் ஆரோக்கியம் நிர்ணயிக்கபடுவதில்லை; ஆரோக்கிய கொழுப்பு உணவை எடுத்துக் கொள்வதனால் உடல் ஆரோகியம் அதிகரிக்கிறது.
அருகம் புல் ஜூஸ்: அருகம் புல் ஜூஸில் இரும்புசத்து, மக்னிசியம் , ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மற்றும் அதிக அளவு வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன.
இதில் உள்ள அதிக அளவு ஊட்டச்சத்தினால் பசி கட்டுப்படுகிறது. வெறும் வயிற்றில் இதனை பருகுவதால் எடை குறைப்பு அதிகரிக்கிறது.
மரகோதுமை : இந்த மரகோதுமை, கோதுமை அல்லது அரிசிக்கு மாற்றாக பயன்படுதும் ஒரு உணவு பொருள். இந்த குறைந்த கலோரி தானியம், குறைந்த கொழுப்பு
உணவாகவும் இருப்பதால் பசி கட்டுப்படுகிறது. காலை உணவில் மாவுச்சத்து உணவை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள், மரகோதுமையை பயன்படுத்தலாம். இதன்மூலம் நிச்சயம் எடை குறையும் வாய்ப்புகள் உண்டு.
பட்டை தூள் நீர் : இன்சுலின் போல ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும், பட்டை தூள் உதவுகிறது. நீங்கள் எடை குறைய வேண்டும் என்று விரும்பினால், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் பட்டை தூள் நீர் அருந்துவது நல்ல பலனை தரும்.
வெதுவெதுப்பான நீரில், 1/2 ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து இதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகவும்.
முட்டை : முட்டை என்பது அதிக புரத அளவு கொண்ட உணவாக கருதப்படுகிறது. முட்டையை காலை உணவாக சாப்பிடுவதால் வயிறு நிரம்பி, தினசரி கலோரி உட்கொள்ளல் அளவு 400க்கும் குறைவாக மாறுகிறது.
தினமும் 2 மஞ்சள் கருவிற்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில், இது இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது.
சோள உணவு கஞ்சி : எடை குறைப்பிற்கான வழிகளை மேற்கொள்ளும்போது, சோள கஞ்சி மிகவும் ஏற்புடையதாகிறது. வெறும் வயிற்றில் சோள கஞ்சி பருகுவதால், உடல் எடை குறைகிறது.
ஆரோக்கியம் அதிகரிக்கிறது. க்ளுடேன் இல்லாத ஓர் தானியமாக இருக்கிறது. நார்சத்து மற்றும் மினரல்கள் இருப்பதால் வயிறு எளிதில் நிரம்புகிறது.
கருந்திராட்சை : கருந்திராட்சை, அன்டி ஆக்ஸ்சிடென்ட் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள ஒரு பழம். இதன் கலோரி மிகவும் குறைவானது.
ஆகவே இவற்றை உங்கள் காலை உணவாக எடுத்துக் கொள்வதால் உங்கள் வயிறு எளிதில் நிரம்புகிறது.
தர்பூசணி : தர்பூசணி, நார்சத்து மற்றும் நீரால் ஆனா ஒரு பழம். காலையில் வெறும் வயற்றில், இந்த பழத்தை எடுத்துக் கொள்வது, 2 பெரிய கிளாஸ் தண்ணீர் குடித்து வயிறை நிரப்புவதற்கு சமம்.
ஆகவே எடை குறைப்பிற்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த பழம் இருக்கிறது.
முழு தானிய ப்ரெட் : வெள்ளை ப்ரெட் அல்லது பழுப்பு பிரெட்டை விட முழு தானிய ப்ரெட், சிறந்தது. இந்த ப்ரெட், குறைந்த கொழுப்பு அடங்கிய தானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
ஆகவே, வெறும் வயிற்றில், இந்த பிரெட்டை காலை உணவாக உண்ணும்போது, வயிறு எளிதில் நிரம்புகிறது.
க்ரீன் டீ : தற்காலத்தில், ஆரோக்கிய வட்டத்தின் சிறந்த தீர்வாக க்ரீன் டீ உள்ளது. எடை குறிப்பில் இது ஒரு நல்ல பலனை தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகவே ஒரு நாளில் 3 அல்லது 4 முறை க்ரீன் டீ பருகலாம்.
கோதுமை தவிடு: வெள்ளை ப்ரெட் தயாரிப்பில், வெளியாகும் கோதுமை தவிடு, அதிக ஊட்டச்சத்துகளை கொண்டது. 2 டேபிள் ஸ்பூன் கோதுமை தவிட்டில், 1.5 கிராம் அளவு கொழுப்பு உள்ளது. 2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
4 கிராம் புரதம் உள்ளது. மற்றும் அதிகளவு புரதம் மற்றும் மினரல்கள் உள்ளது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கூறு இதில் உள்ளது. ஆகவே தினசரி கோதுமை தவிடை எடுத்துக் கொள்வதால் உங்கள் எடை குறைந்தாலும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
நட்ஸ்: ஆரோக்கிய ஊட்டச்சத்துகளும் , கொழுப்புகளும் அடங்கியது நட்ஸ். தினமும் காலையில் வெறும் வயிற்றில் நட்ஸ் உட்கொள்ளும்போது விரைவில் எடை குறையும் வாய்ப்புள்ளது.
தேன் : தேன் என்பது ஐந்து விதமான சர்க்கரையை உள்ளடக்கியது. ஆகவே 1 ஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மீறில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உடல் விரைவில் இளைக்கும்.
தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு: 1 டம்ளர் தண்ணீருடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறை சேர்த்து பருகுவதால்
உங்கள் எடை விரைவில் குறையும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் எளிதில் உடல் எடை குறைகிறது.
எடை குறைப்பிற்கான பல்வேறு வழிகளை இங்கே பகிர்ந்திருகிறேன். நீங்களும் முயற்சித்து மற்றவர்களுக்கு இந்த நற்செய்தியை பரப்பலாம். விரைவில் உங்கள் எடை குறைய என் வாழ்த்துக்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with S Sylvester Darvin - (ழகரம் நோக்கி)

S Sylvester Darvin - (ழகரம் நோக்கி) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @zhagaram_nokki

20 May
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட
எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட
Read 20 tweets
24 Mar
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால்
மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்
Read 21 tweets
15 Feb
பூண்டு அற்புதபலன்கள்

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
Read 8 tweets
18 Dec 19
கடலை மிட்டாய் ஏன் சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து
நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான். இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.
பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.
Read 16 tweets
10 Dec 19
பழங்கள் சாப்பிடும் முறை

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் 'எப்போது' சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு,
மற்றும்வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
Read 23 tweets
18 Sep 19
மூலிகைகளும் அதன் சத்துக்களும்

1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!