1. எதுவும் கேட்காத என்ஜினியர்ஸ்…

❤️

நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.

ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.

உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும்
2. வாய்ப்பு.

இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
3. அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.

சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.

பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.

நன்றியையே எதிர்பார்க்காத, நாடு, குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும்
4. கருதா ஒரு சமூகம் இது.

ஒரு காட்டையே நாடாய் சமைத்துவிட்டு அடுத்த காட்டை நோக்கி ஓடும் நாடோடிகள்.

பொறியாளன் இல்லாத சமூகம் எப்படி இருந்திருக்கும்… காட்டுவாசியாய்த்தானே.?

அறிவியலாளன் இல்லாவிட்டால் பொறியாளன் ஏது என்பார்கள்.

அறிவியலாளன் எதையும் கண்டுபிடிப்பான். அதோடு அவன் வேலை
5. முடிந்தது. பொறியாளன் தான் அதை நமது தேவைக்குத் தகுந்தபடி வடிவமைப்பான்.

பறக்கலாம் என யோசித்த அறிவியலாளன் விமானம் கண்டுபிடிப்பான். அவன் பெயர் சரித்திரத்தில் இருக்கும்.

ஆனால், அதை இத்தனை பேர் அமர்ந்து செல்ல தோதாய் மெல்ல மெல்ல மெருகேற்றி வடிவமைத்தவன் பெயர் யாருக்காவது தெரியுமா.?
6. சொகுசுக்கு ஒரு ப்ளேன். பட்ஜெட்டுக்கு ஒரு ப்ளேன். பார்சல் சர்வீஸ் ஒரு ப்ளேன். போருக்கு ஒரு ப்ளேன். உளவுக்கு வேறொன்று. ஆளில்லாமல் ஒன்று. அதற்கடுத்த தேவை வந்தால் அதற்கும் ஒன்று என்று வடிவமைத்தது இவன் தானே.?

கூட்டு முயற்சி என்பார்கள்.

இன்னும் குறிப்பாய்ச் சொல்லலாம் என்றால்,
7. தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்றால், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்றால், காவிரியில் கல்லணையைக் கட்டியது யார் என்றால் பணம் போட்ட மன்னரைக் கைகாட்டும் வரலாறு அதைக் கட்டிய பொறியாளனை ஒரு குறிப்பாகவாவது குறித்து வைத்திருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது.

ஆசிரியர்
8. இல்லாமல் இதுவெல்லாம் சாத்தியமா என்போர் இதை கவனிக்க வேண்டும்.

ஏரோப்ளேன் கண்டுபிடிக்கும் முன் ஏரோடைனமிக்ஸ் இல்லை.

டீசல் என்ஜின் கண்டுபிடிக்கும் முன் ஆட்டோமொபல் இல்லை.

முதல் குடிசை கட்டுவதற்கு முன் சிவில் என்ஜினியரிங் இருந்திருக்காது.

ஆனால், கண்டுபிடித்து அதில் முன்னேற்றங்களை
9. கொண்டு வந்து கொடுத்தபின் அதன் இயல் சார்ந்து ஒரு படிப்பு உருவாகும். அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் உண்டாவார். ஆனால், அவர் கேட்கும் மரியாதையைக் கூட இந் என்ஜினியர்கள் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.

மனிதன் இவ்வுலகில் இரண்டு விதமான பொருட்களால் வாழ்கிறான்.

ஒன்று மனிதனால்
10. செய்யவே முடியாத ஐம்பெரும்பூதங்களால் ஆன இயற்கை சமைத்த பொருட்கள். இன்னொன்று முழுக்க முழுக்க மனிதனால் மட்டுமே செய்யப்பட்ட, நம் வாழ்க்கையை சீரமைத்து சுலபமாக்கும் நூறு சதவீத செயற்கைப் பொருட்கள்.

நீங்கள் உடுத்தும் உடை, நீங்கள் எழுதும் பேனா, நீங்கள் படிக்கும் புத்தகம், பயணிக்கும்
11. வாகனம், அது செல்ல சாலை, வீட்டில் பார்க்க டெலிவிஷன், தியேட்டரில் பார்க்க சினிமா, பாக்கெட்டில் இருக்கும் செல்போன், மூக்குக் கண்ணாடி, அதை முடிவு செய்யும் டெஸ்ட், ஆரோக்கியத்துக்கான மாத்திரை, அதற்குப் போடும் ஊசி.. என எங்கே இல்லை என்ஜினியரிங்.?

ஆனால், இதுவரை மற்ற துறை போல எங்காவது
12. என்னை மதியுங்கள் என்று கேட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பணம் பெற்றுக் கொண்டுதானே செய்கிறீர்கள் என்பார்கள். யார்தான் சும்மா செய்கிறோம்.? ஆனால்,

அது மட்டும் போதவில்லை இல்லையா வாழ்க்கைக்கு.?
.

ஹேப்பி என்ஜினியர்ஸ் டே.!
❤️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டேனியப்பா

டேனியப்பா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @minimeens

17 Jun
"கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர்களும் அவற்றின் வழங்கு சொற்களும்" கற்றுக் கொள்வோம் வாருங்கள்
-எழுத்தாளர் பிரபு தர்மராஜ்

🌑கன்னியாகுமரி - கன்னியாமறி, கன்னியாரி
🌑நாகர்கோவில் - நாரல், நாரோல், நாரியலு
🌑திருவெண்பரிசாரம் -த்ருப்சாரம், திருப்பேசாரம்
🌑கோதைகிராமம் -கோச்சப்பிளாரம்
1/n
🌑அழகியபாண்டியபுரம் -அழயாண்ட்ரம்
🌑பூதப்பாண்டி -புப்பாண்டி புவப்பாண்டி
🌑இறச்சகுளம் -எறச்சோளம்
🌑பன்றிக்குழி -பண்ணுளி
🌑பார்வதிபுரம் -பாரேயொரம், பாரியுரம்
🌑சுங்கான்கடை -சுங்கியாங்கட
🌑குமாரகோவில் -குமாரோல்
🌑மார்த்தாண்டம் -தொடுவட்டி
🌑கருங்கல் -கருங்க

2/n
🌑தெரிசனங்கோப்பு -தெர்ஸ்னோப்பு
🌑குளச்சல் -கொளச்ச
🌑குலசேகரம் -கொல்சேரம்
🌑தக்கலை -தக்கலெ
🌑வில்லுக்குறி -வில்லுவுரி
🌑திங்கள்சந்தை - திங்களாந்த
🌑கோட்டார் -க்வாட்டாரு
🌑கணேசபுரம் -க்ணேசொரம்
🌑செட்டிகுளம் -செட்டியொளம்
🌑புதுக்குடியிருப்பு - பூடீர்ப்பு

3/n
Read 8 tweets
12 Jun
குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி.! #WorldChildLabourDay

சினிமா ஆசையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் டைரக்டராகும் ஆசையில் எங்கள் அறைக்கு வந்திருந்தார். எங்களது நீண்ட நெடிய பேச்சு ஒரு
1/n
கட்டத்தில் திருப்பூர் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றித் திரும்பியது. அப்போது அந்தத் திருப்பூர் நண்பர், `சார்.. குழந்தைத் தொழிலாளர்னு சொல்றீங்க. அங்கே, ஒரு சிறுவன் சம்பாதிக்கற காசை பெரியவங்களாலகூட சம்பாதிக்க முடியாது, தெரியுமா?' என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்
2/n
ஒருவர் அவரைப் பார்த்து, `நண்பரே.. நீங்க சினிமா டைரக்டாகுற ஆசைய விட்ருங்க. ஏன்னா... உங்களால எப்ப குழந்தைத் தொழிலாளிகள் பத்தி கவலைப்படாம இருக்க முடியுதோ, அப்பவே உங்ககிட்ட இருந்து நல்ல படம் வராதுனு தெரிஞ்சுடுச்சு. வேணும்னா நீங்களே சொந்தமா படம் பண்ணிக்கோங்க' என்று வருத்தத்துடன்
3/n
Read 27 tweets
12 Jun
ஒரு பிலிப்பைன்ஸ் விவசாயி.!

என்னவோ சத்தம் என்றுதான் வெளியே எட்டிப் பார்த்தேன்.

அலுவலக டாய்லெட் வாசலில் அந்த முரட்டு நைஜீரிய என்ஜினியர் அங்கே பாவமாய் நின்றுகொண்டிருந்த நேபாளித் தொழிலாளிகள் இருவரையும் பயங்கரக் கோபத்துடன் அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான்.
ஓடிப்போய் அவனைத்
1/n
தடுத்தால்... காலையிலிருந்து டாய்லெட் அடைத்திருப்பதை சரிசெய்யாமல், அவசரத்திற்கு உள்ளே போகவிடாமல் அந்த நேபாளிகள் தடுப்பதாய் அந்த நைஜீரியன் கோபமாய்த் தெரிவிக்க, முக்கியமான இடத்தில் அடைத்திருப்பதால் தண்ணீர் போக மாட்டேன் என்கிறது, இன்ஸ்பெக்‌ஷன் சேம்பர் வழியாக எவ்வளவு குத்தியும்
2/n
அடைத்திருப்பது போகாததால், அதை சரி செய்யும் வரை டாய்லெட்டை உபயோகிக்க முடியாது என்று தடுத்ததாய் இவர்கள் ஹிந்தியில் சொன்னார்கள்.

பாவம்… இந்த நேபாளிகள். வேலை தெரியாத ஹெல்ப்பர் ஆட்கள். ப்ளம்பர் விடுமுறை என்பதால் சமாளிக்கலாம் என்று வந்தவர்கள், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல்
3/n
Read 28 tweets
9 Jun
பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்.!

அநாதை அநாதை என்று நாயகன் நாயகி சொல்லும் ஆயிரம் படங்களைப் பார்த்திருப்போம் நாம். ஆனால் உண்மையில் யார் அநாதை என்பதை இந்தப் படம் பார்க்கையில் தான் முதன்முதலில் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் தோற்றுத் தோற்று எழுந்து மறுபடி தோற்பார்களே... அப்படி ஒரு
1/n
மனிதன் நமது படத்தின் நாயகன் கார்ட்னர். விற்கவே விற்காத மெஷினை விற்கும் வேலை பார்த்துப் பார்த்து தோற்றுப்போய், அதிலிருந்து தப்பிக்க அடுத்து சம்பளமே இல்லாத வேலைக்குப் போகத் துணியும் ஒரு பரிதாப ஏழை அவன்.!

மனைவியின் சொற்ப சம்பளத்தில் தானும் வாழ்ந்து, தனது குழந்தையையும் படிக்க
2/n
வைத்துக் கொண்டிருக்கும் இந்த பரிதாப சேல்ஸ்மேனை, ஒரு மோசமான தருணத்தில் மனைவியும் விட்டுச் செல்ல, மகனுடன் தானும் பரம தரித்திரன் ஆகிறான் கார்ட்னர்.

அதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது அவனது நிஜமான வாழ்க்கைப் போராட்டம் .

ரத்த தானம் கொடுத்த காசில் மகனுக்கு மிட்டாய் வாங்குவது, இலவச
3/n
Read 12 tweets
6 Jun
ஆங்கிலமும் நாப்பழக்கம்.!
😋😋😋

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வாத்தியார் சொன்னார்.

"கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம். இங்க்லீஷ் எவ்வளவு நல்லாப் பேசறீங்களோ.. அவ்வளவு முன்னேற்றமும் நிச்சயம்.!"

சொன்னப்பவே எதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். நாமதான் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்
1/n
பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளர்ப்பாச்சே.

தமிழ்ல தள்ளாடுவமே தவிர, இங்க்லீஷ் இருக்கற பக்கமே போமாட்டம்ல.
அப்பிடியே விட்டாச்சு.

டிப்ளமோ முடிச்சு வேலை தேடறப்ப, செய்ன்ட் தாமஸ் மவுன்ட்ல கேட்டர்பில்லர் என்ஜின் டீலர் கம்பெனில இன்டர்வ்யூ போனப்ப க்ரூப் டிஸ்கஷன்ல டெபுடி
2/n
ஒர்க்ஸ் மேனேஜர் கேட்டாரு.

"ஏம்பா... எல்லாத்துக்கும் சரியாத்தான பதில் சொல்ற.? அப்பறம் ஏன் யோசிச்சு யோசிச்சு பேசற.?"

எதையாவது சொல்லிருக்கலாம்...
ஆனா, நம்முதுதான் ஓட்ட வாயாச்சே.!

"இல்ல சார்... நான் தமிழ் மீடியம் ஆளு. இங்க நீங்க எல்லாம் இங்க்லீஷ்ல சொல்றத தமிழ்ல புரிஞ்சு
3/n
Read 10 tweets
29 May
உலக தம்பதிகள் தினத்தில் தம்பதிகள் பற்றித்தான் எழுத வேண்டுமா என்ன.? நம்மைத் தம்பதிகளாய்ச் சேர்த்து வைத்தவர்கள் பற்றியும் சொல்லலாம் அல்லவா.?

நானும் பத்மினியும் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரே ஊர்தான்.. பொள்ளாச்சி. கல்லூரிக் காலங்களில் எனது நண்பன் வீட்டுக்கு அருகிலேயே தான் அவர்
1/n
வீடும் இருந்தது. நண்பர்கள் எல்லாம் அவன் வீட்டருகே இருக்கும் கிரவுண்டில் விளையாடப் போகையில், பத்மினியின் வீட்டுக்கு எதிரே உள்ள டீக்கடையில்தான் டீ குடிப்போம். ஆனால், திருமணத்திற்கு முன்புவரை அங்கே ஒரு பெண் இருந்ததே எனக்குத் தெரியாது.

தம்பியின் நண்பர் மூலமாக தகவல் தெரிந்து,
2/n
ஜாதகம் எல்லாம் பார்த்து பெண் வீட்டிலிருந்து எங்கள் வீட்டைப் பார்க்க வந்தபோது, நான் வேலை செய்த கம்பெனி மூடி நான் எந்த வேலையும் இல்லாமல் இருந்தேன்.

பத்மினியின் அப்பாவோடு அவர் நண்பரான அந்த டீக்கடைக்காரும் வந்திருந்தார். அவர்தான் எனக்கான முதல் ரெகமண்டேஷன். “பய நல்ல பையந்தாங்க..
3/n
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!