நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் நமது புலிப்பாய்ச்சலின் ஒரு முன்னோட்டமாக வருகிற செப் 19 மற்றும் 20 தேதிகளில் மாநிலம் தழுவிய *"உறுப்பினர் சேர்க்கை திருவிழா"வை* முன்னெடுக்க இருக்கிறோம்.
நமது தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னின்று நடத்தும் இந்த - 1/3
உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை மாபெரும் வெற்றியடைய செய்வோம்.
இந்த இரண்டு நாள் திருவிழாவில் அதிக உறுப்பினரை இணைக்கும் முதல் இரண்டு தொகுதிகளுக்கு நமது கட்சியின் சார்பாக பரிசு வழங்கப்பட இருக்கிறது.
▪️இந்த திருவிழாவில் தொகுதிக்கு குறைந்தது 100 உறுப்பினர் இணைப்பது போட்டியில் - 2/3
கலந்துகொள்ள அடிப்படை விதியாகும்.
▪️திருவிழா போட்டியின் முடிவுகள் செப் 21 திங்கள் அன்று அறிவிக்கப்படும்.
▪️போட்டியில் எல்லா தொகுதிகளும் பங்கேற்பது கட்டாயம் ஆகும்.
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22