1/ படியளக்கும் பெருமாள்.

#ஸ்ரீரங்கம்.

தமிழில் திருவரங்கம்.

தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில்
2/ இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.  

இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே
3/ பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும். 

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.

விடாய்
4/ பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.????

விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி துரும்பு என்றால் விறகு .... இவையெல்லாம் கல்வெட்டுகளில் உள்ள வார்த்தைகள். 

வெள்ளிக்கிழமைகளில் மத்திய வேளையில் தளிகை
5/ ஹம்சைக்கு மொச்சை அவசியம், ஆனால் அன்று துவாதசி என்றால் கிடையாது. திருவோணம் நட்சத்திரமானால் கட்டாயம் மிளகு சேர்க்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது அதில் சொல்லப்பட்டுள்ளது.

துவாதசி பரணை என்றால் 21 காய்கறிகள்.இஃது மத்திய வேளையில் மாத்திரமே.

மற்றைய நாட்களில் வேறு முறை.

ஸ்ரீ
6/ ரங்கத்தில் மாத்திரம் செடி ஐந்து, கொடி ஐந்து,காய் ஐந்து,கனி ஐந்து  தாவர பச்சீயம் (கீரை வகைகள்) ஐந்து என வகைப்படுத்தி தளிகை ஹம்சை நடக்கிறது.

சில தளிகைகளுக்கு மா கல் பாத்திரம் பயன்படுத்துவர்.

ஆச்சரியமாக இருக்கிறதா?????

இதற்கே அசந்தால் எப்படி, காலை மற்றும் இரவு நேர தளிகை
7/ வேறுவகை. இரவில் வெகு நிச்சயமாக தயிர், பச்சீயம், ஊறுகாய் வெண்ணெய் கிடையாது. அதுபோலவே காலை வேளையில் தானிய வகைகள் கிடையாது.

இதில் கவனிக்க தக்க அம்சம் ஒன்று உண்டு. தக்காளி, கேரட், பீன்ஸ்,சோயா, முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை இதில் கிடையாது.கிழங்குகளில்
8/ மஞ்சளை தவிர்த்து மற்ற உருளை, சேனை, கருணை கூட கிடையாது. இன்றளவும் இப்படி தான்.

செடி ஐந்து காய்கள் சமைக்கும் சமயத்தில் கொடி ஐந்தில் உள்ள காய்கள் பயன்படுத்திடமாட்டா.

உதாரணமாக செடி ஐந்து காய்களில் வெண்டை, சுண்டை, கத்தரி யோடு கொடி ஐந்து காய்களான அவரை மொச்சை கோவை எதுவும் இடம்
9/ பெறாது.

மலைப்பாக இருக்கிறதல்லவா..... எப்பேர்ப்பட்ட வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து வந்துள்ளனர் அவர்கள்.இதற்கு நா ருசி காரணம் அல்ல. நாராயணன் நாமத்தின் பால் உள்ள #ருசி.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறது கோதை சொன்ன வார்த்தை.இங்கு #பறை என்பது மேளம் அல்ல அளவை முறை.
10/ இன்றளவும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் நெல் அளவையை நேரில் வந்து பார்த்து செல்கிறார். 

பிரமோத்சவ காலங்களில் பத்து நாள் உத்சவத்தில் திருக்கொட்டாரம் வந்து நெல் அளவையை பார்வையிடுகிறார்.

இஃது உணவு பிரதானம் என்று காட்ட அல்ல, உன்னதமானவற்றையே உட்கொள்ள செய்ய வேண்டும் என்று பார்த்து
11/ பார்த்து நம்மை ஒரு தாயை போல பார்த்து கொள்கிறார். 

அவரை நாம் எப்படி கொண்டாட வேண்டும்.

ஸ்ரீ ராமாநுஜர் இதனை காட்டிக்கொடுக்கிறார். எப்படி??? அரங்கன் இரவு வேளையில் சுக்கு திப்பிலி மிளகு தட்டி போட்டு பால் ஹம்ஸை நடக்கிறது.இதற்கு உண்டான பால் சுவையாக தித்திப்புடன் இருக்க வேண்டும்
12/ என எண்ணுகிறார். இளம் கரும்புகளை மாடுகளுக்கு உட்கொள்ள கொடுத்து அதன் மடியில் கறக்கும் பால் இனிப்பான விதத்தில் இருக்கும் என்று அவ்விதம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.  இதற்கு பெயர் என்ன????

ஸ்ரீ ரங்கம் முழுவதுமே இப்படி பார்த்து பார்த்து கட்டமைத்து உள்ளனர். ஏதோ உட்கொள்ளும்
13/ விஷயம் மாத்திரம் அல்ல....

ஸ்ரீ ரங்கத்தின் மதில் சுவற்றில் ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். இவை ஏதோ நீர் வரும் வழி என்றோ அல்லது பராமரிப்பு செய்ய உள்ள வழியோ இல்லை. பிறகு அஃது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம் அவைகளை குறிப்பிட்ட
14/ வடிவில், அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் செம்பூரான் கற்களைக் கொண்டு உள்ளே கடுக்காய் சித்திரத்தை அம்மான் பச்சரிசி இவைகளை கொண்ட கலவைகளை பூசி உண்டாகியுள்ளனர் எதற்கு புறாக்கள் தங்க, அதுவும் #மரகதப்புறாக்கள். இந்த வகை புறாக்கள் தான் இன்று நம் தமிழகத்தின் மாநில பறவை❤️.

சரி
15/ இதற்கு இத்தனை முனைப்பு. இந்த புறாக்கள் அவ்வளவு சுலபமாக தன் இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காது. பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து பார்க்கும் அது. இஃது தன் கூட்டில் எச்சமிடாது. எதற்காக இந்த பறவை???

இது மழைக்கு மூன்று நாழிகை முன்பாக அகவையிடும், (கத்தும்) அந்திசந்தி வேளையில் கத்தாது,
16/ மண் கறையான், சிலந்தி பாம்பு இவற்றை அண்ட விடாது. அதுபோலவே தேள் பூரான் குளவி இவற்றை விரட்டி விடும். மற்ற எச்சம் இடும் பறவையினங்களை கிட்ட சேர்க்காது. 

ஒரு வேளை பறவை எச்சத்தில் விதைகள் இருந்து கல் இடுக்குகளில் விழுந்து முளைத்தால் கட்டிடத்திற்கு பாதிப்பு என்பதால் இந்த ஏற்பாடு.
17/ இப்போது சொல்லுங்கள் இஃது வெறும் பக்தி மாத்திரமா??????

உயர்ந்த உயிரியல் தத்துவமல்லவா, எப்பேர்ப்பட்ட அவதானிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப்படும்.

இதை தானே இன்று #பல்லுயிரியம் என்று உலகம் கொண்டாடுகிறது. அதனை அன்றே சாதித்த நம்மவர்களை நாம் என்னவென்று சொல்வது.அவர்களை நாம்
18/ எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை நீங்களே சொல்லுங்கள். வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

May 13
*கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை.*

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,

எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். Image
அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
Read 15 tweets
May 13
#பிரண்டை அல்லது 
#வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. Image
முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
Read 8 tweets
May 13
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். Image
இது கிழக்கு ஆசியாவில் 
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
மருத்துவக் குணங்கள்

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
Read 8 tweets
May 13
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும். Image
ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான 
கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
Read 6 tweets
May 13
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica) 
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய 
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது. Image
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார், 
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது.
Read 6 tweets
May 13
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். Image
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(