ஆம் எதிரானது தான். ஆனால் தமிழ்க்குடிகள் என்று அழைக்கப்படும் தமிழர் குடிப்பெயரும் சாதியவாதமும் ஒன்றா என்றால், அது நிச்சயமாக இல்லை.
பிறகு இது இரண்டும் ஒன்று எனக் கற்பித்து பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது புரிதலின்மையாலா, 1/n
அல்லது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதா!?
விவாதம் செய்ய திறனற்ற அதிமுக'காரனையும், ரஜினி ஆதரவாளனையும் வாதம் செய்து ஓடவிட்டதாலேயே, திறமையானவர் என கொண்டாடித் தொலைத்தது தவறோ என்று தமிழ்தேசிய பிள்ளைகளை சிந்திக்கும் நிலைக்கு, சிலரது சாதிய விளக்க பதிவு தள்ளிவிட்டது. 2/n
ஆதித்தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்திருந்த குடிப்பெயர்கள் என்பது தன்னை தமிழன் என அடையாளப்படுத்த உதவியதா அல்லது சாதிய பெருமை பேச பயன்படுத்த பட்டதா!?
தமிழ் இனமே போற்றி கொண்டாடும், ஏன் உலகமே வியந்து மதிக்கும், "அரசனுக்கு அரசன், தமிழ்ப்பாட்டன் இராசராசன்", 3/n
பெரிய கோவில் கல்வெட்டில் கோவிலை கட்டியெழுப்பிய குடிகளின் பெயரை தனது பெயரோடு இணைத்து பொறித்தானே, அதையும் சாதியவாதம் என்றே சொல்வீர்களா அல்லது கோவிலை கட்டிய குடிப்பெயர்களை பொறித்து 'தமிழன்' செய்தான் என அடையாளப்படுத்தி உலகுக்கு அறிய செய்யவே அவ்வாறு செய்தான் என்று சொல்வீர்களா!? 4/n
அடுத்து, பெயருக்கு பின்னால் குடியை இணைத்துக் கொண்டால் அவர்கள் சாதியவாதிகள் என்ற உளவியலை திணித்து, தமிழ் மக்களுக்கு குற்றவுணர்வு ஏற்படுத்தி, தமிழ் மண்ணில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்ட குடிப்பெயர்கள், இங்கு இவர்கள் சொல்லும் சாதியவாதத்தை 'சிறிதேனும்' ஒழித்து விட்டதா!? 5/n
பிறகு, ஆரிய கைக்கூலி திராவிடன் எந்த உள்நோக்கோடு, அதுவும் குறிப்பாக தமிழர் நிலத்தில் மட்டும் செய்தான்!?
குடிப்பெயரால் உலகாண்ட தமிழினம் அடையாளம் காணப்பட்டு எளிமையாக ஓர்மையாகி விடுவதை சிதைக்க,
அந்த குடிப்பெயர்களை நீக்கி, எந்த இனம் பெருமையோடு "நான் தமிழன்" என்று நின்றதோ, 6/n
அதே இனத்தை 'யாரெல்லாம் தமிழன்' என்று கேட்கும் அவலநிலைக்கு தள்ளினான். இது நம் கண் முன்னே, நம் சமகாலத்தில் நம்மை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இந்த வஞ்சகத்தை உணர்ந்து தெளிந்து தனது குடிப்பெயரை வெளிப்படுத்தினால் தான், 7/n
#தமிழன் என்ற இனம் அடையாளம் காணப்படும் என்ற யதாதர்த்த உண்மையை பேசி எதிர்த்த தமிழ்தேசியவாதிகளை திட்டமிட்டு சாதியவாதிகள் என முத்திரை குத்திய ஆரிய-திராவிட கும்பலால் தான், இதே நிலத்தில் தமிழரல்லாதவர்களின் சாதிய சங்கங்கள் வரை கட்டி எழுப்பி கோலோச்ச முடிந்தது என்பதை மறுக்க முடியுமா!? 8/n
பூலித்தேவன், அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள், பெரும்பிடுகு முத்தரையர் என தமிழினத்தின் அடையாளங்களாக கொண்டாடப்பட்ட எண்ணற்ற தமிழ் மன்னர்கள், இந்த குடிப்பெயர்களை நீக்கியதால் சாதிய அடையாளங்களாக மாற்றி நிறுத்தப்பட்ட சூழ்ச்சியை நேர்மையாக மறுக்க முடியுமா!? 9/n
இவ்வளவு சூழ்ச்சியை உணர்ந்தும், இல்லை இல்லை பெயரில் குடிப்பெயர் போடுவது சாதியவாதம், அப்படி செய்பவர்கள் சாதியவாதிகள் என்று உங்கள் திராவிட வழிகாட்டிகளின் குரலை தமிழ்தேசிய அரசியலில் திணிப்பது தான் அறமா??
உங்கள் கருத்துப்படி திராவிடன் குடிப்பெயர்களை நீக்கியது தான் சரி என்றால், 10/n
அரசு, அரசியல் எனும் மக்களின் வாழ்வியலை சிதைத்தழித்து, ஊழலை வளர்த்தெடுத்து, மக்களை அடிமைகளாக்கி, சுயநலத்துக்காக இன அழிப்பை செய்த திராவிட ஆட்சியாளனுக்கு இருந்த புரிதல்,
அறத்தோடு பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களுக்கு இல்லாமல் போனது என்றும் அவர்களும், 11/n
சாதியவாதிகள் தான் என்றும் திராவிடன் திணித்து வந்த தத்துவத்தையே தமிழ்தேசியத்திலும் நிறுவ முயல்கிறீர்களா!?
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்களே தூயதமிழ்தேசியம் என்று ஏதுமில்லை, தமிழ்தேசியம் என்றாலே தூய்மையானது தான் என்ற நேர்மையான விளக்கத்தை தந்துவிட்டு, 12/n
அதற்கு முற்று முரணாக அப்படிப்பட்ட தமிழ்தேசியம் பேசும் நமது நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவறிக்கையின் சட்டநாதன் குழு அறிக்கையின் படி தமிழ்குடிகளுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு பெற்று தரப்படும் என்பதற்கு நேர் எதிராக குடிப்பெயரே சாதியவாதம் என்று பதிவு செய்வது சரியா! 13/n
குடிப்பெயர் நீக்கத்தால் தான் "யார் தமிழன்" எனும் அவலநிவைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டது என்பதை உணர்ந்து, தெளிந்து, மீண்டெழுந்து வரும் தமிழ்தேசிய அரசியல் பாதையை மீண்டும் குற்றப்படுத்தி "யார் தமிழன்" எனும் அவலமே தொடர வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கமா, இல்லை புரிதலின்மையால் 14/n
ஏற்பட்ட பிழையா என்பதை காலம் உணர்த்தும்.
//உலகத் தமிழர்களிடம் "தம்பி" என குறிப்பிட்டாலே தலைவர் பிரபாகரன் தான் முதலாவதாக நினைவுக்கு வருவார். எனவே உங்கள் தவறுகளை அந்த புனித பெயரால் செய்து தலைவர் பெயருக்கு கலங்கம் கற்பிக்காதீர்கள், அல்லது வேறு பெயரில் செய்து கொள்ளுங்கள். 🙏 15/n
இறுதியாக ஐயா மணியரசன் சொன்னதையும், அண்ணன் சீமான் கூற்றையும் சொல்லி முடிக்கிறேன்.
ஆமைக்கறி ஈழத்தில் இயல்பானது என்றும், வன்னியில் அது தாராளமாக கிடைக்கும் என்றும், சீமான் அண்ணன் வன்னிக்கு போனது உண்மை என்றும் இயக்குனர் நந்து மூலமாக வெளிப்படுத்திய ஒரே ஊடகவியலாளன் #மதன்ரவிச்சந்திரன் மட்டுமே! 1/10
மனநோய் சாலினி நாம்தமிழர் அக்காமார் சீமான் அண்ணனின் இனிப்பான பேச்சுக்கு மயங்கிவிட்டனர் என்றதும் உடனே அவரை பேட்டிக்கண்டு அவரின் போலிமுகத்திரையை கிழித்த ஒரே ஊடகவியலாளன் #மதன்ரவிச்சந்திரன் மட்டுமே! 2/10
அக்கா காளியம்மாளை பேட்டிக்கண்டு சக வேட்பாளரோடு விவாதிக்கவிட்டு அவரின் வாத்திறமையை வெளியில் ஊடகத்திற்கு காட்டியது #மதன்ரவிச்சந்திரன் என்னும் ஊடகவியலாளன் மட்டுமே !! 3/10
ஈழத்தமிழர்களுக்கோ, இயக்கத்திற்கோ எதிரான காட்சி இருக்காதுன்னு சொல்லிட்டா எல்லாம் சரியாகிடுமா! @Saattaidurai அண்ணா?
மு.முரளிதரன் என்பவர் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கும், தலைவர் பிரபாகரனுக்கும் நேர் எதிரானவர் தானே! இனப்படுகொலை நடந்து முடிந்தபோது, புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் 1/5
என பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபரின் வாழ்க்கை வரலாறு தமிழில் அவசியமா!?
பணத்தை விட நேசிக்கிற மக்கள் தான் முக்கியம் என்று விஜய்சேதுபதி உளமார எண்ணினால், படத்தை கைவிட்டு அவரை நேசிப்பவர்களின் எதிர்ப்பை தனது வலிமையான குரலின் மூலமாக தானும் எதிர்ப்பை பதிவு செய்யலாமே! 2/5
படத்தில் சிங்கள வீரராக சிங்கள கொடியை அணிந்து வருபவனின் வாழ்க்கை வரலாறை சிங்களத்தில் எடுத்தால் இங்கு எவரும் எதிர்க்க போவதில்லை. அதுவும் இலங்கை கொடி கொண்டாடபடுவதை, பட விளம்பரம் என்று தமிழ் வீதி எங்கும் சிங்கள கொடி ஒட்டபட இருப்பதையும் நாம் கண்டிக்காமல் கடந்து சென்று விடுவோமா!? 3/5
உங்களை வாழ வைத்து கொண்டாடிய, தமிழ் மக்களின் இரத்த உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளின் சிங்கள கொடியை தமிழ்நாட்டு திரையரங்குகளில் பறக்க விடுவதற்கு துணை போவது, வாழ வைத்த இனத்தின் முதுகில் குத்துவதற்கு சமம் இல்லையா!? @VijaySethuOffl 😡 1/4 #Boycott_vijaysethupathi
முத்தையா முரளிதரன் விளையாட்டு வீரரின் விளையாட்டு திறமை குறித்த படத்தில் ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்கும் நீங்கள் மு.முரளிதரனை இந்திய வீரராக காட்டி படத்தை எடுக்க செய்ய முடியுமா!?
அவன் அடையாளத்தை என் நிலத்தில் திணிக்காதே என்று சொல்லும் உரிமை மண்ணின் மக்கள் தமிழர்களுக்கு இல்லையா?
இதை கைவிடாவிட்டால், தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள #விஜய்சேதுபதி அவர்களின் ரசிகர் மன்றங்களை கலைத்திட முன் வர வேண்டியது அவசியம் 3/4 #Boycott_vijaysethupathi
"சீமான் அண்ணன் ஏற்ற #தமிழ்த்தேசியதத்துவம் எனும் நம் மண்ணில் கலந்திருக்கும் ஆயிரமாண்டு கால பழமையான பெருமைமிகு தத்துவமே, பலரை நாதக'வில் பயணிக்க வைத்தது என்பதே யதார்த்த உண்மை".
குறிப்பாக அண்ணனின் 2009க்கு முந்தைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டவர்களுக்கு இது நன்கு விளங்கும். 1/n
2009க்கு முன்பு அவர் திராவிட மேடைகளில் பேசிய தமிழ், தமிழர் சார்ந்த கருத்தை அவர் ஒரு போதும் மாற்றிக் கொண்டதில்லை. அவர் அன்று பேசிய தேசிய இன விடுதலை, சமத்துவ சமூகம் கருத்தை தான், இன்றும் பேசுகிறார். அன்றிருந்த அதே கருத்து, அதில் இருந்து எந்த பின் வாங்கலும் இல்லை. 2/n
அப்படியிருக்க, அன்று அவர் திராவிட இயக்க மேடைகளில் முழங்கிய போது சேராத பெருங்கூட்டம், பின்பு தமிழ் தேசிய அரசியல் பேசும் போது அவரை நோக்கி ஏன் வந்தது, இப்போதும் வருகிறது!?
உண்மையிலேயே அவர் பேச்சை, முன்வைத்த கருத்தை மட்டுமே கேட்டு உள்வாங்கிக் கொண்டு வருவதாக இருந்தால், 3/n
அயன்கார்த்திகேயன் ஈழத்தை பற்றி தவறான பொய் தகவல்களை ஒரு காணோலியில போட்டபோது நாதக உறவுகள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததும் அயன் கார்த்திகேயன் என் தம்பி அவன் தவறுதலா பண்ணிட்டான். உண்மையான #factchecker அவன்கிட்ட நான் எடுத்த சொன்னதுக்கு வருத்தம் தெரிவிச்சானு 1/n
சொல்லி இதே @iamradioguru ராஜவேல் நாகராஜன் தான் தம்பிங்களையும் ஈழ உறவுகளோட எதிர்ப்பையும் மடை மாற்றினார்.
அப்ப கூட, அயன் கார்த்திகேயன் அந்த தவறுள்ள காணொலி பின்னூட்டுல போய் அது தவறுன்னு எழுதினானே தவிர, அந்த காணொலியை நீக்கல. 2/n
இப்போ வரைக்கும் அவன் வலையொலியில அதை மாற்றாம அது ஈழத்தை பற்றிய தவறான காணொலியா தான் இருக்கு. ஆனா அவனை திராவிட கைக்கூலின்னு திட்டுனா, அப்படி சொல்லாதிங்க, அவன் என் தம்பின்னு வந்து முட்டு கொடுக்க வேண்டிய தேவை என்ன? 3/n