இந்நாட்டின் குடிமக்கள்,தங்கள் உணவு பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தும் விவசாய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் போராடிக்கொண்டிருக்கையில், இச்சட்டங்களை அங்கிகரித்து குடியரசு தலைவர் கையெழுத்திட்டது அதிர்ச்சியளிக்கிறது.
உங்களை இந்நாட்டின் முதல் குடிமகன் என இன எப்படி சொல்லமுடியும்?
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமையகத்தில் ஒரு புத்தக விற்பனை நிலையம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏற்கனவே பல கோவில்கள் தனியாக புத்தகங்களை வெளியிடுகின்றன. தவிர, திருக்கோவில் என்ற மாத இதழும் வெளிவருகிறது.
ஆனால், இந்தப் பத்தகங்கள்,.
அந்தந்தக் கோவில்களுக்குச் செல்லும்போதுதான் வாங்கும் நிலை இருந்தது. எந்தக் கோவில் எந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது என்பதும் அங்கே சென்றால்தான் தெரியும்.
இந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறையே நேரடியாக புத்தகங்களை பெரிய அளவில் வெளியிட்டுள்ளது.
திருக்கோயில்களின்
தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களின் மறுபதிப்பு, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர
சிலரின் பதிவுகளை பார்த்தாலே சரிப்புதான் வருகிறது. @poovulagu ஜெயலலிதா ஆட்சியில் எதையுமே எதிர்த்ததில்லை என்றும் அமைதியாக இருந்ததாகவும் அரைவேக்காட்டுதனமாக எழுதியுள்ளதை படித்தால் அவர்களின் நிலையை பார்த்து பரிதாபம்தான் படமுடியும். தமிழ்நாட்டின் சூழல் போராட்ட வரலாற்றின்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த “கூடங்குளம் அணுவுலை எதிர்ப்ப” போராட்டம் நடைபெற்றது 2011-14 காலகட்டத்தில்தான். மீத்தேன்/ஹட்ரோகார்பன் போராட்டம் மிகவும் உக்கிரமாக நடைபெற்றது அந்த காலகட்டத்தில்தான். அதன் விளைவாகதான் கிரேட் ஈஸ்டன் கம்பெனிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. நியூட்ரினோ,
8 வழிச்சாலை,காட்டுப்பள்ளி போன்ற திட்டங்களுக்கு எதிரான எங்களுடைய எதிர்வினை அன்று தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களை சுட்டுக் கொன்றார்கள் என்பதற்காக எடப்பாடி ஆட்சிக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினோம், அன்று தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின்
அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் @AIADMKOfficial எடுத்துள்ள நிலைப்பாடு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்.எம்ஜியார் இதை நடைமுறைபடுத்த முயன்ற போது தேர்தலில் தோற்றுப்போனார், இந்த மண்ணிற்கு சம்மந்தமில்லாத “மதமாற்று தடைச் சட்டத்தை” ஜெயலலிதா கொண்டுவந்த சில மாதங்களில்
நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார், அதன் பிறகு வாபஸ் வாங்கினார். இப்போது அதிமுக எடுத்துள்ள நிலைப்பாடு பாஜக எடுத்துள்ளதைப் போன்றது, அப்படியெனில் எதற்காக மக்கள் அதிமுக என்கிற கட்சியை தேடப்போகிறார்கள்? இதன் தொடர்ச்சியாகதான், நேற்றைக்கு உள்துறை அமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி
அமைக்கும் என்றுள்ளார். அவர் அதிமுகவை மதிப்பவராக இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். யாருடைய வெற்றிடத்தை யார் நிரப்புகிறார்கள் என்பதை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும். உயர்சாதியில் பிறந்திருந்தாலும், ஜெஜெவால் சர்வவல்லமை படைத்திருந்த ஜெயந்திரரை கைது செய்ய முடிகிறது என்றால்
அந்த 17 பேருக்காக நாங்களும் அழுகிறோம். ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட அந்த 17 பேர் தான் இப்போது அதிகம் பேசப் படுகிறார்கள். அவர்களின் பொருட்டு இங்குள்ள சில வலது சாரி அறிவு ஜீவிகள் விடுதலையை தவறு என்று கண்டிக்கிறார்கள். 31 ஆண்டுகளுக்கு பிறகான விடுதலையை கண்டிப்பதற்கும் ஒரு
தனிப்பட்ட வேறு மாதிரியான மன நிலை தேவை.
அது இருக்கட்டும்.
வேறு சில கேள்விகளும் இங்கு எழுகின்றன.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட போது மூன்று பெண்கள் கொல்லப்பட்ட தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் இன்று தொடர்புடைய அனைவரும் வெளியே இருக்கிறார்கள். 18 வருடங்களில் அவர்கள் விடுதலை
செய்யப்பட்டார்கள். உங்கள் வாதப்படி சாதாரண மக்களுக்கான நீதியின் பொருட்டு சோனியா காந்தி சொன்னதை ஏற்று கொள்ள முடியாது என்றால் அதே அளவுகோலை தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லை, இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது ஒரு முக்கியமான தலைவர் என்று நீங்கள்
"நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது" - என்கிறார் @annamalai_k . இவர் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் இகாப அதிகாரி,
கொடுமை.🤦♂️🤦♂️
தீகாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால்
தெரியும் பட்டாசு மாசால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று. மிஸ்டர்,உலகம் முழுவதும் காற்று மாசால் 1கோடி பேர் இறக்கிறார்கள்.உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வுகாலம்7.5 ஆண்டுகள் காற்றுமாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என் சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் “மதம்” பிடித்துவிடும். இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததை அடுத்து ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பதாக சிலர் பேசித்திரிந்தனர்,அதுவும் தமிழக பாஜகவினர் சத்தம் அதிகமாகயிருந்தது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியும் இந்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதே நமக்கு துரோகம் விளைவிக்க என்று
. இதோ அந்த துரோகம் வெளிவந்துவிட்டது. “காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாதது மட்டுமல்ல, இப்போது உச்சநீதி மன்ற தீர்ப்பை துச்சமென மதித்து மேகதாட்டு திட்டம் குறித்து, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள 16வது காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் விவாதிக்கவுள்ளார்கள்”. காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதன் நோக்கமே, கர்நாடக மாநிலம் காவிரி மாநிலங்களுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் தண்ணீர் திறந்துவிடுகிறதா என்பதை கண்காணித்து உச்சநீதி மன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்துவதுதான். அதை ஒழுங்காக செய்யாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வரம்புகளை மீறி செயல்படுகிறது.