🌺மெட்ராஸ் பீச்சில் இன்று மாலை தர்ணா....🌺

#நாட்டுமக்களுக்கோர்எச்சரிக்கை...

அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.

அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
** “இல்லை தலைவா… நீ சொல்றது சரியில்லை…”

“பொறுமையாக் கேளுங்கடா… நான் இன்னும் முழுசாப் பேசியே முடிக்கலை….”

“ சரி தலை…. மொதல்ல நீங்க பேசுங்க தல. நாங்க கடைசியா கேள்விக்கு வரோம்…”

“சரி. இங்க பாருங்கப்பா… மொத நான் ஒன்னு சொல்லிக்கறேன்… நாம் ரொம்ப உயர்வான ஜாதி…
நம்மளை சாமியா வச்செல்லாம் கும்புடுறாங்க… அந்தளவுக்கு, பெரியவங்க நம்ம இனத்துக்கு மரியாதை சேத்து வச்சிட்டுப் போயிருக்காங்க. நாம அதைக் காப்பாத்தணும். அதுக்கு ஒரு சிறு இழுக்கு வந்தாலும் இனி பொறுமையா இருக்கக் கூடாது…”

”இதைத்தான தல நாங்களும் சொல்றோம்…”
“டேய்… இருடா…

இவனுக நம்மளை அடக்கி, கட்டிப் போடறானுக …. சரி சோறு போட்ட கைதானேன்னு வுட்டோம்…

அடுத்து, ராவைக்கும் பகலுக்கும் வெயில் மழை பாக்காம தெருவுல நிக்க வக்கிறானுக … அப்பவும் சரி… செஞ்சோத்துக் கடனுக்கு நின்னோம்…

அப்பன்லேந்து, ஆத்தாக்காரி, மவன், மவ எல்லாம்
பறக்குற தட்டை வீசி, வீசி நம்பளை எடுத்தா-ன்னானுக… சரி… நம்மளால நாலு பேரு சந்தோஷமா இருந்தா சரின்னு அதையும் செஞ்சோம்…

நாம காஞ்சு கிடக்க, அவனுக ஃபாரின் வரை போய், டாக்டர் வைத்தியமெல்லாம் செஞ்சு, தனக்கு பிள்ளை பெத்துக்கிட்டானுக…. சரி… குழந்தை தானே வருது…
அதுக்கிட்ட என்ன பொறாமைனு அதையும் விட்டோம்…

சின்னதா ஒடம்புக்கு வந்தாலும், பாக்க வக்கில்லாம கழட்டி விட்டுத் துரத்தி அடிச்சானுக….

சரிதான்… கட்டின பொண்டாட்டியையே புள்ளைகளோட கழட்டி விடுறவனுக்கு இது பெரிசா…. ஆண்டவன் பாத்துப்பான்னு போயிட்டோம்…
எவன் வம்புக்கும் போகாம, நாம் உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா… இவனுக கோவத்துக்கு நம்ம ஜாதியை இழுத்துப் பேசுறானுக…. இதைப் பொறுக்க முடியாது….”

“ஆமாம் தல…. பின்ன…. நாம என்ன இங்க இருக்கற ஹிந்து ஜாதிங்களா?? எத்தனை அசிங்கமாப் பேசினாலும்…. அத்த துடைச்சிவிட்டு போவுறதுக்கு?
இல்லை நாம அவனுக அடிமைகளா…. நம்மளப் போலவே நாக்கையும் தொங்கப் போட்டுக்கிட்டு பின்னாடியே போவுறானுங்களே சொரனை கெட்டு, அப்புடிப் போவுறதுக்கு...”

“ஆமா தலைவா… இதை வுடக் கூடாது. அவன் பேசுனவனை… மவனே...”

“லே... சைதாப்பேட்டை… கொதிக்காத… தோ… மயிலாப்பூர் ஆளுங்களுந்தான் இருக்கான்…
கம்முனு இல்லை?? நீ ஏன் சும்மா கத்துற??”

”இன்னா தலைவா…. அவிங்களோட எங்களை வச்சுப் பேசுற…. அவனுக கண்டுக்கிரவே மாட்றானுவ…. சொரனையத்துப் போயிட்டானுகளா…. இல்லை…. ஒதுங்கிப் போறானுகளான்னு தான் தெரில்ல….

ஆனா நான் சும்மா கருவாடும் மீனுமா தின்னு நல்ல ரோசத்தோட இருக்கேன்….
என்னைய மிரட்டாத தலைவா அடங்கிப் போகச் சொல்லி….”

“இவன் பேசுறது சரியில்லை தலைவா. நாங்க அமைதியா இருந்தா என்ன தப்பு? நம்ம ஆளுங்களே எங்களை கிண்டல் செஞ்சா, அடுத்து நாங்க ஒதுங்கி வேற இடம் தேடிப் போறோம் தலைவா…. வேணவே வேணாம் இந்த ஊரு…”

“டேய்…. மயிலாப்பூரு…. கோவப்படாதடா….
சைதாப்பேட்டை ஆதங்கத்துல சொல்லுது…..”

“தாம்பரம்… ஏதோ நீ சொன்னா சரியா இருக்கும்… சரி… நீங்க பேசுங்க தலை…”

“சரிடா… அடுத்து இதுக்கு என்னவெல்லாம் செஞ்சு நம்ம எதிர்ப்பைக் காட்டலாம்னு ஏதாவது நல்ல ஐடியா சொல்லுங்கடா… நம்ம சண்டையை அப்பறம் வச்சுக்கிரலாம்…”
“தல… நம்ம ஆளுங்க எங்க இருந்தாலும், வெளிநடப்பு செய்யச் சொல்லலாம்… அதுவும் சும்மா இல்ல தல…

நல்லா நாமளே நம்ம கழுத்துப் பட்டை பெல்ட்டு எல்லாத்தையும் புடுங்கி வுட்டுகினு… தெருவுல அழுதுகிட்டே ஓடிவந்து ரகளை செய்யலாம் தல…

சும்மா ஸ்டண்ட் அடிச்சாப்ல இருக்கும்ல…”
“நல்ல வேளைடா… உன் பட்டையைக் கிழிச்சுக்கலாம்ன… அடுத்தவன் பட்டையை இதே போல கிழிச்சு கூட்டத்துல அவமானப் படுத்தி கிடுத்தி வச்சிராதீங்கடா…

யம்மா மகளிரணி… எதுக்கும் உங்க ஆளுங்களோட ஒதுங்கியே நில்லு…”

“தலீவா… இந்த ரெண்டு கூத்தும் ஏற்கனவே டி.வி. பொட்டில
எல்லாரும் கண்டுக்கிட்டானுவ… நாம புதுசா ஏதாச்சும் செய்யணும் தலீவா…”

“இதெல்லாம் வாணாம் தலை… நம்ம வேற ஏதாச்சும் செய்யலாம்… நீ வேண்ணா உண்ணாவிரதம் அனௌன்ஸ் பண்ணு தலை…

காலவரையற்ற உண்னாவிரதம்னு போடு… காலைல நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, அப்படியே சோந்து போய் வந்து கவுந்துக்க...
அதுவும்... உன் ராயப்பேட்டை வூட்டுல…. நாங்க ஆளுங்க சுத்தி நின்னுக்குறோம்….

உனக்கும் வயசாயிடுச்சு தலை…. அதனால சீக்கிரமா….”

“டேய்…. அண்ணா நகரு…. போதும்டா…. சிரிப்பு காட்டாத…. ஏற்கனவே நம்ம ஆளுங்களே நிறைய பேரு தலைக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டிருக்கு….
இதுல இந்தக் கூத்தெல்லாம் அடிச்சா அப்பறம் மனுசனுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காது….”

“ஹா…. ஹா…. ஹா….”

“டேய்…. எல்லாரும் சிரிச்சது போதும்…. என்னடா எக்மோரு…. நீ மாத்தரம் கம்முனு இருக்க?”

“தலைவா… நான் ஒன்னு சொல்லவா… இதெல்லாம் வேணாம்…
நாம எப்பவும் அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கணும். இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் நமக்கு ஒரு நல்ல பொதுத் தலைவர் கிடைச்சிருக்காரு....

அவர் தன் ஊரிலயிருந்து அப்பப்போ எல்லா இடமும் சுத்தி, எல்லாரையும் ஃப்ரண்டு புடிச்சு, நமக்கு எவ்வளவோ நல்லது செய்யறாரு…
அவரு பேரைக் கெடுக்காதபடிக்கு ஒழுங்க ஒரு அமைதிப் பேரணி…. இல்லன்னா மெரீனாவுல ஒரு அமைதிப் போராட்டம் நடத்தலாம்…

எங்க அந்த ட்ரிப்ளிகேன்?? நீங்க சொல்லுங்க… இது ஓ.கே.வா??”

“ஓ.கே. தான்… ஆனா வேற ஒரு ப்ரச்சனை… நாம ஊர்வலமோ, தர்ணாவோ நடத்த விடமாட்டானுக…
அதுக்கு பர்மிஷன் வாங்குறது அவ்வளவு ஈஸி இல்லை…”

“அது எப்புடிங்க சாரே? இவனுங்க தனக்குள்ள என்ன சண்டை வேணா போட்டுக்கட்டும்… அதுக்காக இவனுங்களை நம்ம பேரைச் சொல்லி திட்டுறதும்… நம்ம பேரைச் சொல்லி வெளியேத்துறதும் மட்டும் சரியா??”

“டேய் சைதாபேட்டை… ஏன்டா ரொம்ப சூடாவுற?
நம்ம எதிர்ப்பு, இவனுக கோவத்துல ஒருத்தனை வெளிய போன்னு சொல்ல நம்ம ஜனத்துப் பேரைச் சொல்லி எகுறுனதுனால தானே… நீ குதிக்கிற… இதே வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு எவனாவது சவுண்டு வுடுறானா பாரு…”

“அது எனக்குத் தேவையில்லை தலைவா… நாளைக்கு நீ அவன் சொன்னதைக் கேக்கலைன்னா,
அல்டாப்பா எதிர்கட்சிக்குத் தாவுவானுக பதவி கேட்டு… நாங்க அப்படியா…”

“டேய்… நமக்குள்ள அடிச்சிக்கிட்டா அப்பறம் நாம எதிர்க்கறவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? வாயை மூடு…

ட்ரிப்ளிகேன்… நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது… நாம அமைதியான தர்ணா செய்யணும்… செய்யறோம்…
ஏற்பாடு செய்ங்க அதுக்கு…”

“சரிங்க தலைவா…”

“என்னடா எல்லாருக்கும் சரியா… தர்மத்தோட நாம போரிடலாம்டா… கொஞ்ச கொஞ்சமா இனி நம்ம ஒத்துமையை அதிகம் செய்யணும். இல்லைன்னா அந்த மன்ன்ன்

“டேய்… அப்புடியே மொபைல்ல ஒரு க்ரூப் மெஸேஜைத் தட்டி வுடுங்கடா…
எல்லா ஊர்லயும் பேனர் ரெடி பண்ணி மாட்டச் சொல்லு… அப்படியே எதுக்கும் ஒரு ஐயாயிரம் பேரை ரெடியா இருக்கச் சொல்லு… ரொம்ப ஏதாச்சும் பண்ணானுகன்னு வை…

ஒரு கால் மொபைல்ல, அத்தன பேரும் வந்து குவியணும் அரை மணியில… அப்பறம் நம்ம அமைதி மாறி சுய உருவம் காட்டையில தான் தெரியும் நாம யாருன்னு
ஆனா இது சேஃப்டிக்கு மட்டும் தாண்டா… இத்த வச்சு எவனும் வாலாட்டக் கூடாது அநாவஸ்யமா…”

“சரி தலை… நீ சொன்னா சரிதான்… ஆனா நம்மளைப் பாத்து இவனுக வெக்கப்படணும்… அதே சமயம் பயம் வரணும்… இனி நம்மளாண்ட வாலாட்டுனா… இவனுக வாலை ஒட்ட நறுக்கிருவோம்னு…”
“வரும்டா… குரல் இருக்குற எடத்தை விட, அமைதியா ஆப்பு அடிக்கறவனைக் கண்டாத்தான், எப்ப என்ன செய்வானோன்னு பயம் வரும். அத்த நம்ம தோட்டம் சொல்லிக் குடுத்துச்சு. அதே போல அமைதி ஆப்பு அடிக்கிறோம்…

மவனே… அதுக்கு மேல எந்த ராசா எந்த பட்டணம் போனாலும்… நம்மைப் பேசினா விழுந்து கடிக்கிறோம்…”

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Jan 22
😡தமிழகத்தின் அயோத்தியாக மாறப்போகும் திருப்பரங்குன்றம்
மலை.😡
(வந்துள்ள தகவல்... பொறுமையாகப் படிக்க)

"பிப்ரவரி 18... ரத்த ஆறாக ஓடப் போகும் திருப்பரங்குன்றம் மலை.

அனைத்து ஆவணங்களிலும் திருப்பரங்குன்றம் மலை என்ற பெயர் நீக்கப்பட்டு சிக்கந்தர் மலை என்று சேர்க்கப்பட்டுள்ளது. Image
அதை இந்த கேடுகெட்ட திமுக அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான PFI யுடைய முகமூடி தான் இந்த SDPI. அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டவை இந்த இரு அமைப்புகள்.

தமிழகத்தில் PFIஐ மட்டும் தடை செய்துவிட்டு, அதனுடைய நிர்வாகிகள் அனைவரும்
தற்போது SDPI அமைப்பில் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள அந்தப் பள்ளிவாசல் பிரச்சனையை முழுவதுமாக கையாள்வது SDPI என்ற தீவிரவாத பின்னணி கொண்ட அமைப்புதான்.

👉ஆனால் தற்போது இவ்வமைப்பு அதிமுகவின் கூட்டணியில் உள்ளது.👈
Read 23 tweets
Jan 10
🌺பகைவனுக்கும் பகவான் ரக்ஷிப்பானா... இதோ...🌺

அடியேனது நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன்

மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா இது பாரபட்சம் இல்லையா என கேட்டான்.
அவனை, ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்றான்.

வாரத்தின் 7 நாட்கள் கூறு என்றேன்.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

"இப்போ உன் கேள்வி, ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில்
பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும்தானே?"

"பகவான் எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்கும் பாரபக்ஷம் காட்டமாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களைக் கொடுத்தான் பின் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.
Read 14 tweets
Jan 6
🌺யாருக்கேனும் இப்பதிவு உதவலாம்...🌺

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.
மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில்,

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும்
திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, Image
Read 13 tweets
Dec 10, 2024
🌺போகலாமா நரகலோகம்...😃🤣🌺

யமலோகத்திற்கு சென்ற வாஜ்பாயையும் கட்டுமரத்தையும் பாவ-புண்ணிய கணக்கு பார்க்க கூட்டிச் சென்றனர் சித்திரகுப்தர்கள்.

யமதர்மராஜா முதலில் வாஜ்பாயைப் பார்த்து கேட்டார்,

”யார் இது ? இவர் புண்ணிய-பாவ கணக்கு என்ன ?”

”ஐயா இவர் பாரத பிரதமராக இருந்தார். Image
இவர் வாழும் போதெல்லாம் தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர். திருமணம்கூட செய்து கொள்ளாமல் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.”

”அப்படியா... சரி இவருக்கு ஸ்வர்க போகத்தைக் கொடு.”

”யமதர்மராஜரே...” என்றார் வாஜ்பாய்.

”ம்... சொல்லுங்கள் தர்ம சிரேஷ்டரே...”
”ஐயா நான் செய்த புண்யத்தில் என்னைப் பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த மக்களுக்கும் பங்குண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த புண்ணியம் செய்யும் பேறு கிடைத்திருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் ஸ்வர்க போகம் கிடைக்கட்டும்.” எனக் கேட்டார்.

”ததாஸ்து.” என்றார் யமதர்மராஜா. Image
Read 8 tweets
Nov 11, 2024
🌺ஹிந்துக்களுக்கு எச்சரிக்கை...🌺

📝TN DMK CHIEF MINISTER M K STALIN's GOVERNANCE : 04-11-2024.

📝தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்திருக்கிறது. மிக விரைவில் கணக்கெடுக்க வீடு வீடாக வருவார்கள்.

அப்போது உங்கள் ஜாதியை மட்டும் சொன்னால் போதாது.❌ Image
கூடவே மதத்தையும் எழுதச்சொல்ல வேண்டும். உதாரணமாக...
💪கொங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஜாதியைச் சொல்லும்போது,
🚩ஹிந்து கொங்கு🚩 என்று சொல்லவேண்டும்.

💪நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஜாதியைச் சொல்லும்போது
🚩ஹிந்து நாயுடு🚩 என்று சொல்ல வேண்டும். Image
Image
📝2011 CENSUS-ல் கேட்கப்பட்ட கேள்விகளை அளித்துள்ளோம்.(Ref:- )

இதில் Religion-க்கு அடுத்து Scheduled Caste & Tribe பற்றிய கேள்வி வருகிறது.ஆனால் அதற்கு முன்னால்
🌟NATIONALITY🌟 என்ற கேள்வி ஏனில்லை?

எத்தனையோ பேர் OCI Greencard Holders இன்னும் பாரதத்தில்census.gov.in
Read 18 tweets
Nov 7, 2024
🌺போதுமடா கூக்குரல்....🌺

💥வெள்ளக்காரன் அடிமைகள் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?

💥சிப்பாய்க் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது மங்கள் பாண்டே என்ற பிராமணர்.

💥வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை
வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்.

💥பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்ற சந்திரசேகர ஆசாத் இருவரும் பிராமணர்கள்.
💥இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் குதிராம் போஸ் ஒரு பிராமணர்.

💥பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காகத் தியாகம் செய்த பத்மாசனி ஒரு பிராமணப்பெண்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(