உன் சொந்த உபயோகத்துக்காக வாய்க்காலை வெட்டுகிராயா என்று சிலர் கேட்டதிற்கு,"நானோ எனது சந்ததியினரோ வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் "என்று வாக்கை தந்து, வாய்க்காலை நாட்டுடமை ஆக்கி, தன்னை தானே (ஊற்றுக்குளிக்கு)நாடு கடத்திகிட்ட உத்தமன் !
காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.
தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது.
ஒருமுறை காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் இவர்களுக்கு விருந்து சமைக்க பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா? என சகோத ரியின் குடும்பத்தினரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு, 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாய் இருந்தால் என்ன?' என்று கேலி செய்திருக்கிறார்கள்
கோபமடைந்த காளிங்கராயன், தனது தேசத்தின் புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுக்கிறார்.
பவானி ஆற்றிலிருந்து தனது தேசமான மேட்டுப் பகுதிக்கு கால்வாய் வெட்ட திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் கைவிரிக்கிறார்கள்.இதனால் மனம் உடைந்து கிடந்த காளிங்கராயனுக்கு ஈசனே பாம்பு ரூபத்தில் வந்து வாய்க்காலுக்கான வழியை காட்டினார்!
அதன்படி, தனது சொந்த செலவில் வாய்க்காலையும் பாம்புபோலவே வளைத்து நெளித்து கட்டி முடிக்கிறார். அவர் சபதம் எடுத்தபடி மேட்டுப் பகு தியை நோக்கி பாய்ந்து வந்து சேர்ந்தது பவானி தண்ணீர். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாயின.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கனவுகள் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு
இரவு உறங்கும் முன் கை, கால் கழுவி விட்டு, திருநீறு பூசி, இறைவா என் கனவில் காட்சி தா 🙏என்று வேண்டினால் இறைவன் ஒரு நாள் நிச்சியமாக திருக்காட்சி தருவார் !!!🙏🙏🙏