1.முன்பணம் 2 லட்சத்திற்கு மேல் வாங்கினால் செக் அல்லது RTGS மூலம் வாங்கணும்
2.மீத பணம் 2 லட்சத்திற்கு மேல் எனில் DD/RTGS மூலம் மட்டுமே பெறனும்
3.கிரயத்தின் போது சார்பதிவாளர் பணம் வாங்கிடீங்களான்னு கேட்பார்,நாம் வாங்கிட்டோம்னு சொன்னா மட்டும்தான் கிரயம் முடியும்.
4.பணம் வாங்கிய
அவ்வளவு செக்,RTGS எண்களையும் கிரய பத்திரத்தில் குறிக்கணும். 5. ஒருவேளை ஹௌசிங் லோன் மூலம் செக் வந்தால், வங்கிக்கு நேராக சென்று செக்கை ஒருமுறை ஒரிஜினல் ஆ என்று பார்க்கணும். 6. பத்திரத்தில் குறிக்கப்பட்ட ஹௌசிங் லோன் செக் பாஸ் ஆகலைன்னா கிரயம் செல்லாது. 7. Post தேதியிட்ட செக் வச்சு
57 லட்சம் கிரயம் செஞ்சேன்னு சொன்னா,கேட்டுட்டு மண்டைய ஆட்ட நாங்க ஒன்னும் கேணயன் இல்ல,MR பிரசாந்த்.
இது எல்லாத்துக்கும் மேல அவர் கிட்ட நீங்க cheque வாங்கினது உண்மைனா,அதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்கு
1.அரசு பதிவேட்டில் நிலத்தின் மதிப்பு சதுரடி 500 ரூபாய் என இருக்கும் 2. பேங்க் லோன் மதிப்பில் சதுரடி 2500 என இடத்தை பொறுத்து கணக்கிடுவார்கள்
3. ஆனால் சந்தை மதிப்பு,இடத்தை பொறுத்து,போட்டியை பொறுத்து சதுரடி 4500 ஆக இருக்கும்,
4. விற்பவரும் வாங்குபவரும் சமரசம் செய்து அரசு மதிப்பில் கண்துடைப்பிற்கு சதுரடி 500க்கு வாங்கினேன் என்று கிரயம் செய்வார்கள்,செக்,RTGS எல்லாம் பத்திரத்தில் மிக சரியாக இருக்கும்.
5. ஆனால் உண்மையான விற்பனை விலை சதுரடி 5000 ஆக இருக்கும், இதனால் 11% அரசுக்கு செலுத்த வேண்டிய கிரய தொகையை தவிர்த்து கொள்வார்கள்.
6. கருப்பு பணத்தில், முன்பனமாக 10 லட்சம் கொடுத்து, மீத பணத்தை கிரயம் முடிஞ்சதும் தரேன்,அதுவரை இந்த செக்கை வச்சிக்கோங்கன்னு கொடுத்திருப்பார்.
7. கிரயம் முடிஞ்சதும்,சட்டப்படி பத்திரத்தில் உள்ள தொகை RTGS ஆகி இருக்கும், கருப்பு பணத்திற்கு கொடுத்த செக்கை வாங்கியவர் கேன்சல் செய்திருப்பார்.
8. இப்போ அரசுக்கு வரி காட்டாமல், கருப்பு பணம் மூலம்,கிரயம் செய்ய ஆசை பட்டதால், திருடனுக்கு நல்ல பாம்பு கொத்துனது போல, பிரசாந்த்
வாயில் நுரை தள்ளி இருக்கிறார்.
கருப்பு பணத்தை கொண்டு பரிவர்த்தனை செய்ததற்கு,சட்டப்படி பிரசாந்தை கைது செய்ய வேண்டும்.
கிரய பத்திரத்தில் உள்ள தொகையை முறையாக செலுத்தியதால், வாங்கியவருக்கு இடம் சொந்தம். வழக்கு நீதி மன்றத்தில் நிற்காது.
மற்றும் ஓர் முக்கியமான விஷயம்,2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக நீங்கள் செய்யும் பரிவர்த்தனை கருப்பு பணமாக கருதப்படும்.2 லட்சத்திற்கு மேல் நீங்கள் எவ்வளவு வாங்கினீர்களோ அதற்கு 100% வரி விதிக்கப்படும்
பார்க்கப்போனா, பிரசாந்த் ஜெயிலுக்கு போறதோடு இல்லாமல் அவர் வாங்கிய கருப்பு பணத்திற்கு
100% வரி கட்ட வேண்டி இருக்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh