#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி் அந்தாதி!
கிட்டத்தட்ட 275 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கடையூரில் தோன்றிய உமை பக்தர் அவளுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர். 1/n
இவர் பாடிய அபிராமி அந்தாதி அம்பிகையிடம் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொன்டது.
ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.
அந்தாதியை பற்றி பல சம்பவங்கள் உன்டு. அவற்னில் ஒன்று; மன்னரின் அவையில் அமாவாசை திதியைவாய் தவரி பௌர்ணமி என்று சொன்ன அபிராமி பட்டரை 79வது
பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருதோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாக காட்சி தந்தது. 3/n
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்பளை எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் பாடியுள்ளார்!
#அபிராமிஅந்தாத #தினம்_ஒரு_பாடல்
காப்பு :
தாரமர் கொன்றையும் சென்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
தில்லை நாயகனான பரம்பொருளும் அவனில் சரிபாதியான உமையவளின் மைந்தனே. மேகத்தை நிணைவுபடுத்தும் பேரழகு மேனியை கொன்ட பிள்ளையாரே, ஏழு உலகத்தையும் படைத்த அபிராமியின் பேரருளையும் அழகையும் போற்றி பாடும் இந்த அந்தாதி என் சிந்தையுள் ஊரி கிடக்கச் செய்தருள்வீராக!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
நூல் - பாடல் 1
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
விளக்கம். - பாடல் 1
பட்டர் பெருமான் அபிராமி அன்னையை மணக்கும் குங்கும குழம்பு போன்ற சிவந்த மேனி கொன்டவள் அவள் அதிகாலை எழுந்தருளும் சூரியனாரின் கதிர் மற்றறும் உச்சி திலகத்தை போன்றவள் ஜொலிக்கும் மாணிக்கத்தை போன்றவள்.
விளக்கம் - பாடல் 1 (தொடர்சி)
மாதுளை மொட்டு போன்ற அவளை ம்ருதுவான மலரில் வாசம் செய்யும் திருமகளும் போற்ற தகுதி உடையவள் என புகளாரம் சூட்டி, அபிராமியே தனக்கு துணை என்று முழங்குகிரார்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 2
துணையும் தொழுந்தெய்வமும், பெற்றதாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும்பனி மலர்பூங்கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. (2)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்

விளக்கம் (2) : அன்னையை, அபிராமியை தெய்வமாக மட்டுமின்றி உருதுணையாக கருதும் பட்டர் பெருமான் அவளை வேதங்களின் வேர் மற்றும் கிளையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், தன் தாயாகவும் விவரிக்கிரார். குளிர்ந்த மலர் அம்புடன் கரும்பு வில்லும் ஏந்திய கருனை கடல்
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் (2) தொடர்சி :

மெல்லிய பாசமும்-அங்குசமும் ஏந்தி எமை காக்கும் திருபுர சுந்தரியாக இருக்கிராள் என்று பெருமிதம் அடைகிரார்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் (3)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே ! வெரைவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே! (3)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் (3) : அன்னை அபிராமியே, அருளை வாரிவழங்கும் தாயே உன்னை உணர்ந்த அடியார்களை நான் தேடி செல்லவில்லை. நரகத்தில் விழுந்து தீய வழி காட்டும் மனிதரை நாடிச்சேன்று நலிந்து கொன்டிருப்பதை உணர்ந்த நான்,
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் (3) தொடர்சி
எவரும் அறியாத வேத ஞானத்தை அடைந்து உன் திருவடியில் தஞ்சம் அடைந்தேன். அபிராமி தாயே எனக்கு நீயே துணை
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் (4) : கோமளவல்லி தாயே, உனது சிவந்த பாதங்களில் மனிதர்கள் தேவர்கள் மற்றும் மாயாமுனிவர்கள் சரண்டைகின்றனர். என் மனதில் நீண்ட சடையுடன் கொன்றை மலரையும், குளுமையான நிலவையும், பாம்பையும் புனித கங்கையையும் தாங்கி காட்சிதரும் ஈசனுடன் சேர்ந்து
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 5:
பொருந்திய முப்பரை செப்புரை செய்யும் புணர்முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல் திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம், பாதம் என் சென்னியதே. (5)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்

விளக்கம் (5) : படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளிலும் உயிரினங்களுடன் ஒன்றி இருக்கும் அன்னையே. மார்பில் மாணிக்க பூண் அணிந்து வஞ்சிக்கொடி போல மெல்லிய இடை கொன்ட மனோன்மணியே. உன்னை துதிப்போரை ஞானியராக்கி அருளும் தாயே,
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 5 (தொடர்சி)
சடைமுடி தரித்த ஈசனார் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய தேவியே, தாமரை மலரினும் மென்மையான உனது பாதங்களை என் தலைமேல் தாங்கி உன்னை தஞ்சமடைவேன் தாயே!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 4
மனிதரும் தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக் குனிதரும், சேவடிக்கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும் நீயுமென்புந்தி எந்தாளும் பொருந்துகவே. (4)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் (4) : கோமளவல்லி தாயே, உனது சிவந்த பாதங்களில் மனிதர்கள், தேவர்கள் மற்றும் மாயாமுனிவர்கள் சரண்டைகின்றனர். என் மனதில் நீண்ட சடையுடன் கொன்றை மலரையும் குளுமையான நிலவையும், பாம்பையும்
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 4 (தொடர்சி)
புனித கங்கையையும் தாங்கி காட்சிதரும் ஈசனுடன் சேர்ந்து நீ என்னுள் ஆட்சிசெய்ய வேன்டும்
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 6 :
சென்னியது உன்பொர் திருவடித்தாமரை சிந்தையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ண பெண்ணே முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே பன்னியது, என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. (6)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்(6)
பூஜிக்கதக்க திருமேனி கொன்ட அபிராமி அன்னையே என்னாளும் என் சிரம்மேல் தாங்கி வணங்குவது உன் அழகிய பாதங்களையே! என்னுள் நிலைத்து இருப்பது உன்னை போற்றிப்பாடும் மந்திரங்களே..
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 6(தொடர்சி):
செந்தூர நிரத்தவளே உன்னை எக்கனமும் தொழக்குடிய அடியார்களுடனே கலந்திருந்து எல்லாம்வல்ல உனது ஆகம நெறியையே பாடி மகிழ்ந்திருப்பேன்
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 7:
ததியுரு மத்திற் சுழலும்என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்தூரானன சுந்தரியே! (7)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 7 : சிவந்த மென்மையான பாதங்களும் செந்தூர திலமும் இட்டு கண்கொள்ளா அழகுடன் ஜொலித்துக் கொன்டு, பிரம்ம தேவனாலம் திருமாலாலும் வணங்கி தொழப்படும் அன்னையை, பிறப்பு-இறப்பின் சழர்சியில் தயிர்கடையும் மத்து போல் சிக்கி தவிக்காமல்,
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 7 (தொடர்சி)
பிரப்பில்லா உயர் நிலையை அடைய செய்ய ப்ரார்திக்கிரார்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்

பாடல் 8:
சுந்தரி, எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. (8)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 8: தந்தை ஈசனின் துணையும் பேரழகியுமான அன்னை, கொடிய அகந்தைக்கு உதாரணமான மகிஷாசுரனை அழித்தவள். வீரத்தாய் நம்முள் பரவியிருக்கும் பந்த-பாசங்களை அருத்து தம் பக்தர்களை காப்பவள்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 8 (தொடர்சி)
நீல நிரத்தவள் என அறியப்பெற்றவள், கையில் பிரம்ம கபாலத்துடன் காட்சிதரும் தாய் என் கருத்தில் நிறைந்திருக்கின்றாள்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 9:
கருத்தன, எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பில்பெருத்தன, பால் அழும் பிள்ளைக்குநல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும்; ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும் அம்மே! வந்து என்முன் நிற்கவே. (9)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 9 : அன்னையே, துயருற்ற பக்தர்களுக்கு நன்மை செய்பவளே, அழும் குழந்தைக்கு பாலூட்டி அரவனைக்கும் உனது தாய்மையை ஞானசம்பநருக்கு பாலூட்டியதன் மூலம் விளக்கினாய். என் தந்தை ஈசனின் கருத்தில் உன் தாயுள்ளம் மலையென உயர்ந்து திகழ்கிறது.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 9 (தொடர்சி):
இத்தகைய அருள் கொன்ட தாய்மையும், ஆரமும், சிவந்த கைகளில் ஏந்திய வில் மற்றும் அம்புடன் கன்னை கவரும் புன்முருவலுடன் எனக்கு தரிசனம் தர வேன்டுகிறேன்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே! (10)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 10:
அன்னை அபிராமியே, இமயமலையில் தோன்றிய அழிவல்லா அருள் பொக்கிஷமே, நீயே வேதங்களும் அவற்றின் பொருளும் ஆவாய். எங்களுக்கு முக்தியை அருளும் ஆனந்தமாக நிலைத்திருப்பவள்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்10 (தொடர்சி)
நான் நின்றாலும், அமர்ந்து இருந்தாலும், உரங்கி கிடந்தாலும், நடந்தே சென்றலும், உன் பாதமலர்களை நினைவில் கொன்டு உன் நிழலில் சரணம் அடைந்திருப்பேன் தாயே! (10)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 11:
ஆனந்தமாய், என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய், அவன் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. (11)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 11: என் தாய் அபிராமி வேதங்கள் நான்கின் தொடக்கம் மற்றும் முடிவானவள், ஆகாயம, நீர், நலம், நெருப்பு மற்றும் காற்று ஆகிய ஐந்தையும் தன்னுள் கொன்ட ஆனந்த வடிவமவள்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 11 (தொடர்சி)
பட்டர் பெருமான் திருவெண்காட்டில் நடமாடும் ஈசனின் முடிமேல் அணிந்த ஆபரணமாக திகழும் தாயின் பாதங்களை வணங்குகின்றார். இப்படிபட்ட அன்னை அபிராமி எனது வாழ்வின் அமுதமாக இருக்கிராள் என்றுறைக்கிரார்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 12:
கண்ணியது உன் புகழ்; கற்பது உன் நாமம்; கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான்முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே! (12)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 12:
ஏழுலகையும் பெற்றவளே, அன்னை அபிராமியே, எக்கனமும் என் சிந்தையில் நிறைந்திருப்பது உன் புகளே, நான் தினந்தோரும் கற்பதோ அபிராமி என்ற உன் நாமம். உன் இரு பாதங்களில் என் பக்தியை சமர்பிற்கிரேன்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 12 (தொடர்சி);
என் மேல் இறக்கம் கொன்ட அன்னையே எந்நேரமும் உன் அடியார்களுடன் கலந்திருந்து பரவசமடைய நான் என்ன புண்ணியம் செய்தேன்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 13:
பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்குஇளையவளே! மாத்தவளே! உன்னை அன்றி, மற்றோர் தெய்வம் வந்திப்பதே (13)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 13 : பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்தருளும் அன்னை்அபிராமியே. இந்த புவனத்தை உன்னுள் கலந்தவளே. ஆலகால-விஷத்தை உண்டு கறைக்கண்டனான ஈசனுக்கு மூத்தவளே, என்றும் இளமையுடன் திகளும் திருமாலுக்கு தங்கையே!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 13 (தொடர்சி)
பெரும் தவமான அன்னை அபிராமியே, உன்னையன்றி என் சிந்தையில் வேரொன்றும் வாராது நீயே நான் வணங்கும் தெய்வம்
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 14:
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்; சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப்பர மானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம்-எம்பிராட்டி! நின் தண்ணளியே! (14)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 14: அன்னையே உன்னை வணங்கும் தேவர்கள், அசுர்ர்கள் மட்டுமல்லாது காலகாலமாக தொழும் அடியார்களை காப்பவள் நீ. நான்முகனான பிரம்மனும், நாராயணரும் உன்னை தங்கள் சிந்தையில் கொன்டவர்கள். அழிவில்லா ஈசனோ இன்னை தன் மனதிற்குட்படுத்தியுள்ளார்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 14 (தொடர்சி):
இருப்பினும் இவ்வுலகத்தினர் உன்னை வணங்கியகனமே நீ அருள்மாலிக்கின்றாய்! என்னே கருணை!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 15:
தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார், மண்ணளிக்கும் செல்வமோ பெருவார்? மதி வானவர்தம் விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும் அன்றோ? பண்ணளிக்கும் சொர் பரிமள யாமளைப் பைங்கிளியே! (15)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்15: அன்னையே, அபிராமியே, உன்சொல் இசையாக ஒலிக்கும். பலகோடி அடியார்கள் உன்னை நாடி தவம் செய்கின்றனர். இவ்வடியார்களுக்கு மன்னுலக செல்வங்களை மட்டுமா கொடுத்தாய்?
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 15 (தொடர்சி)
அழியாத முக்தியையும் இந்திரன் ஆட்சி செய்யும் தேவலோக பதவியையும் உன் பக்தர்களுக்கு அருளும் இனிய சொல் பேசும் பைங்கிளியான அபிராமியே!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 16:
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்ரும் இல்லா வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! (16)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்16:
அழகிய தாயே, கிளியாக எனக்கு காட்சி தருபவளே, அடியார்கள் மனதில் ஒளிர்ந்து விளங்கும் பிரகாசமான ஜோதியானவளே! படர்நது விரிந்த அண்டமாகவும் அதில் அடங்கிய ஐந்துபூதங்களாகிய, நீர்-நெருப்பு-நிலம்-காற்று-ஆகாயம் ஆகிய
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்16 (தொடர்சி):
அனைத்து நிலைகளாகவும் விரிந்து படர்ந்து விளங்கும் ஐம் அன்னையே, எட்டாத என் சிற்றறிவுக்கு விளங்கச் செய்த உன் காருன்யத்தை கன்டு வியக்கிரேன் உன் பக்தியில் திளைக்கிறேன்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 17:
அதிசயமானவடிவுடையாள்! அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி! துணை இரதி பதிசய மானது அபசயமாக முன் பார்த்தவர் தம் மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே! (17)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்17:
அபிராமி அன்னை வியக்கத்தக்க அழகு படைத்தவள். தாமரை மலர்களால் அர்ச்சிக்கப்பட்டு வெற்றிக்கு இலக்கணமாக திகழும் முகமன்டலத்தை கொன்டவள்! மன்மதனை தன் நெற்றிக் கண்ணை திறந்து சுட்டு செயலிழக்கச் செய்த ஈசனையே குழையச் செய்து
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்17 (தொடர்சி);
அவரது இடப்பாகத்தை ஆட்கொன்ட வெற்றிச் செல்வியே, உன்னை வணங்குகிரேன்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 18:
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியும், தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெவ்வியகாலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே (18)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்18:
பட்டர் பெருமான் அம்மையப்பரிடம் கொன்டுள்ள ஆழ்ந்த பக்தியை இப்பாடல் வெளிப்படுத்துகிறது! அன்னையே என்னுள்ளும் புரமும் பரவியிருக்கும் பந்த பாசங்களை அகற்றி என் இருதித் தருவாயில் காலன் என்னை கொன்டு செல்ல வரும் பொழுது
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்18 (தொடர்சி):
நீயும் எம் இறைவரும் இரண்டறக் கலந்த அர்தநாரீஸ்வரராகிய அழகிய காட்சியும், அன்னையும் எந்தையுமான தங்களது திருக்கல்யாண உருவத்தையம் எனக்கு காட்டியருள்வீராக!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 19:
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே! (19)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்19:
நவசக்தியாகிய அபிராமித் தாயே, ஒன்பது கொணங்களில் ஜொலிக்கின்ற உன் சுயரூபத்தை தரிசித்த என் உள்ளமும் கண்களும் கட்டில் அடங்கா வெள்ளப்பெருக்கைப் போன்று ஆர்பரித்த போதிலும் உயர்ந்த ஞானப் பெருக்கை என்னுள் உணர்த்தியது நீயல்லவோ,+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம்19 (தொடர்சி):
உன் திருவருளை என்னவென்று புகள்வேன் என்று பக்கதிப்பெருக்கில் பட்டர்பெருமான் உருகி பாடுகின்றார். ஓம் சக்தி!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 20:
உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே (20)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 20:
அபிராமி அன்னையே, உலகத்தையே முழுமை பெரச்செய்யும் தெய்வமே! நீ எழுந்தருளியிருக்கும் ஆலயம் உன்னையாட்கொன்டுள்ள ஈசனின் ஒரு பாகமோ அல்லது முழங்குகின்ற நான்கு வேதங்களின் துவக்கமோ, முடிவோ? உன் உறைவிடம் அமிர்தத்துக்கு ஈடான குளிர்ந்த சந்திரனோ,+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 20 (தொடர்சி):
வெண்தாமரை மலரோ, என் நெஞ்சமே தானோ, இல்லையேல் பொக்கிஷங்கள் அடங்கிய பார்கடலோ? எல்லாம்வல்ல அபிராமியே நீ அனைத்திலும் வாசம் செய்கின்றாய். ஓரிடத்தை காட்டி அவ்விடத்திலேயே நீ உறைகின்றாய் என்று சொல்லத் தோன்றவில்லையே!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 21:
மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச் சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள் பசும்பென் கொடியே! (21)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 21:
அன்னை அபிராமியின் பக்தியில் திளைத்தருக்கும் பட்டர்பெருமான் அன்னையின் திருவுருவை பசுமையான கொடி என்றும், நிரந்தரமான சுமங்கலியாகவும், செங்கலசம் போன்ற மார்பகங்களைக் கொன்ட அன்னையாகவும் புகழாரம் சூட்டுகிரார்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 21(தொடர்சி)
உயர்ந்தமலையில் உதித்த அன்னை வென்சங்காலான வளையல்களை அணிந்திருப்பவள், கலை உணர்ச்சி வாய்ந்த மயில் போன்றவள். இப்படிப்பட்ட என் அன்னை வேகமாக பாயும் கடல்போன்ற கங்கை நதியை தன் முடியில் அடக்கிய சிவபெருமானில் சரிபாதியாக இருப்பவள். +
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 21 (தொடர்சி):
எந்நாளும் பக்தர்களின் நடுவில் அருள்பாலிக்கும் அன்னை பொன்நிறத்தவளாகவும், கருநிறம் கொன்ட நீலியாகவும், சிவந்த மேனியுடன் காட்சிதரும் அபிராமியாகவும் போற்றப்படுகிறாள்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 22:
கொடியே! இளவஞ்சிக்கொம்பே - எனக்கு வம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே! பனி மால் இமயப் பிடியே! பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப்புறவாமல் வந்து ஆண்டு கொள்ளே (22)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 22:
பக்தியுடன் அபிராமி அன்னையின் அழகை மட்டுமே மனத்திரையில் பார்த்து பரவசமடையும் பட்டர் பெருமான், “கொடிபோன்ரவளே, இளம் வஞ்சிக் கொம்பே” என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிரார். உன் அருளை பெரும் தகுதியை எனக்குக் கொடுத்த அன்னையே,+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 22 (தொடர்சி):
பனிபடரும் இமயத்தில் உதித்த நீ, பிரம்மனையும் சகல தேவர்களையும் படைத்த அம்மையே, இப்பிறவி முடிந்தபின் இனியொரு பிறவி இல்லாமல் என்னை உன்னிடத்தில் இருத்திக்கொள் தாயே என்று மனமுருகி வேண்டுகிறார்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 23:
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்; பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தேவிளைந்த கள்ளே! களிக்கும் களியே! அளிய என்கண்மணியே! (23)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 23:
அன்னையே என்னுள் நிறைந்திருப்பது உன் கோலமே, என் மனம் நாடுவது உன் பக்தர்களது கூட்டத்தையே. மன்னுலகு, வின்னுலகு, பாதாள உலகு ஆகிய மூவுலகிலும் நிரைந்திருக்கும் நீ எனக்கு கள்ளுன்டது போன்ற ஆனந்த களிப்பை தருகின்றாய். +
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 23 (தொடர்சி):
உன்னை கடந்து வேரொரு சமயநெறி உன்டெனில் அவற்றை என் உள்ளம் நாடாது. எளியவனான என் மேல் பேரருளை பொழிந்த அன்னையே நீயே என் கண்ணின் மணியாணவள்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 24:
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.(24)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 24:
அபிராமி அன்னையே, உன்னை தொழும் நான் உன் அருளால் இருளிலிருந்து விடுபடுகிறேன். இருளை போக்குவது பல இரத்தின கற்றகளிலிருந்து வெளிவரும் பிரகாசமான ஒளியாகும். பல ஒளிமயமான மணிகளால் இழைத்த அணிகலங்களுக்கு ஒளி சேர்ப்பவள் நீயே. +
விளக்கம் 24(தொடர்சி):
இப்பேர்பட்ட ஒளியின் உறைவிடமான நீ, உன் பக்தர்களின் பிணிக்கு மருந்தானவள். இதை உணராதவர்கள் இருளில் நோயுன்டு தவிக்கின்றனர்! அமரத்துவம் எய்திய தவர்களும் உன் ஒளியில் திளைக்கின்றனர். உன் தாமரை பாதங்களைப்பற்றிய நான் வேரொரு தெய்வத்தை எப்படி வணங்குவேன்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 25:
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! (25)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 25:
ப்ரம்மா-விஷ்னு-ஈசன் ஆகிய மும்முதல் கடவுளை ஈன்ற தாயே, நீயே எங்களுடைய எல்லாபிணிகளையும் போக்கும் அரிய மருந்தாவாய். எனக்கு பிறவாவரம் அருளி காக்க வேன்டி தவமிருந்தும், உன் அடியாரகளுக்கு சேவைசெய்ய அவர்களை தொடர்கிறேன்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 25 (தொடர்சி):
முன்பிரவியில் செய்த தவத்தின் பயனே இந்த பிறவியில் உன் பாதங்களை பற்றி வழிபடும் அருள் கிட்டியது. இனியும் அன்னை உன்னை மறவாமல் உன் புகழ்பாடித் தொழுதிருப்பேன் நான்!
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 26:
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;
கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு, நகையுடைத்தே.(26)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 26:
ஈரேழு(பதினான்கு) உலகங்களிலும், படைத்தல்-காத்தல்-அழித்தல் ஆகிய தம் கடமைகளை செய்யும் மும்மூர்த்திகளாகிய பிரம்மா-விஷ்ணு-சிவன், மணம்வீசும் கடம்பபாலை அணிந்த அபிராமி அன்னையையே வணங்கி துதிக்கின்றனர்! +
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 26: (மொடர்சி)
தாயே உன்திருவடிகளை துதிக்க எளியோனாகிய எனக்கு அருள்புரிந்து, உன் பாதங்களில் என்னுடைய நாவிலிருந்து தோன்றிய வார்த்தகளாலான பாடல்கள் நீ ஆசீர்வதித்தால் பெருமையடைந்தது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைவிக்கின்றது!
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 27:
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை;
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை;
சுந்தரி! நின் அருள் ஏதென்று சொல்லுவதே(27)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 27:
அழகிய அபிராமி அன்னையே உன் கருனையை, அருளை எப்படி எடுத்துரைப்பேன்! என்னனுள்ளிருந்த ஆணவம், கர்வம், மாயை ஆகிய அழுக்கை உனது அருள் வெள்ளத்தால் துடைத்தெறியச் செய்தாய். என் உள்ளம் உருகி அன்புமயமானது.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 27 (தொடர்சி):
உன் தாமரை பாதங்களை வணங்கி பணி செய்து மகிழ பேரருள் புரிந்தாய்.
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 28:
சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே!
நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவ லோகமும் சித்திக்குமே(28)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 28:
அபிராமி அன்னையே, நடனமாடும் எந்தை ஈசனுடன், சொல்லுடன்-பொருள் போல் இணைந்திருக்கும் மணம் வீசும் அழகிய மலர்கொடியே! உன்னை இரவு-பகல் பாராட்டாமல் அனுதினமும் தொழும் அடியவர்களுக்கு அரசபோகமும், மோட்ச பாக்யமும்,+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 28 (தொடர்சி):
சிவலோக பதவியையும் அருளி காக்கும் உன் பதம் பணிந்து வணங்குகிரேன்!
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 29:
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம்முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே. (29)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 29:
அபிராமி அன்னையே ஆதிசக்தியாக அருள்பாலிக்கும் தேவியே, நீயே சித்தியும் அச்சித்தியை அருளும் தெய்வமுமாவாய். பரமனாகிய ஈசனால் கிளைத்தெழுந்த பராசக்தியான நீ, ஈசனை நோக்கி தவமிருக்கும் முனிவர்கள் முக்தி பெற உதவி செய்கின்றாய்!
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 29(தொடர்சி):
அடியார் கடும் தவமிருந்து பெரும் முக்தி ஒரு விதையாகும் இதனால் ஞானம் பெரும் முனிவர்கள் தங்கள் பந்த-பாசங்களை துரந்து முக்தியின் பயனை அடைவர் இவர்களை காத்து அருளக்கூடிய தெய்வம் திரிபுரசுந்தரியான உன்னையன்றி வேருயாராக இருக்கமுடியும்
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 30:
அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே. (30)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 30:
என்னை பாவச்செயல் புரியாமல் தடுத்து காத்திடும் அன்னையே, நான் வணங்கும் உமையவளே! என் பாப கர்மங்களின் விளைவாக நான் நடுக்கடலில் விழ நேரிடிணும் அதிலிருந்து என்னை மீட்டு கரைமேல் ஏற்றுவது உன் அருளேயாகும்!+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 30(தொடர்சி):
பந்தம்-பாசம் என்ற ஆழ்கடலில்இருந்து பக்தர்களை முக்தி என்ற கரை ஏற்றும் நீ ஒன்றாகவும் பலவாகவும் காட்சிதரும் அபிராமியே, எங்கள் உமையவளே!
#அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 31:
உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்மிங்கு
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.(31)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 31:
அன்னை அபிராமியே, உன்னை ஒரு பாகமாகக் கொன்டு அம்மையப்பனாக என் முன் தோன்றியதோடல்லாமல், உங்களுக்கு சேவைகள் செய்ய வாய்ப்பளித்து அருள்புருந்தீர்கள்! +
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 31 (தொடர்சி):
என் உள்ளம் நிறைந்திருக்க, வேரொரு மதம் என் எண்ணத்தில் இல்லை, பெற்றெடுக்க வேரொரு தாயும் இல்லை; களிப்பூட்டும் அழகிய தோள்களுடைய பென்களும் இனி இல்லை!
அபிராமிஅந்தாதி#தினம்_ஒரு_பாடல்
பாடல் 32:
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தைஎன் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே! (32)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
பாடல் 32:
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தைஎன் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே! (32)
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 32:
ஆசை என்ற பெரும் கடலில் அகப்பட்டு, கொடிய எமனின் பாசக் கயிற்றில் சிக்கியிருந்த என்னை, வாசம் பரப்பும் தாமரை மலர் பாதங்களுடன் எனக்காகவே வலிய வந்து காத்தருளிய அபிராமியே, எந்தை ஈசனின் ஒரு பாகமான தேவியே உன் கருனையை+
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
விளக்கம் 32 (தொடர்சி):
என்னவென்று சொல்லுவேன் எப்படி எடுத்துரைப்பேன் நான்?
@threadreaderapp please unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sundaram ramaswamy

sundaram ramaswamy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SundaramRama

15 Apr 20
1871,1931, 1991)*: Prajotpatti
*(1872,1932,1992)*: Angeerasa
*(1873,1933,1993)*: Shreemukha
*(1874,1934,1994)*: Bhaava
*(1875,1935,1995)*:Yuva
*(1876,1936,1996)*: Dhata
*(1877,1937,1997)*: Ishwara
#samvatsara 3/n
1877,1937,1997)*: Ishwara
*(1878,1938,1998)*: Bahudhanya
*(1879,1939,1999)*: Pramadi
*(1880,1940,2000)*: Vikrama
*(1881,1941,2001)*: Vrusha
*(1882,1942,2002)*: Chitrabhanu
*(1883,1943,2003)*: Swabhanu
*(1884,1944,2004)*: TaraNa
*(1885,1945,2005)*: Parthiva
#samvatsara 4/n
1886,1946,2006)*: Vyaya
*(1887,1947,2007)*: Sarvajit
*(1888,1948,2008)*:
Sarvadhari
*(1889,1949,2009)*: Virodhi
*(1890,1950,2010)*: Vikruti #samvatsara 5/n
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!