ஆட்சிக்கு எதிரான பேரலை என்றார்கள் ஆனால் மே 2 வரை விவரமறிந்தவர்கள் கைபிசைய ஆரம்பித்துவிட்டார்கள்.வன்னியர், கவுண்டர்,தேவேந்திரர் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவுகள் நடந்திருக்கிறது.பெண்கள் அலை அலையாக வந்து வாக்களித்திருக்கிறார்கள்.
Courtesy @sundarrajachola
திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் செயல்பாடுகள் '0' என்று சொன்னால் தகும்.உண்மையில் திமுக மட்டும்தான் கடுமையாக தேர்தலில் உழைத்துள்ளது அந்த கூட்டணியில்,அதுவும் கடுமையான துரோகங்களைத் தாண்டி. #TamilNaduElections2021 #AIADMK #BJP #DMK
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு நிகராக பணி செய்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
2011 ல் திமுக ஆட்சியை அகற்ற பெருமளவு உதவியது இளைஞர்களின் ஒருங்கிணைந்த வாக்கு பலம்.இன்று அதை அப்படியே சீமான் - கமல் போன்றவர்கள் உடைத்து எடுப்பது அப்படியே தெரிகிறது.
அமமுக கடைசி மூன்றுநாளில் அமைதியானது போல உள்ளது.ஆனால் சீமான் - கமல் - டிடிவியை கணிக்க முடியாது தேர்தல் தீர்ப்பில் பார்ப்போம்.
திமுகவை பொறுத்த வரை அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்பை ஒரு முகப்படுத்துவதில் தோற்றுவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
1967 ல் காமராஜர்/காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகள் ஓரு உருவம் பெற்றன.இங்கே அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரளவில்லை.
ஒரு Clean sweep என்று பேசிக் கொண்டிருந்த திமுக ஆதரவாளர்கள் அமைதியாகிறார்கள் அல்லது ஆட்சியமைப்போம் என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.
ஆளுங்கட்சியின் அமைதி ஏற்புடையது ஏனென்றால் அது 10 வருட ஆட்சிக்கு பிறகு மக்கள் தீர்ப்பிற்கு காத்திருக்கிறது ஆனால் திமுக அப்படியில்லை.ஆனாலும் அவர்களால் களத்தை கணிக்க முடியவில்லை என்றால் இது ஒரு நெருக்கடியான,இறுக்கமான, பலமான போட்டி கொண்ட தேர்தல்.பார்ப்போம் மே 2.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh