இந்த பெயர்களை கடந்த 28 ஆண்டுகளாக கட்டணமில்லா மின்சாரம் பயன்படுத்தி விவசாயம் செய்துவரும் பலர் மறந்திருக்கலாம்,இந்த தலைமுறைக்கு இவர்கள் யாரென்றே கூட தெரியாமல் இருக்கலாம் 1/3
கடந்த 1978 ஆண்டு இதே நாளில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மின்சார கட்டணத்தை குறைக்க நடந்த போராட்டத்தில் எம்ஜியார் அரசாங்கத்தின் அடக்குமுறையால் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமறவர்களே இவர்கள்.இவர்களை போல 64 உழவர்கள் 2/3
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்து பெற்றுகொடுத்த சலுகை தான் கட்டணமில்லா மின்சாரம்.இதற்குபின் ஆட்சிக்கு வந்த கலைஞர் உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அதை பயன்படுத்தி பல குடும்பங்கள் லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தாமல் பயனடைந்துள்ளன. 3/3 #அறிவோம்_வரலாறு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh