1998யில் பாஜகவோடு கூட்டணி வைத்தது அதிமுக கழட்டிவிட1999யில் அதை தாங்கி பிடித்து மத்தியில் முக்கிய துறைகளை பெற்று ஆட்சியில் பங்கெடுத்து 5 வருடம் நிலைநிறுத்தியது திமுக
சாதி கட்சிகளுக்கு முக்கியத்துவம்...
2001யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மதவாத பாஜகவோடு மட்டுமல்லாது சாதி கட்சிகளோடு கூட்டணி அமைத்து அதற்கு அதிக தொகுதிகள் வழங்கி தேர்தல் அரசியலில் சாதி கட்சிகளின் ஆதிக்கத்தை தொடங்கிவைத்து திமுக.
1996 ஆகஸ்ட்யில் ஸ்டெர்லைட் ஆலை, விதிகளை மீறி மன்னார் வளைகுடாவிலிருந்து 14KM தொலைவில் கட்டப்பட்டது.சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டால்,ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையோடு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளித்தது.
1999 ஆண்டு தான் காவேரி படுகையில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை ரூ.10000 கோடியைத் தாண்டிய முதலீடுகளை உருவாக்கி மத்திய அரசிடம் அனுமதி பெற்று மீத்தேன் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு அடித்தளம் போட்டது.
ரசியாவுடன் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க 1988யில் ஒப்பந்தம் போடப்பட்டாலும் அமெரிக்க அழுத்தத்தால் தள்ளி போய்க்கொண்டிருந்தத அத்திட்டம் முடிவுக்கு வந்து 21 ஜூன் 1998 அன்று புதுப்பிக்கப்பட்டு, கட்டுமானம் 31 மார்ச் 2002 அன்று தொடங்கியது.
1997ஏப்16ல், தென்மாவட்டத்தில் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் செயல்பட துவங்கியது. அதற்கு ஆதிக்கசாதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி கலவரமாக மாறி தூப்பாக்கி சூட்டில் முடிந்தது. போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
29நவ1997 கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் வெட்டி கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இதற்கு பழிவாங்க தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு 58க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
கோவையில் போலீஸ் தாக்குதலில் சுமார் 8 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டு இதை ஒட்டி மிகப்பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.1997 தாக்குதலில் 500 கோடி சொத்துக்களும்,1998 தாக்குதலின்போது அதில் பாதியளவு மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன. #90களின்பிற்பகுதியிலிருந்து
1999 ஜூலையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்திதர போராடி 198பேர் கைது செய்யப்பட்டனர்.இதை கண்டித்து ஜூலை 23ல் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லையில் நடந்த பேரணியில் போலீசார் நடத்திய தடியடியில் 17பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்
கொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே ஓட்டல் ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இதை கண்டித்து நடந்த போராட்டங்களில் தர்மபுரி மாவட்டதில் கோவை வேளாண் கல்லுாரி மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சை அதிமுகவினர் தீ வைத்து எரித்தனர்.
19ஜூன் 1997ல் நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் போக்குவரத்து கழக டிப்போவில் நுழைந்து ஊழியர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதிக்க தமிழகமே ஸ்தம்பித்தது. #90களின்பிற்பகுதியிலிருந்து
மேலவளவு கிராமத்தில்1996 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது தனி தொகுதியில் உயர்சாதியினர் தடுப்புக்கு மீறி நின்று வெற்றிபெற்ற ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் அவருடன் சென்ற 6 பேரை 1997 சூன் 30 அன்று பேருந்திலிருந்து இறக்கி வெட்டிக்கொல்லப்பட்டனர். #90களின்பிற்பகுதியிலிருந்து
ஓயாத அலைகள் பெயரில் நவம்பர் 1999யில் போரினை தொடங்கிய புலிகள் 2௦௦0 ஏப்ரல் 3ஆம் வாரத்தில் ஆனையிறவுதாக்குதல் நடத்தி வெற்றிகண்டு யாழ்ப்பாணத்தையும் 40000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினரையும் சுற்றி வளைத்தனர். உடனே பாஜகஅரசு தலையிட்டு அவர்களை காப்பாற்றியது. #90களின்பிற்பகுதியிலிருந்து
2௦௦௦ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாஜ்பாய் தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுடன் Free Trade Agreement கையெழுத்திட நடவடிக்கை மேற்கொள்கிறது. ஜூன் 11ஆம் தேதி அன்றைய வெளி விவகார துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை சென்று100 மில்லியன் டாலர் கொடுத்தார். #90களின்பிற்பகுதியிலிருந்து
ஆனையிறவு வெற்றிக்கு பிறகு புலிகள் மிக பலம்வாய்ந்திருந்த காலகட்டத்தில், இந்திய பாஜக அரசு இலங்கைக்கு இனாமாக கொடுத்த நூறு மில்லியன் டாலரை சந்திரிக்கா அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியிருக்கும் என்பதை நாம் எளிதில் யூகிக்க முடியும். #90களின்பிற்பகுதியிலிருந்து
அக்காலகட்டமே ஒட்டுமொத்தமாக இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை தமிழர் நலனில் அக்கறையின்மை என்ற போக்கில் இருந்து சிறிது முன்னேறி தமிழின எதிர்ப்பு அல்லது அழிப்பு என்ற நிலையை பற்றி பயணிக்க முடிவெடுத்தது.2009 ஈழ இனப்படுகொலைக்கான அடித்தளமிடப்பட்ட ஆண்டுகள் அவை #90களின்பிற்பகுதியிலிருந்து
மே 7 2000யில்'இன்று ஆனையிறவு நாளை யாழ்ப்பாணம்' என சுவரொட்டி ஒட்டியதற்கு அச்சக உரிமையாளர் உட்பட 1௦பேர் கைது செய்யப்பட்டார்கள்.அதேநாள் சிதம்பரத்தில் நடக்கவிருந்த ஈழத்தமிழர் அவலங்கள் கருத்தரங்கம் தடைசெய்யப்பட்டு நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர் #90களின்பிற்பகுதியிலிருந்து
2000 ஜூலை 1,2ல் வைகோ ஈரோட்டில் நடத்திய தமிழர் எழுச்சி மாநாட்டில் 'இலங்கைக்கு உதவுவதில்லை என்று முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கு நன்றி' என்ற தீர்மானம் நிறைவேற்றினார்.ஜூன்11 அன்று இலங்கைக்கு 100மில்லியன் டாலர் கொடுத்த இந்திய பாஜக அரசுக்கு ஜூலை1யில் நன்றி.#90களின்பிற்பகுதியிலிருந்து
2000 ஜூலை 30அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்.அவரை விடுவிக்க காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வீரப்பன் வைத்தார். #90களின்பிற்பகுதியிலிருந்து
தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சும் கோக் மற்றும் பெப்சி ஆலைகள் கங்கைகொண்டன் சிப்காட்டில் அமைக்கப்பட்டன.1998 ஆம் ஆண்டிலிருந்து தான் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் கேலன் தண்ணீரை எடுக்க அரசு அனுமதித்தது.
1997 ஏப்ரல் 23ம் தேதி மதுரை வில்லாபுரத்தில் எண்ணெய் வாங்குவதற்காக மளிகைக் கடைக்குப் போய்க்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை தண்ணீரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்ததை தடுத்ததால் திமுக ரவுடிகளால் துடிக்க துடிக்க வெட்டி கொல்லப்பட்டார்.
கொரோனா தொற்றுச் சீனாவில் பரவத்தொடங்கிய சில நாட்களில் நானறிந்தவரையில் இந்தியாவிலேயே முதன் முதலாகப் பிப்ரவரி 03 ஆம் தேதியே அதைப் பற்றி அறிக்கை கொடுத்தவர் அண்ணன் சீமான். அதிலிருந்து இன்றுவரை 120 அறிக்கைகள் கொடுத்திருக்கிறார். அதைத் தொகுத்து பார்த்து மீண்டும் படித்தபொழுது தான்
அண்ணன் எத்தனை தொலைநோக்கு பார்வையோடும்,
அரசியல் தெளிவோடும்,
முற்போக்கு சிந்தனையோடும்,
மக்கள் மீது அக்கறையோடும்,
பல்லுயிர்கள் மேல் பரிவோடும்,
சுற்றுசூழல் காக்கும் நோக்கோடும்,
அநீதிக்கு எதிரான கோவத்தோடும்,
இனத்தின் மீதான பெரும் பற்றோடும்
இருக்கிறார் என்பதை மீண்டும் உணர்ந்தேன்.
அறிக்கை ஒவ்வொன்றிலும் சிக்கல் எதனால் உருவானது?யார் காரணம்? என்பதை சொல்லி அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். மற்ற கட்சி தலைவர்கள் அறிக்கையில் வெறும் அரசியல் மட்டுமே இருக்கும் அண்ணன் அறிக்கையில் அதைத்தாண்டிய தெளிவான தீர்வும் இருப்பதால் ஒவ்வொரு அறிக்கையும் ஆவணமாக இருக்கிறது.