திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD தான் உள்ளிட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் NIAக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு காரணங்களாகச் சொன்ன பொய்கள் ஆதாரங்களுடன்.. 1. திடீரென கொண்டு வரப்பட்ட மசோதா 2. போதிய நேரமின்மையால் உறுப்பினர்களுடன் பேச முடியவில்லை 3. தலைவருடன் பேச நேரமில்லை
4. அவசரத்தில் புரிதலில்லாமல் எடுத்த முடிவு 5. காங்கிரசோடு கூட்டணி என்பதாலும், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டமென்பதாலும் காங்கிரஸ் எடுத்த முடிவோடு போக வேண்டிய நிலை
@DrSenthil_MDRD கூறிய மேற்கண்ட ஐந்தும் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள்:
(பாராளுமன்ற ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இணைப்புகளுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன)
பாராளுமன்ற மக்களவையில்,
NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 08-07-2019
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 15-07-2019
வாக்கெடுப்பிற்கு முன் திரு. ஆ.ராசா 5 பக்க அளவிற்கு மசோதா
மீது உரை (அவசரத்தில் மசோதா தாக்கலாயிருப்பின் 5 பக்க உரை சாத்தியமானது எப்படி?)
மக்களவையில் மசோதா தாக்கலுக்கும், வாக்கெடுப்பிற்கும் இடையில் 8 நாட்கள் கால அவகாசம் இருந்திருக்கிறது!
வாக்கெடுப்பில் திமுக NIA மசோதாவுக்கு ஆதரவு! 😱
தமிழகத்தைச் சார்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருவர் NIA மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்! 😱😱
தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் NIA மசோதா மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை! 😱😱😱
பாராளுமன்ற மாநிலங்களவையில்,
NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 15-07-2019
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 17-07-2019
திரு. திருச்சி சிவா 2 பக்க அளவிற்கு மசோதா மீது உரை
மாநிலங்களவையில் மசோதா தாக்கலுக்கும், வாக்கெடுப்பிற்கும் இடையில் 10 நாட்கள் கால அவகாசம்
இருந்திருக்கிறது; மசோதா மக்களவையிலும் முன்னரே நிறைவேறியிருக்கிறது!
திமுக Division வாக்கெடுப்பு கோராததால் NIA மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது! 😱😱😱
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களின் புரிதலுக்காக 09/12/2019 அன்றைய (பிற்பகல்-இரவு) பாராளுமன்ற நடைமுறைகள்: (பாராளுமன்ற ஆவணங்களின் அடிப்படையில்)
நேரம்12.12 :
126வது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
நேரம்12.18 :
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அறிமுகம்
நேரம்12.32 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து TR பாலு உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு
நேரம் 12.32 ~1.34:
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக உறுப்பினர்களின் காரசார விவாதம்
நேரம் 1.34 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்று நடந்த டிவிஷன் (சீட்டு/இயந்திர பயன்படுத்தி) வாக்கெடுப்பு தோல்வி (293-82)
நேரம் 1.40 :
கடற்கொள்ளை தடுப்பு மசோதா அறிமுகம்
நேரம்1.49 :
விதி 377 ன் கீழ் உறுப்பினர்களின்
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD 09/12/2019 நள்ளிரவு நடந்த CAA மசோதா மீதான வாக்குப்பதிவில் கலந்து கொண்டு அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதற்கான பாராளுமன்ற காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:-
09/12/2019 மாலை 5 மணியளவில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மனீஷ் திவாரி CAA மசோதா மீது உரையாற்றும் போது மரு.செந்தில்குமார் அவையில் இருந்தது மனீஷ் திவாரி உரை முடியும் வரை பதிவாகி இருக்கிறது அதன் பிறகு அவரை பாராளுமன்ற காணொளியில் காண இயலவில்லை.
இரவு 10.30 மணியளவில் CAA மசோதா மீதான வாக்குப்பதிவுக்கு முன்னதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரை தொடங்கிய பிறகு அவரது இருக்கை காலியாக இருப்பது 10.43 மணியளவிலான பாராளுமன்ற காணொளியில் பதிவாகி இருக்கிறது.