இன்று india ahead நியூஸ் சேனலில் @sandhyaravishan அவர்கள் NIMHANS institute தலைவர் , வைராலஜிஸ்ட் professor ரவியை கொரோனா இரண்டாவது அலை பற்றி பேட்டி எடுத்திருந்தார். அதில் வைராலஜிஸ்ட் திரு.ரவி அவர்கள் சொன்ன முக்கிய விஷயங்களின் தொகுப்பு இது.
1. UK , US நாடுகளளில் வாழும் 30-40 சதவீத மக்களுக்கு ஏற்கனவே vaccination செலுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும், 3 ஆவது, 4 ஆவது அலை அங்கெல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது.
2. பொதுவாகவே mutate ஆகும் வைரஸ், இப்போது vaccination செலுத்தி கொள்ளவதால் இன்னும் விரைவாக mutate ஆகும்.
3. இந்தியா கண்டிப்பாக 3 வது , 4 ஆவது அலைகளை சந்திக்கும்.
4. ஒவ்வொரு அலையிலும், susceptible group என்பது இருக்கும். அதாவது எந்த வயதில் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது என்னும் போக்கு. இந்த அலையில் 20-45 வயது உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.
5. அடுத்த அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்க படலாம் என்னும் அச்சம் எனக்கிருக்கிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கு இன்னும் கொரோனா vaccination போட படவில்லை. மேலும் குழந்தைகளை வைரஸ் பாதிப்பது எளிது.
6. இந்தியாவில் இதற்கு தீர்வு மக்களிடையே Behavioural change கொண்டு வருவது தான். தலைவர்கள், influencers மக்களுக்கு இதை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும்.
7. இந்தியாவில் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். religious gathering , தேர்தல் கூட்டம், தேவை இல்லாமல் கூட்டம் கூடும் மால்கள் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். மக்களிடையே seriousness வர வேண்டும்.
8. அனைவரும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் சிறந்த vaccination.
மறக்காமல் அனைவரும் அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் vaccination போட்டுக்கொள்ளுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh