கொரோனா பெருந்தொற்று - சில உண்மைகளும் படிப்பினைகளும்:
தமிழக அரசு மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பிண்ணனி கொண்டவர்கள். ஆரம்ப சுகாதார அனுபவம் பெற்றவர்கள். இவர்களின் தொற்று நோய் அனுபவ அறிவு என்பது போலியோ, காலரா, தட்டம்மை, கக்குவான் இருமல் என்று மிகவும் அதிகமானது.
1/N
எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் பல நிபுணர்கள் ஒரு நாள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்காதவர்கள்
கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர். சங்குமணி. பொது மருத்துவ நிபுணர். சுமார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். மதுரையின் முக்கிய மருத்துவர்களில் ஒருவர். ஆரம்ப சுகாதார
2/N
நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என்று பணிபுரிந்து தற்பொழுது மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ளார்.
தனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி மாதமே மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட் வார்ட் ஒன்றை அமைத்தார்.
அதன் திறப்புவிழா குறித்த செய்திகள்
3/N
வெளிவந்தவுடன் ஒரு கும்பல் அரசை கேலி செய்தது. இல்லாத கொரோனாவை ஊதி பெரிதாக்குவதாக நக்கலடித்தது. நிலவேம்பு, யோகா, ஹீலர்களால் மட்டுமே கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று மற்றொரு கும்பல் கூறியது.
எய்ம்சிலேயே திறக்கவில்லை. இவர்களுக்கு என்ன அவசரம் என்று நக்கலடித்தார்கள்.
4/N
2020 ஜனவரி மாதம் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த கொரொனா வார்ட் பேசு (கேலி) பொருளாக இருந்ததை இன்று பலரும் மறந்திருக்கலாம்.
அதன் பிறகு பல மருத்துவமனைகளிலும் கோவிட் தடுப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் கமுக்கமாகவே நடந்தன.
5/N
உலகில் இருக்கும் மிகப்பெரிய 35 மருத்துவமனைகளில் 4 தமிழக அரசு மருத்துவமனை என்பது தமிழகத்திற்கு பெருமை. ஆனால் இது மட்டுமே பெருமை அல்ல. சென்னையில் மட்டும் 5 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி உள்ளது.
6/N
இவற்றின் கீழ் சுமார் 50 பெரிய மருத்துவமனைகள் உள்ளன. இது தவிர தமிழகத்தில் சுமார் 300 தாலுகா, வட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுமார் 2000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சுமார் 400 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இது தவிர சுமார் 1000 பிணியாளர் ஊர்திகள் உள்ளன.
இது மட்டுமல்ல.
7/N
இவை அனைத்திலும் பணிபுரிய சுமார் 20000 மருத்துவர்கள் உள்ளனர். அதிலும் 3000 மருத்துவர்களின் 30 ஆண்டுகால பொது சுகாதார, மருத்துவக்கல்லூரி அனுபவம் பெற்றவர்கள், மேலும் 10000 பேர் 15-30 வருட பொது சுகாதார, மருத்துவக்கல்லூரி அனுபவம் பெற்றவர்கள் (இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
8/N
அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் மிகக்குறைவு என்பது வேறு விஷயம். அதை அமையவுள்ள திமுக அரசு நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறோம். அதனால் தான் தமிழகத்தில் பொது மக்களிடம் மரணங்கள் மிகவும் குறைவு. இந்த கட்டமைப்பு தான் தமிழகத்தில் மக்களின் உயிரை காத்துள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும்
9/N
இது இல்லை
ஏன் அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளை விட தமிழகத்தில் கொரொனா மரணங்கள் குறைவு என்பதற்கு ஒரே காரணம் திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவதிட்டங்கள் மற்றும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் கிராமப்புற பிண்ணனியில் இருந்து வந்த முதல் தலைமுறை மருத்துவர்கள் தான்
10/N
தமிழ்நாட்டின் இந்த பொதுசுகாதார கட்டமைப்பு சிதைந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்க்கிறது.
மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரை கொடுத்து (வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் தான் மருத்துவர்களின் மரணம் அதிகம் என்று தெரியுமா ?), உயிரை பணயம் வைத்து
11/N