தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் பற்றிய ஓர் அலசல்.
குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் என்ன? பழைய பாடத்திட்டமே தொடருமா? முதன்மைத் தேர்வு உண்டா? மொழிப் பாடப்பிரிவில் 100 வினாக்கள் வருமா ? போன்ற சந்தேகங்களை தீர்க்க முயன்றுள்ளோம்.
குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை,
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது : அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
தேர்வு நேரம் : 3 மணி நேரம்.
குரூப் 4 தேர்வானது கடைசியாக 2019 செப்டம்பர் 1 அன்று நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தும் 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் (Objective type) நடந்தது.
இதுவரை நடந்த குரூப் 4 தேர்வுகளில் 200 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அவற்றுள் 100 வினாக்கள்
தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப் பகுதியில் இருந்து கேட்கப்படும்.
மீதமுள்ள 100 வினாக்களில் திறனறிவு மற்றும் புத்திக் பிரிவிலிருந்து 25 மதிப்பெண்களும், பொது அறிவு பிரிவிலிருந்து 75 வினாக்களும் கேட்கப்படும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, குடிமையியல், இந்திய தேசிய இயக்கம், புவியியல், பொருளியல் போன்றவை பொது அறிவு பிரிவுக்குள் அடக்கம்.
தேர்வாணையம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளிவந்த 60 முதல் 90 நாட்களுக்குள் தேர்வு நடைபெறும். கடந்த வருடம் 2020 கொரோனா தொற்று காரணமாக நடக்க இருந்த குரூப் 4 நடைபெறாமல் போனது.
இந்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தேர்வாணையம் வெளியிட்ட Annual planner இல் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் Notification ஐ எதிர்பார்க்கலாம்.
பழைய பாடத்திட்டம் தொடருமா ?
தேர்வாணையத்தைப் பொறுத்த வரை நடைமுறையில் மாற்றம் கொண்டுவர விரும்பினால் குறைந்தது 6 முதல் 8 மாத காலத்திற்கு முன்பாகவே அறிவித்திடுவர். குரூப் 2 தேர்வில் மாற்றம் கொண்டு வந்தது போல் குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு குறைவு.
அப்படியே கொண்டு வந்தாலும் மொழிப் பாடப்பிரிவில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பு குறைவே. பழைய பாடத்திட்டமே தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில் அறிவித்து இருந்தார். தேர்வாணையம் தரப்பிலிருந்து அதற்கு எந்த ஒரு எதிர் கருத்தும் வரவில்லை.
இனிமேல் மாற்றம் கொண்டுவர விரும்பினால் அந்த தேர்வு நடக்க இன்னும் 1 வருட காலம் ஆகலாம்.
எனவே, மாணவர்கள் இந்த சந்தேகத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது சிறப்பு.
முதன்மைத் தேர்வு உண்டா?
முதன்மைத் தேர்வு என்பது மாணவர்களின் அறிவை சோதிக்கும் ஒரு முயற்சியே.
குரூப் 4 தேர்வானது 10 ஆம் வகுப்பு தரத்தில் நடத்தப்படுகிறது. எனவே 200 வினாக்களுக்கு ஒரு தேர்வு மட்டும் நடத்துவதே சரியானது என்பதை அவர்கள் அறிவர்.
அடுத்து வரப்போகும் குரூப் 4 தேர்வில் முதன்மைத் தேர்வு நடக்க வாய்ப்பு மிக மிக குறைவே. எதிர்வரும் காலங்களில் (தொலை நோக்குப் பார்வையில்) நடக்கலாம். மாணவர்கள் அதற்குத் தயாராக இருப்பது அவர்கள் கடமையே.
கூடுதலாக,
குரூப் 4 தேர்வு மட்டும் அல்ல. தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான தேர்வுகளிலும் வெற்றி பெற்று பணிக்குச் செல்பவர்கள் மாறிவரும் டிஜிட்டல் பயன்பாடுகளுக்கு பழக்கப்படுத்தி கொள்ளாததால் "ஆட்டோமேசன் சான்றிதழ் கட்டாயம்" என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதற்கு நடைமுறையில் சில சிக்கல்கள் இருப்பதால் இன்னும் முழுமையான ஒரு தகவல் வரவில்லை. " ஆட்டாமேசன் சான்றிதழ்" பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்.
இறுதியாக, "ஓடிக் கொண்டே இருப்பது கடிகாரத்தின் இயல்பு" என்பது போல "படித்துக் கொண்டே இருப்பது" மாணவர்களாகிய நம் இயல்பாக இருக்க வேண்டும். எந்தவித சந்தேகங்களுக்கும், வதந்திகளுக்கும் நேரத்தை வீணடிக்காமல் தினந்தோறும் படித்துக்கொண்டே இருங்கள்.
உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் தான் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு எங்களால் முடிந்த வகையில் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ?
Group 4 தேர்வு பாடத்திட்டம் மற்றும் Annual planner லிங்க் கீழே உள்ளது.