முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்று காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை.
வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
Token வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு Phone வந்தது.
சிறிது நேரம் Helo Helo என்றவன் திடீரென
அழத்தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
Plz Plz என கெஞ்சினான். Nurse கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள். கொஞ்ச நேரம் Try பண்ணுங்க Madem மருந்துவாங்கிட்டு வந்துடுவேன் என்றான். ஆனால்,
அழுதுகொண்டே இருந்தான். Phone Cut ஆனது.
வேறு யாருக்கோ Phone செய்து, அப்பா செத்துட்டார் மாமா என்றான். அம்மாவை இப்போதாவது வரச் சொல்லுங்கள் என்றான். அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கினான்.
வரிசையில் காத்திருக்க இரண்டு வாட்டர் பாட்டில், முகம் துடைக்க டவல், மதிய சாப்பாடு என எல்லாம்
அவனிடம் இருந்தது. மருந்தும் சில நிமிடங்களில் கிடைத்திருக்கும். ஆனால், அவன் அப்பா அவனிடம் இல்லை.
விவாகரத்தான அம்மா இறுதி காரியத்துக்கு வருவார்களா என்பது அவன் கவலை.
கேட்டை தாண்டும்போது மருந்து வாங்கியாச்சா என சிலர் கேட்டனர். வாங்கிவிட்டேன் எனச் சொல்லிச் சென்றான். அவன் அழுகையை
அந்த மாஸ்க் விழுங்கியது. வாட்டர் பாட்டிலையும், சாப்பாட்டையும் சாலையோரம் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு, ஏதோ உலகையே அழிக்கச் செல்பவன் போல வேகமாக சென்றேவிட்டான்.
- சிவபிரகாஷ்
அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி.