முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா தொற்றாளர்கள்,*
கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள 16 வகையான பேக்கேஜுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்*.
மிதமான சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை, முதல் நாள் முதல் 5 நாட்கள் வரை,
அதிகபட்சமாக 14 நாட்கள் வரை என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வித பேக்கேஜ்கள் உள்ளன.*
பொது மருத்துவம், நுரையீரல் சிகிச்சை எனவும் இதில் பிரிவுகள் உள்ளன.*
இவற்றில் தனக்குத் தேவையான சிகிச்சையைத் தொற்றாளரோ அவரின் குடும்பத்தினரோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.*
தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.*
காப்பீட்டுத் திட்டம் மூலம் முழு சிகிச்சைக் கட்டணத்தையும் பெறலாம்..*
தவிர்க்கமுடியாத நேரங்களில், தொற்று பாதித்த 6-ம் நாளில் இருந்தும் கரோனா சிகிச்சையைக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறலாம்*
முதலமைச்சர் காப்பீடு பேக்கேஜ் குறித்த விவரங்களைக் காண:*
நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால்* *முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் புதிதாகப் பெற விரும்புபவர்கள் மற்றும் புதுப்பிக்க விரும்புபவர்கள்*
*1800 425 399*
*என்ற எண்ணை அழைத்தது,*
தங்களின் மாவட்டத்தைக் கூற வேண்டும். அவர்கள் அளிக்கும் மாவட்ட அதிகாரியின் எண்ணைப் பெற்றுக்கொண்டு நேரத்தைத் தெரிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு*
*செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது...*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh