The Woman in the Window (2021)
Genre : Psychological thriller
ஆன்னா, அகோராபோபியா என்னும் மனநோயினால் பாதிக்கப்பட்டு கணவர், மகளை பிரிந்து தனிமையில் வீட்டுக்குள்ளயே வாழ்கிறார். எதிர் வீட்டில் புது குடித்தனம் கணவன், மனைவி மற்றும் 16 வயது மகன் வருகின்றனர்.
ஒரு நாள், எதிர் வீட்டில் மனைவி கத்தியால் குத்தபடுவதை ஆன்னா ஜன்னல் வழியே பார்த்து போலிஸை அழைக்கின்றாள். போலிஸ் விசாரித்து அப்படி ஏதும் நடக்கவில்லை என்கின்ற போது எதர்ச்சையாக எதிர் வீட்டு குடும்பம் வருகிறது. திருப்பிமுனையாக, எதிர் வீட்டு மனைவி என்று வேறொரு பெண் வருகிறாள்.
ஆன்னா குழப்பத்தில் மனைவி இவள் இல்லை என்று கத்துகிறாள், போலிஸ் “இது எல்லாம் உங்கள் மனக்குழப்பம்” என்று சமாதான படுத்துகின்றனர். கடைசியில், ஆன்னா பார்த்த கொலை நிஜமா? யார் உன்மையான மனைவி? மொத்த குடும்பமும் எதை மறைக்கின்றனர்? போலிஸும் இவர்களுக்கு உடந்தையா? என்னும் திரில்லரே மீதி கதை.
பின் குறிப்பு:
படத்தில் கொஞ்சம் டிவிஸ்ட் இருக்கு..
புத்தகத்தில் முதலில் வெளிவந்த இந்த கதை செம ஹட்.
ஆனா படத்தில், இயக்குனர் ஜோ ரைட் நிறைய இடத்தில் சொதப்பியிருக்கார். திரைகதை சரியே அமைக்கபடவில்லை. கேள்விகள் நிறைய தோன்றுகிறது.
ஒரு தடவை பார்க்கலாம்...
கார் பந்தயத்தில் அப்பாவை இழக்கின்றனர் டாம்மும் (வின் டீசல்) ஜேகப்பும் (ஜான் சீனா), காரணம் தம்பி என்று முடிவெடுத்து அண்ணன் டாம் தம்பியை வீட்டைவிட்டு விரட்டுகிறார்.
பல வருடங்கள் கழித்து, ஒரு ரகசிய பொருள் எடுக்கும் ஆப்பரேசனில் தம்பி ஜேகப்பை எதிர்ப்பு முனையில் பார்க்கிறார். ரகசிய பொருளுக்கும் தம்பிக்கும் உள்ள சம்பந்தத்தின் பன்னனியில் சைப்பர் (சார்ல்லீஸ் தேரான்) இருக்கிறார். டாம்முடன் லேட்டி, மியா, ரோமன், டேஜ், ராம்சே எல்லாம் சேருகிறார்கள்.
படத்தின் திருப்புமுனையாக இறந்துபோன ஹான் உயிருடன் வருகிறார். கடைசியில், டாம் கேங் ரகசிய பொருளை எதிரியிடம் இருந்து மீட்டார்களா? எதிரிகளின் சதியை முறியடித்தார்களா? அப்பா இறந்ததின் ரகசியம் என்ன? அண்ணனும் தம்பியும் சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை....