தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை

நாயக்கராட்சி தமிழகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அக்கால இலக்கியங்களின் மூலம் அறிய இப்பதிவு முயலும்.

நாயக்கர் கால இலக்கியங்கள் எதுவுமே நாயக்க மன்னர்களைப் பாராட்டவில்லை.
நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே.
பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.
பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6)

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை.
இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.
ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும்
இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; திருமலை முருகன் பள்ளு 158; மாந்தைப்பள் 89)
பாளையக்காரர்கள் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர்.
(இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்)
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.
இவர்கள் பள்ளர் பெண்களை காம இச்சைக்குப் பயன்படுத்தியதையும் சிற்றிலக்கியங்களில் காணமுடிகிறது.
(முக்கூடற்பள்ளு 53; பட்பிரபந்தம் 65, 105)

நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது.
நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).
சதகநூல்கள் அந்தணர்களையும் வெள்ளாளர்களையும் புகழும் அதேவேளையில் வணிகர்களை வெறுப்புடன் பார்க்கின்றன.
ஏனென்றால் நாயக்கராட்சி வணிகத்தின் மூலம் பொருளீட்டுவதில் மட்டுமே குறியாக இருந்துள்ளது. (அறப்பளீசுர சதகம்,37; கயிலாசநாத சதகம்,10, தண்டையலார் சதகம்,97,28).
ஆங்கிலேய ஆட்சிதான் நிலவுடைமைச் சமூகத்தை உருவாக்கி அதுவரை இருந்த கிராம கூட்டு உற்பத்தியை சிதைத்து அடிமட்டம் வரை சுரண்டியெடுத்ததாக பலரும் கூறுவர். நாயக்கராட்சி ஆயங்கார முறை மூலம் அதை முன்பே செய்துள்ளது.
அதாவது மக்களை ஆள்வது நோக்கமில்லை மக்களை முடிந்த அளவு சுரண்டுவதுதான் நோக்கம்.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது போல நாயக்கர் காலத்தில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை.
குளங்கள்தான் பல வெட்டப்பட்டுள்ளன.
அதுவும் பண்ணை விசாரிப்பான்களாலும் பாளையக்காரர்களாலுமே பொறுப்பெடுத்து கட்டப்பட்டுள்ளன
மன்னர்கள் வரிவாங்குவதைத் தவிர எதுவுமே செய்யவில்லை.
இதனால் பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன.
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.
1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்.
பலர் இடம்பெயர்ந்தனர்.
(தமிழக வரலாறு - கு.ராஜய்யன்).
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரும் பதிவுசெய்துள்ளார்.
'கல்லும் நெல்லும் கலந்த சோறு, வாடிப்போன கத்திரிக்காய், அதில் உப்பில்லை, ஈக்கள் விழுந்து கிடந்தன' என்று அவர் குறிப்பிடுகிறார்.
(தனிப்பாடல் திரட்டு, ப.34, 67).
பள்ளர்கள் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டனர்.
புலவர், சோதிடர், கொல்லர், ஓவியக்கலைஞர், ஆசிரியர், குயவர், பஞ்சாங்க புரோகிதர் முதலியவர்கள் வறுமைக்குரியவர்கள் என்று தனிப்பாடல் ஒன்று கூறுகிறது (த.தி.க., பக் 244).
வரி தராதவர்களுக்கு போரில் தோற்றவர்களுக்கான தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
சிறைதண்டனையும், உறுப்புகளைச் சிதைப்பதும் நடந்துள்ளன.
திருமலை நாயக்கருக்குப் பணியாதவர்களின் முதுகுத் தோலை உரித்ததாகவும், முட்டி எலும்பைத் தட்டி எடுத்ததாகவும் ராமைய்யன் அம்மானை (பக் 53, 5-11) தெரிவிக்கிறது.
கண்களைத் தோண்டியெடுப்பது, காதுகளை அறுப்பது, கொதிக்கும் நெய்யில் கைவிடச்செய்வது, எண்ணெயில் நனைத்த துணியை கையில் சுற்றி தீவைப்பது, தூக்கிலிடுவது, தலையை வெட்டுவது போன்ற நாயக்கர் கால கொடூர தண்டனைகள்
அக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரியார்கள் எழுதிய கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன (R.Sathyanatha Aiyar, Tamilaham in the 17th century).

அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன
(திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292; கூடற்புராணம் 2; கமலாலய சிறப்பு 854-856,889; திருவருணைக் கலம்பகம், கண்.65:3; குமரேச சதகம் 12:5-6; திரு.முரு.பள்.,103).
நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).
பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).
1705ல் மங்கம்மாள் காலத்தில் சாதி அடையாளங்களைப் பேண மானியங்கள் தரப்பட்டதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இதனை ஐரோப்பிய பாதிரிகளும் குறிப்புகளும் சான்றாக உள்ளன (R.Sathiyanatha Aiyar, 1980, p.193).
அக்காலத்தில் தமிழில் அறிமுகமான சதக நூல்களும் சாதிய முறையை ஊக்குவிப்பதாகவும் (கயிலாச சதகம் 28) சாதிப் படியே தண்டனைகள் வழங்கவேண்டியது அரசின் கடமை என்றும் (அறப்பளீகர சதகம் 11)
மனுஸ்மிருதி சிந்தனையைப் பிரதிபலிக்கின்றன.
அதுவரை தோன்றாத சாதிய நூல்கள் தோன்றின.
சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கடைநிலையில் இருந்த பரதவர், பள்ளர், பறையர், சாணார் போன்ற சாதியினரை கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவு காட்டி மதம் மாற்றினர்.
பெர்ணான்டஸ் என்ற பாதிரியாரால் 1592ம் ஆண்டு இயேசு சபை என்ற முதல் கிறித்து மிஷனரி வீரப்ப நாயக்கன் என்ற மதுரை மன்னனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது.
சேதுபதி மன்னனான சடைக்கத்தேவனை வெல்வதற்கு உதவியதற்காக ராமேசுவரம் தீவு பறங்கியருக்கு அளிக்கப்பட்டது (ராமைய்யன் அம்மானை 8:22-23).
பிராமணர்களை வானளவு புகழ்ந்து எழுதுகின்றன நாயக்கர்கால சதக நூல்கள் (அறப்பளீசுர சதகம், 55; குமரேச சதகம்,2; கயி.சத.3).

1604ல் தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட்-டி-நொபிலி வருணமுறை அரசு ஆதரவும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் பதிவுசெய்துள்ளார்.
அவர் மதுரையில் பத்தாயிரம் பிராமண மாணவர்கள் கல்வி பயின்றதாகவும், பிராமணர் தவிர யாருக்கும் உயர்கல்வி பெற உரிமை இல்லை என்றும் கூறுகிறார் (History of nayakas of madura, p.194, ஆர்.சத்தியநாதய்யர்).
கல்வியில் வடமொழி புகுந்தது (மாந்.பள்.21)
சமஸ்கிருதமும் தெலுங்கும் தமது பொற்காலத்தை நாயக்கர் காலத்தில் அடைந்தன.
இவ்விரு மொழிகளிலும் கலை மற்றும் இலக்கியம் வளர நாயக்கர்கள் பாடுபட்டனர் ( இதனை கு.ராஜய்யன் விரிவாக எழுதியுள்ளார்).
தமிழ் மொழி வறுமைக்காலத்தில் இருந்தது.
நாயக்க மன்னர்கள் தமிழை வெறுத்தனர் (மான்விடுதூது இணைப்பு; (சுப்பிரதீபக் கவிராயர்,த.தி.,பக்.197)
நாயக்கர்காலத்தில் எங்கும் தெலுங்கே கொடிகட்டிப் பறந்தது (படிக்காசு புலவர், த.தி., பக்.12).
சிற்றிலக்கியங்கள் தமிழைக் காப்பாற்றி வந்தன. திருக்காளத்தி நாதருலா, திருக்கழுக்குன்ற உலா, திருமலையாண்டவர் குறவஞ்சி, கமலாலய பள்ளு ஆகிய நாயக்கர் கால சிற்றிலக்கியங்கள் நாயக்கரைப் புகழாது சோழரையும் பாண்டியரையும் புகழ்கின்றன. நாயக்கர்களின் வைணவ மதத்திற்கு எதிராக சைவத்தைப் போற்றுகின்றன.
சதக நூல்கள் மனுதர்மத்தை அடியொற்றி பெண்களை இழிவாக சித்தரிக்கின்றன (அற.சத.35; தண்டலையார் சதகம், 85,86; குமரேச சதகம், 51).
வறுமை காரணமாக மனைவியை விற்று வாழ்க்கை நடத்திய சிலரை கயிலாசநாதர் சதகமும் (13), குமரேச சதகமும்(32) கூறுகின்றன.
நாயக்க அரசர்கள் அழகான பெண்கள் கண்ணில்பட்டால் அவளை தன் அரண்மனைக்கு கூட்டிச்செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது (T.V.Mahalingam, South Indian Polity, p.63).
நாயக்கர் காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் அதிகம் இருந்தது.
திருமலை நாயக்கனோடு 200 பெண்கள் உடன்கட்டை ஏறினர். வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).
பரத்தைத் தொழில் பெருகியது.
பரம்பரையாக தனது மகளை வைத்து தொழில் செய்யும் தாசி குலம் தோன்றியது.
தாசியின் தாய் சாராயம், மருந்து வாங்கவும் தூது செல்லவும் சில பெண்களை வைத்துக்கொண்டு (மூவரையன் விறலிவிடுதூது க.271 கூள.விற. கண்230-240) தன் மகளை வைத்து தொழில் செய்ததை (கும.சத.75கூள.காத.கண்.318-319) அறியமுடிகிறது.
மக்கள் அனைவரும் குடிக்கு அடிமையாகவும் ஒழுக்கம் தவறியும் காணப்பட்டனர்.
மக்களிடையே மூடநம்பிக்கைகள் அதிகம் நிலவின.
சகுனம், செய்வினை, வசியம் பற்றி பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சிற்றூர்களில் உள்ள தெய்வங்களின் தலபுராணம் வடமொழித் தொடர்புடையவையாக மாற்றியமைக்கப்பட்டன.
தகவல்களுக்கு நன்றி:அ.ராமசாமி எழுதிய 'நாயக்கர்காலம் இலக்கியமும் வரலாறும்.
சுருங்கக்கூறின்,
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கர்கள் மக்களை சுரண்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை இல்லாததாலும் பொதுத்துத் திட்டங்கள் செயல்படுத்தாமல் இருந்ததாலும் மக்களை பஞ்சத்தில் தள்ளியுள்ளனர்.
மனுதர்மத்தின்படி வர்ணாசிரமத்தை நடைமுறைப்படுத்தி சாதியைச் சட்டமாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பிரிவினர் கொழுக்கவும் குறிப்பிட்ட பிரிவினர் நலிவடைவதற்கும் காரணமாக இருந்துள்ளனர்.

சமுதாயத்தில் பெண்கள் நிலை தாழ்ந்துபோகவும் ஒழுக்கம் குலைந்துபோகவும் காரணமாக இருந்துள்ளனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதன்

மதன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @naanmathan

30 May
பொதுவெளியில் தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆனால் #கல்வி #கல்விநிறுவனம் #வேலைவாய்ப்பு #கலாச்சாரம் என வந்தால் அவர்கள் தமிழர்கள் அல்ல, #தெலுங்கர் #மலையாளி #கன்னடர்.
அரசியல் அதிகாரத்தில் அவர்கள் #திராவிடர்கள்.
யார் தமிழர் என்று கேட்கும் துரோகிகளே. ImageImageImageImage
சாதிப்பெயரை ஒழித்ததன் நோக்கம் சாதியத்தை ஒழிப்பது அல்ல, தமிழர் போர்வையில் தமிழர்களின் உரிமைகளையும் அதிகாரத்தையும் தட்டி பறிப்பதற்கு.
தமிழ் குடியில் பிறந்தவனே தமிழன், வந்தவன் போனவன் எல்லாம் தமிழன் கிடையாது.
தமிழன் பெருமைக்குரியவன் ஏன், தமிழ் பெருங்குடியில் அவன் பிறந்ததாலேயே தமிழன் பெருமைக்குரியவன்.

- புரட்சிப் பாவலர் பாரதிதாசன்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(