Kicha Profile picture
3 Jun, 35 tweets, 19 min read
வேதங்கள்:
வேதம், உலகிலேயே முதன்முதலில் தோன்றிய இலக்கியம். இதன் மொழி, சமஸ்கிருதத்திற்கும் தாயான மொழி. எப்படி நம் மதத்திற்கு ஒரு பெயர் இல்லையோ, வேத மொழிக்கும் பெயர் இல்லை எனலாம். இதையே "வேதபாஷை" என்று பிற்காலங்களில் சுட்டுவதற்காக அழைக்கலானார்கள்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
வேதத்தின் காலமும் நிர்ணயம் செய்ய முடியாத ஒன்றே. அனாதியாய் காலம் கடந்து இருப்பது இதன் சிறப்பு.
எவ்வளவு இழுத்துப் பிடித்தாலும் எல்லா ஆராய்ச்சியாளர்களும் வந்து நிற்கும் இடம் கி.மு3000க்கும் மேல் தான்.
இவை யாவும் அனுமானமே அன்றி தீர்மானம் இல்லை.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
வேதம் ஒன்று தான். ஒரு காலத்தில் வேதத்தை முழுமையாக மனனம் செய்ய முடியாத நிலை வந்ததும், ரிஷிகள் யாவரும் ஈஸ்வரனை நோக்கி தவம் செய்ய, யாமே தோன்றி வேதத்தை பிரித்து தருகிறோம் என்று "கிருஷ்ண த்வைபாயணர்" எனும் வியாசராக பிறந்து நமக்கு பகுத்து கொடுத்தார்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
அப்படி பகுக்கப்பட்டதே ரிக், யஜூஸ், சாம, அதர்வண வேதங்கள்.
நான்கும் ஒரே காலத்தில் ஏற்பட்டது தான்.
ரிக் வேத காலம் வேறு, யஜூர் வேத காலம் வேறு என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒரே கவி பாடிய சரித்திரம் அல்ல வேதங்கள்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ரிக் வேதம்: 10 மண்டலங்கள், 85 அனுவாகங்கள்,208 வர்கங்கள் கொண்டது.
அல்லது,
8 அஷ்டகங்கள், 64 அத்யாயங்கள், 17000 சூக்தங்கள் கொண்டது எனலாம்.#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
யஜூர் வேதம்: இது இரண்டு வகைப்படும். க்ருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம்.
சுக்ல யஜுர்வேதமானது 48 அத்தியாயங்களும்,303 அனுவாகங்களும்,1675 மந்திரங்களும் கொண்டது.

க்ருஷ்ண யஜுர்வேதம் 7 காண்டமாகவும், 651 அனுவாகமாகவும் பிரிந்துள்ளது.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
சாம வேதம்: இது ஜைமினி சாகை, கௌதும சாகை என்று இரண்டு விதப்படுகிறது.
1000 சாகைகளும், அதில் 1546 மந்திரங்கள் உள்ளன.
வேதத்திலுள்ள பத்யங்களுக்கு ரிக்குகள் என்று பெயர். சாம வேதத்தில் அந்த ரிக்குகளை இசையுடன் பாடுகின்றனர். ஆதலால் இதை சாம கானம் என்கிறோம்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
அதர்வண வேதம்: இதில் 20 காண்டங்களும், 731 சூக்தங்களும் 5687 மந்திரங்களும் உள்ளன.
ரிக், தேவர்களை துதிக்கும் பாடல்களாகவும், யஜூர்-யாகம் முதலிய கிரியைகளை நடத்தும் முறைகளை சொல்வதாகவும்...
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
சாம வேதம் தேவர்களை கானம் செய்வதாயும், அதர்வண வேதம் மணி, மந்திர, தந்திர, ஔஷதம், அஸ்திர, சஸ்திரம் தயார் செய்யும் முறைகளைப்பற்றி பேசுவதாக இருக்கின்றன.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
வேதங்களை விளக்கி பேசும் வேதபாகங்களுக்கு ப்ராம்ஹணம் என்று பெயர்.

ஐதரேயப்ராம்ஹணம்,சதபத ப்ராம்ஹணம்,தைத்ரீயப்ராம்ஹணம்,சந்தோகப்ராம்ஹணம் என்று வகைப்படுகின்றன.
ப்ராம்ஹணம், உபநிடதங்கள் சேர்த்து வேதங்களுக்கு பொழிப்புரை தந்த வள்ளல் சாயணாச்சாரியர் என்பவர். #அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
உபநிஷத்துக்கள்:
வேதம் கர்மங்களை பற்றி மட்டுமே பேசுகின்றது. வேதத்தின் முடிவான இடம் வேதாந்தம் எனும் உபநிடதங்கள். இதனை வேதத்தின் சிரசு (தலை) என்றும் கொள்ளலாம். அதாவது வேதத்தின் "முடிவான கொள்கை" = உபநிஷத்துக்கள்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
வேதத்தின் முதல் பாகம் கர்ம காண்டம் என்றும், உபநிஷத்துக்களை ஞான காண்டம் என்று அழைக்கிறோம். உபநிடதங்களின் காலமும் வேதகாலமே.
உடல் முன்னே உருவாகி, பின்னர் தலை மட்டும் தனியாய் முளைக்குமா ?
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
அறிவின் அடிப்படையில் உலகம் என்றும், அறிவே கடவுள் என்றும், அந்த அறிவே அகண்டமான ஒரே தத்வம் என உபநிடதங்கள் கூறுவதை யாராலும் மறுக்க முடியாது.
உடலை தான் என்று நினையாமல், ஆத்மாவை தான் என்று அறிந்தால் அமைதி பிறக்கும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ஈஶம், கேனம், கடம், ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், ஐதரேயம், தைத்ரீயம், சாந்தோக்யம்,ப்ரஹதாரண்யகம் என்ற 10 உபநிடதங்களே போதுமானவை. இவை அனைத்துக்குமே உரை செய்த உத்தமர் நம் ஆதி சங்கரராவார். #அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
நாம ரூபமற்ற ஒரே கடவுளை இவை போதிப்பதாலும், சத்யம், அகிம்சை, பிரம்மசர்யம் முதலிய போதுநீதிகளை உபநிடதங்கள் சொல்வதால் இது எந்நாட்டவர்க்கும், எம்மதத்தவருக்கும் சம்மதமானவை. ஷோபென் ஹோவர் போன்றவர்கள் இதை தங்கள் நாட்டினில் பிரச்சாரம் செய்துள்ளனர். ஷாஜகான் கூட பார்சி மொழிப்படுத்தியுள்ளான்.
உலக சம்மதமான உயர்த்த நூல், வேதத்தின் முடிவான, உபநிஷத்துக்கள் என்றால், வேதத்தின் அங்கங்களாக விளங்குவது வேதாககங்கள் எனப்படும் "சாத்திரங்கள்"

இவை சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் என்று 6 வகைப்படும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
சிக்ஷை என்பது எழுத்துக்களையும், ஸ்வரங்களையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என சொல்வது. இதில்,
வியாச சிக்ஷை,நாரத சிக்ஷை, பாணினி சிக்ஷை புகழ் வாய்ந்தது.
கல்பம்: யாகம்,திருமணம், சுப சடங்குகள், மரணம் முதலிய அபரசடங்குகள் எப்படி செய்ய வேண்டும் என சொல்கிறது
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ஆபஸ்தம்பர், போதாயணர், காத்யாயணர், த்ராஹயாயணர், ஆச்வலாயணர், சத்யாஷாடர், வைகாணசர் முதலிய மகரிஷிகள் தர்ம சூத்திரங்களை எழுதிய மஹணீயர்கள்.
இவை யாவும் கல்ப சாஸ்திரங்கள் கீழ் வரும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
வியாகரணம் என்பது இலக்கணமாகும். விபக்தி,திஙந்தபதம்,சுபந்தபதம்,அவ்யயம்,ஸமாஸங்கள் எனப்படும் விதிகளை போதிப்பது வியாகரணமாகும்.
ஐந்தரம்,சாந்தரம்,காசக்ருத்ஸனம்,கௌமாரம்,சாகடாயணம்,ஸாரஸ்வதம்,அபிசலம்,சாகலம்,பாணினீயம் என்று வகை.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
இப்படி 9 வியாகரணங்கள் இருந்தாலும், இவற்றில் பாணினீய வ்யாகரணம் மிகவும் முக்கியம். இதில் இருந்து தான் சம்ஸ்க்ருதம் வடிவம் பெறுகின்றது.

பாணினீய மகரிஷி வகுத்த முறையே சமஸ்கிருதத்தை வேத பாஷையில் இருந்து பேசு மொழியாக மாற்றியது எனலாம்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
நிருக்தம் : மஹரிஷி பாஸ்கர் தந்தது இது.
வேதத்தில் உள்ள சொற்கள் எப்படி ஏற்பட்டன என நிர்ணயம் செய்வது நிருக்தத்தின் லட்சியமாகும்..இது இல்லை என்றால் யாராலும் வேதத்திற்கு அர்த்தம் சொல்ல முடியாது.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
சந்தஸ்: ஸ்லோகங்களின் முறை, எவ்வளவு எழுத்துக்கள் இருக்க வேண்டும் என சொல்வது.
வகை: காயத்ரீ, த்ரிஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி,ஜகதீ,ப்ருஹதீ
இந்த சந்தஸ்களே பிற்காலத்தில் வந்த காவ்யங்களில் உள்ள "meter" க்கு காரணம்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ஜோதிஷம்: வான் நிலைகளை பற்றிய சிறந்த சாஸ்திரம். சூரிய, சந்திரர்களை வைத்து காலத்தை நிர்ணயம் செய்வது.
மழை, கிரகணம், இயற்கை சீற்றம், விளைச்சல், பிறந்த நாள், வாழ்வு, மரணம் பற்றி அறிவிக்கும் இது, கணிதத்தை அடிப்படையாய் கொண்ட ஒரு பேருண்மை,இந்த சாஸ்திரம்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ஸ்ம்ருதி: வேதம் சொன்னா தர்மங்களை சட்டமாக கொண்டு விதிக்கப்பட்ட இந்த சட்ட நூல்களை தர்ம சாஸ்திரமென்பர்.
மனு முதலிய பலர் இதனை எழுதினர்.
மனு,அத்ரி,விஷ்ணு, யாக்யவல்கியர், ஆங்கிரஸ், காத்யாயணர், சாண்டில்யர், கௌதமர்,வியாசர்,தக்ஷன்,யமன், ஹரிதர், சனைசரர்..

#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
...யமன், சம்வர்தகர், பிருஹஸ்பதி, வசிஷ்டர்,சாதாதபர்,பராசரர்,க்ரது,சங்கர்,விகிதர்,நாரதர் முதலியோர் ஸ்ம்ருதிகளை செய்தவர்கள். ஸ்ம்ருதிகளை ஆராய்ந்து, முரண் நீக்கி ஒற்றுமைபடுத்தி எழுதியதே நம் தர்ம சாஸ்திரங்கள் எனப்படும்.
இப்படி தர்மஸிந்து,நிர்நயஸிந்து,ஸ்ம்ருதிமுக்தாபலம் என பல உள்ளது
ஆகமங்கள்:
சைவகாமம், வைஷ்ணவ ஆகமங்கள் என்ற இரு வகையில்,
பாத்மசம்ஹிதை,பௌஷ்கர சம்ஹிதை,அஹிர்புத்ன்ய சம்ஹிதை,பரமேச்வர சம்ஹிதை,நாரத சம்ஹிதை,அத்ரி சம்ஹிதை,லக்ஷ்மி தந்த்ரம், மரிசிகள்பகம் என 100+ உள்ளன.
வைஷ்ணவ ஆகமம் பஞ்சராத்ரம், வைகாணசம் என இருவகைப்படும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
ஆலயம் அமைக்கப்படும் முறை,கிராமங்கள், நகரங்கள் அமைக்கப்படும் முறை, கோபுரம், தெய்வ சிலைகள், சிற்பம், பதுமை,வர்ணகளாபம்(paintings), பிரதிஷ்டை, இப்படி பல அமைக்கும் முறைகளை பற்றி விரிவாக பேசுவது ஆகமங்கள்.
உப வேதங்கள் :
ரிக் வேதத்திற்க்கு ஆயுர்வேதம்(மெடிகல்), யஜூர்க்கு ஸ்தாபத்யம்(சில்ப சாஸ்திரம்), சாமத்திற்கு காந்தர்வம்(classical music), அதர்வண வேதத்திற்க்கு தநுர்வேதம்(போர்முறை) என்ற நான்கும் உபவேதங்கள் உள்ளன.

#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
இதிகாசம்: இதன் "இவ்வாறு நடந்த வரலாறு"
இராமாயண, மகாபாரத இந்நாட்டின் இரு கண்கள்.

#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
புராணம்: 18
பிரம்ம புராணம்,பத்ம புராணம்,விஷ்ணு புராணம்,சிவ,லிங்க,கருட புராணம்,நாரத புராணம்,பாகவத புராணம்,அக்னி புராணம், ஸ்காந்த புராணம், பவிஷ்யபுராணம்,
பிரம்மவைவர்த்த புராணம்,மார்க்கண்டேய,வாமன,வராக புராணம்,மச்ச,கூர்ம,
பிரம்மாண்டபுராணம்
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
தர்ஷன கிரந்தங்கள்:
ஸாங்க்யம்,யோகம், ந்யாயம், மீமாம்ஸா, ஆர்ஹதம்,சௌகதம் என்ற 6 முக்கிய வகைகளும், லோகாயதம், நாஸ்திகம் என்ற இரண்டும் சேர்த்து 8 வகைப்படும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
சித்தாந்தம்:
வேதாந்ததர்சனத்திர்க்கு ஏற்பட்ட பாஷயங்களுக்கே சித்தாந்தம் என்று பெயர்.
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம் என்று வகைகள்.

இவைகளை ஏற்படுத்தியவர்கள் முறையே ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், வல்லபர், கிருஷ்ணசைதன்யர் என்ற ஆச்சார்யர்கள் ஆவர்.
இது தவிர கவிகள் பிற்காலத்தில் புனைந்த இலக்கிய படைப்புக்களை காவியங்கள் எனப்படும்.
#அத்யாத்மபாரதம்
#ஆன்மீகஇந்தியா
Just for a light read. ;) Tried to simolify and record the basics what we were discussing in last few days.

Will try to elaborate on topics if needed if time permits with Guru and eshwara krupai.
Ram Ram

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kicha

Kicha Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(