இந்த த்ரெட்ல நாம தமிழ்ல வெளிவந்த சிறந்த இந்திய வெப் சீரிஸ் மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ் பத்தி தான் பாக்க போறோம். இதுல ஆல்ரெடி நீங்க பாத்ததும் இருக்கலாம், அது பாக்காதவங்களுக்கு உதவும் அதுனால அதையும் சேர்த்துருக்கேன். பொதுவாக இணைய தொடர்களுக்கு சென்சார் கிடையாது என்பதால்
தகாத வார்த்தைகள் பேசுவது, ஆபாச காட்சிகள் வைப்பது போன்றவைகள் இடம்பெறும், ஆதலால் இந்த மாதிரியான இணைய தொடர்களை தனியாக பார்ப்பது உங்களுக்கு நல்லது. கீழே வரும் தொடர்களை பழையது முதல் புதியது வரை வருட வாரியாக வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
Zee5 இல் இடம்பெறும் தொடர்களின் காட்சியமைப்பு Netflix, Prime Video, hotstar, Sonyliv களில் வருவது போல இருக்காது. சாதாரண டிவி தொடர் காண்பது போல தான் இருக்கும், ஆனால் கதைகள் நன்றாக இருக்கும்.
1. #FearTheWalkingDead (2015 - )(IMDB : 6.9)

எழுத்தின் பற்றாக்குறை காரணமாக இத்தொடர் பற்றிய சிறிய விமர்சனத்தை கீழே இருக்கும் முதல் புகைப்படத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்த புகைப்படம் இத்தொடரின் முதல் சீசனிலிருந்து ஐந்தாம் சீசன் வரையிலான போஸ்ட்டரை வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
2. #IntoTheBadlands (2015 - 2019)(IMDB : 8)

ஒரு வலிமைமிக்க போர்வீரனும் ஒரு சிறுவனும் நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டாளர்களால் கட்டுப்படுதப்படும் இரக்கமற்ற பிரதேசத்தில் அறிவொளியை தேடுகிறார்கள் அதையெல்லாம் மீறி அவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பதை ஆக்சன் அட்வெஞ்சராக தந்திருக்கிறார்கள்
3. #TheShannaraChronicles (2016 - 2017)(IMDB:7.2)

நாகரிகத்தின் அழிவுக்கு பிறகு, மூன்று இளம் ஹீரோக்கள் பூமியை காப்பாற்ற கடைசி நம்பிக்கையாக மாறுகிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் வரும் தடைகளை மீறி எவ்வாறு மீட்க்கின்றனர் என்பதை அட்வெஞ்சர் பேண்டஸி டிராமாவாக தந்திருக்கிறார்கள்
4. #MoneyHeist (2017 - )(IMDB:8.3)

புரோபெஸர் தலைமையிலான கொள்ளை குழு ராயல் மிண்ட் ஆப் ஸ்பெயினை முற்றுகையிட்டு உள்ளே இருப்பவர்களை பிணை கைதியாக்கி கொள்ளையடிக்க, மறுபுறம் வெளியே போலீஸ் படை சுற்றி வளைக்கிறது. அதன் பின் நடப்பதை ஆக்சன் மிஸ்டரி த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
5. #AsIAmSufferingFromKadhal (2017)(IMDB : 7.8)

நகர்ப்புற சென்னையில் இருக்கும் நான்கு தம்பதிகளின் வாழ்க்கையில் நடைபெறும் விருப்பு, வெறுப்பு, நவீனகால அன்பின் வெளிப்பாட்டை ரொமான்ஸ் காமெடியாக ரசிக்கும் படி தந்திருக்கிறார்கள்.
6. #InsideEdge (2017)(IMDB:8)

பொதுவா நாம கண்ணுக்கு முன்னாடி நடக்குற கேம மட்டும் தான் பாப்போம், ஆனா அந்த கேம ஆட வைக்க அதுக்கு பின்னாடி நமக்கே தெரியாம ஒரு கேம் நடக்கும் அதுக்கு பேர்தான் பெட்டிங். அது எப்படி எல்லாம் நடக்குது அதுக்குள்ள இருக்க அரசியல் என்னனு தெளிவா காட்டிருப்பாங்க.
7. #Breathe (2018)(IMDB : 8.3)

இறக்கும் தனது மகன் ஜோஷுவை காப்பாற்ற, கொலை பண்ற லெவலுக்கு போறாரு டேனி. அந்த கொலைய கண்டுபிடிக்க குற்றப்பிரிவு அதிகாரி கபீர் வர்றாரு. டேனி ஏன் அந்த கொலைகளை பண்றாரு? கபீர் அந்த கொலைய கண்டுபுடிச்சாரா? என்பதை த்ரில்லிங்கா கொண்டுபோயிருப்பாங்க.
8. #AmericaMappillai (2018)(IMDB : 7.2)

தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள சொல்லும் அப்பாவிடம் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி நடிக்கிறார் கணேஷ், அதன் பின் என்ன ஆனது என்பதை காமெடி டிராமாவாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
9. #KarenjitKaurTheUntoldStoryofSunnyLeone (2018 - 2019)(IMDB : 7.4)

சன்னி லியோனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உண்மையை தழுவி எடுக்கப்பட்ட இந்த தொடரில், அவர் எப்படி நீலப்பட நடிகையானார்? அதற்கு என்ன காரணம்? என்பதை ரொமான்ஸ் பயோகிராபி டிராமாவாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
10. #Kallachirippu (2018)(IMDB:7.7)

24 வயதான மகதி கட்டாய திருமணத்திற்கு தள்ளப்பட, ஒரு கட்டத்தில் தன் கணவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிய, அப்போது ஏற்படும் பிரச்சனையில் தற்செயலாக கணவரை தற்காப்புக்காக கொலை செய்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்
11. #Ghoul (2018)(IMDB:7.1)

மிகவும் பயங்கரவாதியான அலி சயீத்தை விசாரிக்க நியமிக்கபடுகிறார், நிடா ரஹீம். விசாரணையில் அலி சயீத் இந்த உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஒரு அமானுஷ்ய விசயத்தை செய்கிறார் என தெரியவர. அதன் பின் என்ன ஆனது? என்பதை ஹாரார் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
12. #Mirzapur (2018 - 2020)(IMDB:8.4)

இந்தியால இப்டி ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான சீரிஸ் பாத்துருக மாட்டீங்க, பக்கா கேங்ஸ்டர் கதை. கதையும், கதாபாத்திரமும், இசையும், வடிவமைபும் அவ்ளோ கச்சிதமா பொருந்திருக்கும். இதுக்கு அப்றம் கண்டிபா உங்க பேவரைட் WSL இது கண்டிப்பாக இருக்கும்
13. #VellaRaja (2018)(IMDB : 7.2)

நம்ம லோகேஷ் கனகராஜ் மற்றும் இரு இயக்குனர்கள் எழுதுன கதை தான் இந்த வெல்ல ராஜா. நாலு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது என்ன ஆகிறது என்பதை ஆக்சன், க்ரைம், த்ரில்லராக நகர்த்தியிருப்பார்கள்.
14. #WhatsupVelakkari (2018)(IMDB : 6.9)

நட்ராஜின் வீட்டு வேலை செய்யும் நவீன வேலைக்காரியான ஜெஸ்ஸி, சாதாரண வேலைக்காரியாக மட்டுமில்லாமல் தோழியாகவும் நட்ராஜின் வாழ்வில் இருக்கிறார். அவர் காதலுக்கும் உதவியாக இருக்கிறார், அதன் பின் என்ன ஆனது என்பதை காமெடி டிராமாவாக தந்திருக்கிறார்கள்
15. #EkkadikiEeParugu (2019)(IMDB:7.8)

ஓய்வு பெறவிருகும் ஒரு இன்ஸ்பெக்டரிடம் தன் மனைவியை காணவில்லை என புகார் அளிக்கிறார் ஆனந்த், காணாமல் போன அந்த பெண்ணின் வழக்கை விசாரிக்கையில் அதன் பின்னே உள்ள மர்மத்தை காண்கிறார். அது என்ன என்பதை ஆக்சன் டிராமாவாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
16. #Mitta (2019)

என்னடா ரேட்டிங்கே இல்ல இதை எதுக்குடா பாக்குறதுனு நெனைக்க வேண்டாம், இது அதிகமா ரீச் ஆகல அதான் ரேட்டிங் கொடுக்கல.
போதை பொருளுக்கு அடிமையான ஒரு நண்பர்கள் குழு, தங்களை வெவ்வேறு பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள். அது என்ன என்பதை காமெடி டிராமாவாக தந்திருக்கிறார்கள்.
17. #FourMoreShotsPlease (2019 - 2020)(IMDB:6.5)

நவீன கால இந்தியாவில் காதல், வேலை-வாழ்க்கை மோதல்கள், லட்சியங்கள் மற்றும் கவலைகளை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு பெண் நண்பர்கள் எப்படி கையாள்கின்றனர். என்பதை ரொமான்ஸ் காமெடி டிராமாவாக தந்திருக்கிறார்கள். S1 ரசிக்கும்படி இருந்தது.
18. #TheFinalCall (2019)(IMDB:7.3)

ஓர் பைலட் அதிகாரி தனது வாழ்க்கையை முடிக்க தற்கொலை செய்ய, 300பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறார். ATS குழுவுடன் விமான அதிகாரி கிரண் மிர்சாவும் பயணிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கின்றனர். அதன் பின் என்ன ஆனது என்பதை த்ரில்லராக தந்திருக்கிறார்கள்
19. #MadeInHeaven (2019)(IMDB:8.3)

தாரா மற்றும் கரண் இருவரும் இணைந்து சொந்தமாக வெட்டிங் பிளானிங் நடத்திட்டு வர்றாங்க. அவங்க நடத்துற திருமணங்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் வரும் பிரைச்சனைகளை எப்டி எதிர்கொண்டு இதை நடத்துறாங்கன்றத, ரொமான்ஸ் டிராமாவா நல்லா ரசிக்கும்படி காட்டிருப்பாங்க
20. #DelhiCrime (2019)(IMDB : 8.5)

தெற்கு டெல்லியில் உள்ள முனீர்காவின் சுற்றுப்புறத்தில் நடந்த 2012 டெல்லி பாலியல் பலாத்கார வழக்கை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை எவ்வாறு பிடிக்கின்றனர்? என்பதை க்ரைம் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
21. #CriminalJustice (2019)(IMDB:8.1)

செய்யாத கொலையில் மாட்டிக்கொள்ளும் ஆதித்யாவிற்கு சாதகமாகவே ஆதாரங்கள் அமைகின்றன, அவருக்கு வாதாட அரசு தரப்பில் ஒரு டொக்கு வக்கீல் வைக்க, அதன்பின் அவர் என்னாகிறார். எப்படி வெளிய வருகிறார் என்பதை மிஸ்டரி த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
22. #AutoShankar (2019)(IMDB : 6.9)

1985 - 1995 க்கு இடையில் சென்னையை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்கையைப் பற்றி, பயங்கரமான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர். அவர் செய்த குற்றம் என்ன என்பதை க்ரைம் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருப்பார்கள்.
23. #CityOfDreams (2019(IMDB : 7.1)

மும்பையின் முக்கிய அரசியல் பிரமுகரான கெய்க்வாட் மீது படு கொலை நடத்தப்படுகிறது, யார் அதை செய்தார்கள்? அதன் பின் அந்த கட்சி என்ன ஆனது? என்பதை அரசியல் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
24. #Hostages (2019 - 2021)(IMDB:6.9)

Dr.மீரா குடும்பத்தினரை பிணை கைதிகளாக்கி, அறுவை சிகிச்சைக்கு வரும் முதலமைச்சரை கொலை செய்ய சொல்லி உத்தரவு கொடுக்கிறது ஒரு கும்பல். குடும்பத்தை காக்க CMஐ கொலை செய்தாரா? அந்த கும்பல்யார்? என்பதை மிஸ்டரி த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
25. #Postman (2019(IMDB:6.9)

23 வருடங்களுக்கு முன்பு கோமாவில் இருந்த போஸ்ட்மேன் ராஜா அதன்பின் குணமாகிவிட. அன்று வழங்கப்படாத அந்த கடிதங்களைப் பற்றி நினைவில் வைத்த கொண்டு, அவற்றை வழங்குவதற்காக தன் மகளுடன் செல்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்
26. #TheBoys (2019 - 2020)(IMDB:8.7)

கடவுளாக மதிக்கப்படும் சூப்பர் ஹீரோக்கள் தங்கள் அதிகாரங்களை முரட்டுதனமாக துஷ்பிரயோகம் செய்ய தொடங்கும்போது என்ன நடகும்? அவர்களை எதிர்க்க சாதாரண மனிதர்கள் துணியும்போது என்ன நடக்கிறது? என்பதை Sci-fi, ஆக்சன், த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்
27. #Fingertip (2019)(IMDB : 8)

இணைய உலகில் பயன்பாடுகளின் அழிவு சக்தியை வினோதமாக நினைவூட்டும் இந்த தொடர் நான்கு வெவ்வேறு கதைகளை ஒரே இடத்தில் கொண்டு செல்கிறது, அதன் பின் என்ன ஆனது என்பதை த்ரில்லர் டிராமாவாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
28. #NOS4A2 (2019)(IMDB:6.7)

சாதாரண பெண்ணாக இருகும் விக் மெக்வீன், இழந்த பொருட்களை கண்டுபிடிக்கும் இயற்கைகு அப்பாற்பட்ட திறனை கொண்டிருபதை கண்டுபிடிகிறார். இந்த திறன் அவளை தீய அழியாத சக்தி கொண்ட சார்லி மேங்ஸுடன் மோத வைகிறது. அதன் பின் நடப்பதை ஹாரார் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்.
29. #TheFamilyMan (2019)(IMDB:8.7)

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஶ்ரீ காந்த் திவாரி தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர், நாட்டை தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கவும், குடும்பத்தை தனது ரகசிய வேலையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணுகிறார். ஆக்சன் டிராமாவாக ரசிக்கும்படி இருக்கிறது
30. #BardOfBlood (2019)(IMDB:6.9)

பலூசிஸ்தானில் ஒரு பேரழிவுகரமான வேலைக்கு பல வருடங்கள் கழித்து, ஒரு முன்னாள் இந்திய உளவாளி, ஒரு திட்டமிடப்படாத பணயக்கைதிகள்-மீட்பு பணிக்கு தலைமை தாங்க திரும்பும்போது தனது கடந்த காலத்தை எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆக்சன் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்.
31. #IruDhuruvam (2019)(IMDB:8.4)

திருக்குறளின் அடிப்படையில் தொடர் கொலைகள் நடைபெற, அந்த வழக்கை விசாரிக இன்ஸ்பெக்டர் விக்டர் நியமிக்கப்படுகிறார். அவர் வழக்கை தீர்க்க தொடங்கயில், அது பெருகிய முறையில் தனிபட்டதாகிறது. அதன்பின் நடப்பதை க்ரைம்த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
32. #Nisha (2019)(IMDB:5)

நிஷா, ரியா, மற்றும் கீர்த்தி ஆகியோரைக் கடத்தி, அவர்களை ஒரு மறைவிடத்தில் பிணைக் கைதியாக்கியிருக்கிறான் ஆதி. அவனிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, ஒருவர் மரணத்திற்கு ஆளாக. மற்ற இருவரும் உயிருடன் வெளியேறினார்களா? என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்.
33. #PoliceDiary2Point0 (2019)(IMDB:7.2)

தமிழகத்தை நடந்த கொடூரமான குற்றங்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில், குற்றங்களை கண்டறிந்து விசாரிக்க 2 சிறப்பு பணிகுழு இருக்கிறது. அது என்ன குற்றங்கள் அதை எப்படி சரிசெய்தார்கள் என்பதை ஆக்சன் டிராமாவாக தந்திருக்கிறார்கள்.
34. #InsideEdgeSeason2 (2019)(IMDB:7.8)

முதல் சீசனில் ஒரே டீமில் ராகவன் மற்றும் அர்விந்த் இருவரும் பிரிய, அர்விந்த் ஹரியானா அணியில் கேப்டனாகிறார். ஜரீனாமாலிக் பைசாப் உடன் கூட்டணி வைக்க, நிழல்களில் இருப்பவர்கள் அவர்கள் கட்டுபடுத்த முற்படும் விளையாட்டை அழிக்க அச்சுறுத்துகிறார்கள்
35. #Queen (2019)(IMDB:8.9)

மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடரில், அவர்களின் சினிமா, அரசியல் மற்றும் குடும்ப நிகழ்வுகளை பற்றி நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் ரசிக்கும்படி வரலாற்று பயோகிராபி டிராமாவாக தந்திருக்கிறார்கள்
36. #CodeM (2020)(IMDB : 7.3)

இந்திய இராணுவ வழக்கறிஞர் மோனிகா, அவர் ஒரு இராணுவ சந்திப்பு வழக்கின் விசாரணையின் போது ஒரு சதித்திட்டத்தை கண்டுபிடிக்கிறார். அது என்ன சதித்திட்டம்? அதை எப்படி வெளிக்கொண்டு வருகிறார்? என்பதை மிஸ்டரி த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
37. #TheForgottenArmyAzaadiKeliye (2020)(IMDB:8)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஆண்-பெண் என இருபாலரும் அடங்கிய, மறக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவ குழுவைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த வரலாற்று போர் தொடர், நாம் ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
38. #BaghdadCentral (2020)(IMDB:7.3)

சதாம் உசேனின் வீழ்ச்சியை தொடர்து, முன்னாள் இன்ஸ்பெக்டர் முஹ்சின் எல்லாவற்றையும் இழக. காணாமல்போன மகளை கண்டுபிடிகும் முயற்சியின்போது, அமெரிக போலீஸாரால் தவறாக கைது செய்து சித்திரவதை செய்யபட, அதன் பின் நடப்பதை க்ரைம் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்
39. #Afsos (2020)(IMDB : 7.6)

பல தோல்வியுற்ற தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு, தனது சொந்த மரணத்திற்கு பணம் செலுத்துகிறார் நகுல். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை டார்க் காமெடி த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
40. #Topless (2020)(IMDB:7.3)

கான் கலைஞர்கள், பிரிடிஷ் தொல்பொருள் ஆய்வாளர் & உள்ளூர் அரசியல்வாதி ஆகியோர் தங்கள் வாழ்க்கையை ஒரு பழங்கால ஓவியத்தால் பின்னி பிணைந்திருபதை காண்கிறார்கள், அது சபிக்கபட்டதாக நம்பபடுகிறது. அதுஎன்ன ஓவியம்? என்பதை டார்க் காமெடி டிராமாவாக தந்திருக்கிறார்கள்
41. #Kannamoochi (2020)(IMDB : 6.4)

பிரியா தனது காது கேளாத மற்றும் ஊமை மகள் ஐஷுவுடன் சென்னையில் புதிதாக குடியேருகிறார். திடீரென ஒரு நாள் மகள் காணாமல் போக, அதை தேடும் பணியில் இறங்கும்போது பல மர்மங்கள் தெறிய வருகிறது. அது என்ன மர்மம்? என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்.
42. #She (2020)(IMDB:6.5)

ஒரு பெரிய போதைப்பொருள் டானை எதிர்த்துப் போராட, போதைப்பொருள் தடுப்பு குழுவில் சேர்க்கப்படுகிறார் கான்ஸ்டபிள் பூமிகா. இதற்காக அவர் ஒரு விலைமாதுவாக மாறி மும்பை நகரில் இரவு நேரத்தில் நிற்கிறார், அதன் பின் என்ன ஆனது என்பதை க்ரைம் ட்ரமாவாக தந்திருக்கிறார்கள்.
43. #Mastram (2020)(IMDB:7.3)

எழுத்தாளராக வேண்டும் என்ற கனவோடு கதைஎழுதி பதிப்பகதிற்கு செல்லும் ராமிடம், அவன் படைப்பை நிராகரித்து ஆபாச கதைகள் எழுதசொல்லி சொல்கிறார் பதிபாளர், அதை மறுத்து ஏமாற்றதோடு திரும்பும் ராம். அதன்பின் என்ன செய்தான் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
44. #Paatallok (2020)(IMDB:7.8)

பத்திரிக்கையாளரை கொலை செய்யும் முயற்சியில், ஒரு டொக்கு ஆய்வாளரால் நான்கு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இது அவரை பாதாள உலகத்தின் இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. அது என்ன ஏன் என்பதை க்ரைம் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருப்பார்கள்.
45. #High (2020)(IMDB : 9)

போதைக்கு அடிமையான சிவ் சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தை நாடுகிறார். ஆனால் அங்கு மருத்துவர்கள் விசேஷமான மாத்திரை ஒன்றை உருவாக்குகிறார்கள், அது என்ன மாத்திரை? அதிலிருந்து சிவ் மீண்டாறா? என்பதை க்ரைம் த்ரில்லராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
46. #BreatheIntoTheShadows (2020)(IMDB:7.7)

Dr.அவினாஷின் மகள் முகமூடி அணிந்த ஒருவனால் கடத்தப்பட, தனது மகளைத் திரும்ப பெறுவதற்காக அவினாஷ் ஒருவனை கொல்ல வேண்டும் என கடத்தல்காரன் கோருகிறான். அவன் சொன்னது போல் செய்தாரா? ஏன் அப்படி சொன்னான் என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருகிறார்கள்
47. #SpecialOPS (2020)(IMDB:8.6)

19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பார்லிமென்ட் அட்டாக்கில் ஈடுபட்ட தீவிரவாத குழுவின் தலைவனை பிடிக்க, ஹிம்மத் சிங் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு உலகின் பல்வேறு நகரங்களில் இருக்கிறது. அந்த தலைவனை பிடித்தார்களா? என்பதை க்ரைம் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்
48. #Mafia (2020)(IMDB:7.7)

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் கல்லூரி நண்பர்கள் வாழ்வில், திடீரென திடுக்கிடும் சம்பங்கள் நடைபெற ஒவ்வொருவராக இறக்கின்றனர். அது கடந்தகால நிகழ்வை நினைவுகூறுகிறது, அது என்ன நிகழ்வு? ஏன் அப்படி நடக்கிறது? என்பதை த்ரில்லர் டிராமாவாக தந்திருக்கிறார்கள்
49. #Aashram (2020)(IMDB:7.7)

பாபா நிரலா என்று அழைக்கபடும் போதகர். கற்பழிப்பு, கொலைகள், போதைபொருள், கட்டாய ஆண் விலகல், வாக்கு வங்கி அரசியல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார். காவல்துறை ஆதாரங்களை கண்டுபிடித்து எதையும் நிரூபிக்குமா என்பதை மிஸ்டரி க்ரைம் த்ரில்லராக தந்திருக்கிறார்கள்
50. #jl50 (2020)(IMDB : 7.6)

வெஸ்ட் பெங்காளில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது, விசாரணையில் அது 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது என தெரிகிறது. அதில் உயிர் பிழைத்த இருவரும் காணாமல் போன அதே வயதில் இருக்கிறார்கள். அது எப்படி? என்ன? என்பதை Sci-fi த்ரில்லராக தந்திருக்கிறார்கள்.
51. #Scam1992 (2020)(IMDB:9.5)

1992ல் மும்பையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிபடையாக கொண்டு எடுகப்பட்ட இத்தொடர், ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை பற்றியும், அவர் பங்கு சந்தையில் பெற்ற வளர்சி, அவர் செய்த ஊழல் பற்றியும் விவரிகிறது. பயோபிக் க்ரைம் டிராமாவாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
52. #Mukilan (2020)(IMDB:6.6)

1970களில் காஞ்சிபுரத்தின் மிகவும் பயங்கரமான கேங்ஸ்டர்களில் ஒருவரான முகிலனின் எழுச்சிக்கு வழிவகுத்த சமூகஅரசியல் நிகழ்வுகளை பற்றிகூறும் இத்தொடர். அவர் எப்படி கேங்ஸ்டர் ஆனார்? அதன்பின் அவர் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை ஆக்சன் டிராமாவாக தந்திருக்கிறார்கள்
53. #Triples (2020)(IMDB : 7.2)

வாழ்க்கையில் தங்களின் வணிகத்தை அழிக்க அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையை சமாளிக்க மூன்று நண்பர்கள் கோவாவுக்கு புறப்படுகின்றனர். அந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை ரொமான்ஸ் காமெடியாக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
54. #CriminalJusticeBehindClosedDoors (2020)(IMDB : 7.5)

அனுராதா சந்திரா தனது பரிபூரண வக்கீல் கணவரை கொலை செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளகிறார். அவர் ஏன் கொலை செய்தார்? அதன் பின் அவர் என்ன ஆனார்? என்பதை பெண்ணியம் பேசும் லீகல் க்ரைம் த்ரில்லராக, ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.
55. #1962TheWarInTheHills (2021)(IMDB:6.2)

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடர் 1962ல் 3000 சீன வீரர்களை எதிர்த்து போராடிய, மேஜர் சூரஜ் சிங் தலைமையிலான 124 வீரர்களை கொண்ட 'சி கம்பெனி'யை பற்றி பேசுகிறது, வரலாற்று போர் தொடராக ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்
சமீபத்தில் வெளியான LiveTelecast, November Story தொடர்களை பற்றி நிறைய விமர்சனம் பார்த்திருப்பீர்கள் ஆதலால் அவை இதில் இடம்பெறவில்லை. இந்த த்ரெட் உருவாக காரணமாக இருந்த நண்பர்களுக்கு நன்றி.

@TamilColor @iam_6kannan @Tamilse10489195 @Miracle07503041 @vigneshduraiR @Dini91130050

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டோனி ஸ்டார்க்™😷ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ

டோனி ஸ்டார்க்™😷ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(